Weight Loss: வெங்காயத்தை இப்படி சாப்பிட்டால் எளிதாக உடல் எடை குறையும்!

நம்முடைய உணவில் சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலமும், சில உணவுப்பொருட்களை சேர்த்துக்கொள்வதன் மூலமும் உடல் எடையை குறைக்க முடியும்.  அந்த வகையில் வெங்காயம் பல அற்புதங்களை செய்கிறது.

Written by - RK Spark | Last Updated : Jul 22, 2022, 06:07 AM IST
  • உடல் எடை குறைப்பில் வெங்காயம் முக்கியத்துவம் வாய்ந்தது.
  • வெங்காயம் டைப்-2 நீரிழிவு நோய் வியாதிகளை தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
  • வெங்காயத்தில் உள்ள வைட்டமின்-சி சத்து கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது.
Weight Loss: வெங்காயத்தை இப்படி சாப்பிட்டால் எளிதாக உடல் எடை குறையும்! title=

சமையலுக்கு பயன்படக்கூடிய முக்கியமான பொருட்களுள் ஒன்றான வெங்காயத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெறமுடியும்.  நம்முடைய உணவில் சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலமும், சில உணவுப்பொருட்களை சேர்த்துக்கொள்வதன் மூலமும் உடல் எடையை குறைக்க முடியும்.  அந்த வகையில் வெங்காயம் பல அற்புதங்களை செய்கிறது, உடல் எடை குறைப்பில் வெங்காயம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றி பலருக்கும் தெரியாது.  வெங்காயம் தொப்பையை குறைக்கவும், டைப்-2 நீரிழிவு நோய் மற்றும் இதய சம்மந்தமான பல வியாதிகளை தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.  இதில் குறைவான கலோரிகளும் அதிகளவில் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது.

மேலும் படிக்க | நீரிழிவு நோய்க்கு வரப்பிரசாதமாகும் 'இந்த' பழத்தின் விதைகளை தூக்கி எறியாதீர்கள்

160 கிராம் நறுக்கப்பட்ட வெங்காயத்தில் 15 கிராம் கார்போஹைட்ரேட், 16 கிராம் கொழுப்பு, 7 கிராம் நார்சத்து, 76 கிராம் ப்ரோட்டீன், 78 கிராம் இனிப்பு, 12 சதவீதம் வைட்டமின்-சி, வைட்டமின்-பி6 மற்றும் மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் உள்ளது.  மேலும் இதில் சல்பர், கால்சியம், அயர்ன், போலேட், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது.  உடல் எடையை குறைப்பதற்கான மெட்டபாலிசத்தை வெங்காயம் தூண்டுகிறது, வெங்காயம் சாப்பிடுவது வயிறு நிறைவாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.  அதுமட்டுமல்லாது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

வெங்காயத்தில் உள்ள வைட்டமின்-சி சத்து கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது, இதனை சாப்பிடுவதால் தோல் மற்றும் முடி பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.  யூவி கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் ஒரு அரணாகவும் இது செயல்படுகிறது.  வெங்காயத்தை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை பருகி வருவதால் உடலுக்கு பல சத்துக்கள் நேரடியாக கிடைக்கும், மேலும் வெங்காயம் அதிகமாக சேர்த்து அதனுடன் ஆலிவ் எண்ணெய், இஞ்சி, பூண்டு, தக்காளி, சிக்கன், முட்டைகோஸ் மற்றும் மிளகு போன்றவற்றை சேர்த்து கொதிக்க வைத்து சூப் போல செய்து குடித்துவர உடலுக்கு வலு கிடைக்கும்.

மேலும் படிக்க | Weight Loss Tips: இந்த இயற்கை பானத்தின் உதவியுடன் எடை குறைக்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News