Monkeypox in India: கொரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைத்து இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக பாதித்தது. அதன் தாக்கத்திலிருந்து இப்போதுதான் உலக மக்கள் சற்று மீண்டுள்ளனர். அதன் பிறகு இன்னும் பல வைரஸ் தொற்றுகள் அவ்வப்போது மனித குலத்தை அச்சுறுத்தி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது குரங்கு அம்மை (MPox) உலகம் முழுதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகஸ்ட் 14 அன்று குரங்கமையை உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்தது. ஆப்பிரிக்கா கண்டத்தில் தனது ஆட்டத்தை ஆரம்பித்த குரங்கு அம்மை தற்போது பல கண்டங்களுக்கும், அவற்றில் உள்ள நாடுகளுக்கும் பரவி விட்டது. இந்தியா உட்பட பல நாடுகளில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். சில நாடுகளில் இதனால் சிலர் உயிரிழந்துள்ளனர். 


இந்தியாவில் குரங்கம்மை


இந்தியாவில் இதுவரை 2 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 17 அன்று கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர், மொத்த எண்ணிக்கை 2 ஆக அதிகரித்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய 38 வயது நபருக்கு குரங்கு அம்மை காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.


இதை உறுதிப்படுத்திய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், வட மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் நோயாளிக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறினார். முன்னதாக செப்டம்பர் 9 ஆம் தேதி, இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதிக்கபட்ட முதல் நபர் பற்றி கண்டறியப்பட்டது. 


வெளிநாட்டில் இருந்து டெல்லி திரும்பிய ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் செப்டம்பர் 8 ஆம் தேதி எல்என்ஜேபி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் மேற்கு ஆப்பிரிக்க கிளேட் 2 திரிபு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த திரிபு WHO இன் குளோபல் ஹெல்த் எமர்ஜென்சியில் சேர்க்கப்பட்டுள்ள கிளேட் 1 என்ற திரிபு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த தொற்று வேகமாக பரவி வருவதால், இது குறித்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். 


கடந்த செப்டம்பர் 9-ம் தேதி இந்தியாவில் முதல் நபர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டது. இதன் பரவும் தன்மை மற்றும் வீரியத்தை கருத்தில்கொண்டு, இந்தியர்கள் இது குறித்து மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சுகாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். 


கொரோனாவை போல் பரவும்


குரங்கு அம்மை நோய் குறித்த புரிதல் அனைவருக்கும் அவசியம், ஏனென்றால் கொரோனாவைப் போலவே, இதுவும் பயணத்தின் மூலமும் பரவுகிறது. மேலும் WHO இதை உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்துள்ளது. ஆகையால், இதை புறக்கணிக்க முடியாது. 


கடந்த 2022ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இதுவரை 30 பேர் குரங்கு அம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


- முதன் முதலில் டெல்லியில் இந்த நோய் கண்டறியப்பட்டது. அந்த நோயாளி நைஜீரியாவின் குடிமனாக இருந்தார்.
- 2022 ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் 116 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவியது. 
- 99176 நோயாளிகள் இதனால் பாதிக்கப்பட்டன்ர். 
- 208 பேர் இறந்தனர். 
- 024 ஆம் ஆண்டில் இதுவரை 15600 நோயாளிகள் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- 537 பேர் உயிரிழந்துள்ளனர். 
- குரங்கு அம்மை மாதிரிகளை பரிசோதிக்க இந்தியாவில் 32 ஆய்வகங்கள் உள்ளன.


மேலும் படிக்க | கொழுப்பை எரித்து... இஞ்சி இடுப்பழகை பெற இவற்றை கடைபிடிங்க... 21 நாட்களில் பலன் தெரியும்


குரங்கு அம்மை நோய் எந்த நாட்டிலிருந்து பரவியது?


குரங்கு அம்மை நோயின் ஹாட்ஸ்பாட் நாடு, அதாவது அதன் மூலம் காங்கோ என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ் காங்கோ ஜனநாயகக் குடியரசில் (டிஆர்சி) இருந்து உலகம் முழுவதும் பரவியது.


Monkeypox: குரங்கு அம்மை தடுப்பூசி பயனுள்ளதாக இருக்குமா?


- 1958 ஆம் ஆண்டு டென்மார்க்கில் குரங்கு காய்ச்சலின் முதல் வழக்கு பதிவானது.
- மனிதர்களில் முதன் முதலில் இது 1970 கண்டறியப்பட்டது. 
- இப்போது அதன் கிளேட்-1பி திரிபு பரவியுள்ளது, இது 2 ஐ விட ஆபத்தானது. 
- முதல் திரிபு பரவுவதற்கான காரணம் உடல் உறவுகள் என கண்டறியப்படது.
- இரண்டாவது திரிபு பயணத்தின் மூலமும் பரவுகிறது. 
- இதன் தடுப்பூசி தயாரிக்கப்பட்டு விட்டதாகவும், இதுவரை இந்த தடுப்பு மருந்து நைஜீரியாவில் மட்டுமே வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
- இந்த தடுப்பு மருந்து மற்ற நாடுகளை அடைவதற்குள் இந்த நோய் ஆபத்தான வடிவத்தை எடுக்கலாம் என கூறப்படுகின்றது.


மேலும் படிக்க | சுகர் நோயாளிகளுக்கு சுகமளிக்கும் உணவுகள் இவைதான்: கண்டிப்பா சாப்பிடுங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ