தோல் பராமரிப்பு குறிப்புகள்: தங்கள் முகத்தில் கறைகளோ மருக்களோ இருப்பதை நம்மில் பலர் விரும்புவதில்லை. ஆனால், சில சமயம் சில விஷயங்களை நம்மால் கட்டுப்படுத்த முடிவதில்லை. அவற்றில் ஒன்றுதான் மருக்கள். நாம் இவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், இவை நமது முகத்தின் அடையாளமாகவே மாறத் தொடங்குகின்றன. இவற்றினால் பல சமயம் நாம் நமது நம்பிக்கையையும் இழக்கிறோம். எனினும், சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் நாம் மரு பிரச்சனைக்கு எளிதாக தீர்வு காணலாம். இந்த வீட்டு வைத்தியங்கள் மூலம் நமது முகத்தில் உள்ள தேவையில்லாத மருக்களை மிக எளிதாக நிரந்தரமாக அகற்றலாம். மருக்களை அகற்ற பலவித வீட்டு வைத்தியங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், இவை நிச்சயம் பலன் அளிக்கக்கூடிய வீட்டு வைத்தியங்கள் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பேக்கிங் சோடா மற்றும் ஆமணக்கு எண்ணெய்


ஒரு ஸ்பூன் ஆமணக்கு எண்ணெயில் ஒரு ஸ்பூன் சோடாவை கலந்து, மருக்கள் உள்ள இடத்தில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விடவும். காலையில் சுத்தம் செய்யுங்கள். இப்படி பல நாட்கள் செய்து வந்தால் மருக்கள் மறையும். 


மேலும் படிக்க | எலும்புகளை வலுப்படுத்த உதவும் டாப் உணவுகள் இவைதான்


அன்னாசி பழச்சாறு


அன்னாசி பழச்சாற்றை பஞ்சு கொண்டு மருவின் மீது தடவி அதன் மீது ஒரு துணி கொண்டு கட்டவும். சில மணி நேரம் கழித்து அதை அகற்றி தண்ணீரில் கழுவவும். தொடர்ந்து இப்படி செய்து வந்தால், மருக்கள் தானே மறைந்துவிடும்.


வெங்காய விழுது


ஒரு வெங்காயத்தை நன்றாக பேஸ்ட் செய்து மருக்கள் உள்ள இடத்தில் தடவவும். சிறிது நேரம் கழித்து அதை தண்ணீரில் கழுவவும். இதை ஒரு வாரம் தொடர்ந்து செய்யவும். நீங்கள் விரும்பினால், வெங்காய விழுதில் வினிகர் அல்லது உப்பு சேர்க்கலாம்.


வாழைப்பழத் தோல்


மருக்களை நீக்க வாழைப்பழத் தோலைப் பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு வாழைப்பழத் தோலைத் தடவி ஒரு துணியால் கட்டவும். சிறிது நேரம் கழித்து வாழைப்பழத் தோலை அகற்றவும். இதை தொடர்ந்து செய்யுங்கள். சிறிது நேரம் கழித்து மருக்கள் உதிர்ந்து காணப்படும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் இந்த 5 விஷயங்களில் இருந்து விலகி இருக்கவும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ