நமக்கு வயதாகும்போது, நமது உடல்கள் குறிப்பாக நமது எலும்புகள் தேய்மானம் அடைகின்றன. இந்த தேய்மானம் நமது இயக்கத்தையும் ஆரோக்கியத்தையும் குறைக்கிறது. இந்த தேய்மானம் ஒரு இயற்கையான செயலாகும். இதனை கண்டிப்பாக தடுக்க முடியாது. இருப்பினும், சரியான கவனிப்பு நமது எலும்புகள் மற்றும் தசைகளின் சிதைவைக் குறைக்கலாம். நமது எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். போதுமான கால்சியம் உட்கொள்வது நமது எலும்புகள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்கிறது. இந்த பதிவில், நீங்கள் நடுத்தர வயதை அடையும் போது உங்கள் எலும்புகளின் சிறந்த ஆரோக்கியத்தை உறுதி செய்யும் பல்வேறு கால்சியம் நிறைந்த உணவுகளை பற்றி காணலாம்.
நடுத்தர வயதில் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கால்சியம் நிறைந்த உணவுகள்:
1. சோயாபீன்ஸ்
நீங்கள் சைவ உணவு உண்பவராகவும், உணவில் கவனம் செலுத்துபவராகவும் இருந்தால், உங்கள் கால்சியம் தேவைகளைப் பூர்த்தி செய்ய சோயா ஒரு புத்திசாலித்தனமான மாற்றாக இருக்கும். சோயாவில் கொலஸ்ட்ரால் இல்லை, இதில் கிளூடனும் இல்லை. சோயாவில் வைட்டமின் டி அதிக அளவில் உள்ளது. இவற்றில் கால்சியமும் அதிகம் உள்ளது.
2. பச்சை காய்கறிகள்
பச்சைக் காய்கறிகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இவற்றில் கீரை, முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி, காலிஃபிளவர் போன்றவை அடங்கும். பச்சைக் காய்கறிகள் தாவர அடிப்படையிலான உணவு உண்பவர்களுக்கு கால்சியத்தின் சிறந்த மூலமாகும்.
3. பால் பொருட்கள்
பால் பொருட்கள் புரதம் மற்றும் கால்சியத்தின் பிரபலமான ஆதாரமாகும். குறிப்பாக பால் மற்றும் தயிர் போன்ற பால் பொருட்கள் நம் உடலில், குறிப்பாக நமது எலும்புகளுக்கு நன்மை பயக்கும். பாலாடைக்கட்டி கால்சியத்தின் மற்றொரு சிறந்த மூலமாகும். பெரும்பாலான பால் பொருட்களை பல்வேறு வழிகளில் தயாரித்து உட்கொள்ளலாம். அவை உங்கள் தினசரி உணவில் ஊட்டத்தின் சிறந்த மூலமாக இருக்கும்.
4. கொழுப்புள்ள மீன்
சால்மன் மற்றும் டுனா போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் கால்சியம், வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் நமது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் நமது இயக்கத்தை மேம்படுத்துவதற்கும் அறியப்படுகின்றன. கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளன. இது பல ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
மேலும் படிக்க | Osteoporosis:எலும்புகளின் கால்ஷியத்தை உறிஞ்சும் ‘சில’ உணவுகள்!
5. பாதாம்
பொதுவாக நட்சுகளில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பாதாம் புரதம் மற்றும் கால்சியத்தின் சிறந்த மூலமாகும். இது நமது எலும்புகள், தசைகள் மற்றும் மூட்டுகளின் சிறந்த ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. பாதாம் பால், பாதாம் வெண்ணெய் மற்றும் பல வழிகளில் பாதாம் பருப்புகளை உட்கொள்ளலாம்.
6. முட்டை
முட்டையில் புரதம், கால்சியம் மற்றும் வைட்டமின் டி உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இந்த சத்துக்கள் அனைத்தும் நமது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. இருப்பினும், போதுமான ஊட்டச்சத்துக்களைப் பிரித்தெடுப்பதை உறுதிசெய்ய, முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் உட்கொள்ளாமல் முழு முட்டைகளையும் உட்கொள்வதை உறுதிசெய்யவும்.
7. விதைகள்
சியா விதைகள், பாப்பி விதைகள் மற்றும் செலரி போன்ற இந்த சிறிய, ஊட்டச்சத்து அடர்த்தியான உணவுகளில் கால்சியம் அதிகமாக உள்ளது. கூடுதலாக, இது உங்கள் எலும்புகள் மற்றும் பொது ஆரோக்கியத்திற்கு நல்லது. சியா விதைகளில் உள்ள போரான் என்ற தாது எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இது உடலின் பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் கால்சியம் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.
8. பருப்பு வகைகள்
பருப்பு வகைகளில் பல்வேறு பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் உள்ளன. பீன்ஸ் மற்றும் பருப்புகளில் நார்ச்சத்து, புரதம் மற்றும் பிற தாதுக்கள் அதிகமாக இருக்கின்றன. சில பருப்புகள் கால்சியத்தின் சிறந்த ஆதாரங்களாக உள்ளன. சோயாபீன்ஸ், பச்சை பீன்ஸ், சிவப்பு தினை மற்றும் பட்டாணி பருப்புகளில் போதுமான கால்சியம் இருப்பதால், உங்கள் தினசரி கால்சியம் தேவைகளுக்கு இவற்றை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் உங்கள் எலும்புகள் எப்போதும் வலுவாக இருக்கும். வலிமையான எலும்புகள் இருந்தால் காயங்கள் மற்றும் பிற எலும்பு தொடர்பான நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக்குறைவாகும்.
மேலும் படிக்க | சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் இந்த 5 விஷயங்களில் இருந்து விலகி இருக்கவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ