Tips To Lose Weight in 21 Days: இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் கொடுத்த பரிசுகளில் ஒன்று உடல் பருமன். கொழுப்பை கரைக்க வேண்டும் என்றால், வாழ்க்கை முறையில் மாற்றம் தேவை.
பலர் கடுமையான ஜிம் டயட் போன்றவற்றை கடைபிடித்தால் தான் உடல் எடையை குறைக்க முடியும் என நினைக்கிறார்கள். ஆனால் அதற்கான அவசியம் இல்லை. ஆரோக்கியமான பழக்கவழக்கங்களே போதும்.
Weight Loss Tips: உடல் பருமன் என்பது, நோய் இல்லை என்றாலும், அது பல்வேறு விதமான உடல்நல பிரச்சனைகளை கொண்டு வருகிறது. உடலில் நோயின் கூடாரமாக ஆகும் உடல் பருமனை குறைக்க வேண்டியது ஆரோக்கியமான வாழ்விற்கு மிக அவசியம்.
உடல் பருமனை குறைக்க, தொப்பையை குறைக்க, கடுமையான ஜிம் பயிற்சியோ, கடுமையான டயட்டும் தேவையில்லை. மேலும் இவை பெரும்பாலானோருக்கு பக்க விளைவுகளை ஏற்படும் வாய்ப்புகள் தான் அதிகம். ஆரோக்கியமான வாழ்க்கை மறையின் மூலம் உடல் எடையை சிறப்பாக கட்டுப்படுத்தலாம்.
ஆரோக்கியமான உணவு: முதலில் வீட்டில் சமைத்த உணவை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வெளியில் சாப்பிடுவதை நிறுத்தினாலே பாதி பிரச்சனைகள் தீரும். வீட்டில் ஆரோக்கியமான உணவு, உடல் எடையை குறைக்க உதவுவதோடு, நோயற்ற வாழ்விற்கும் வழி வகுக்கும்.
காலை உணவு: நாள் முழுவதும் ஆற்றலை கொடுக்கும் காலை உணவு, அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சமச்சீர் உணவாக இருக்க வேண்டும். அதில் புரதம் முதல் கொழுப்பு வரை அனைத்தும் இருக்க வேண்டும். அதில் பருவ கால பழங்கள் மற்றும் காய்கறிகள் அவசியம் இடம் பெற வேண்டும்.
மதிய உணவு: குறைந்த கலோரி கொண்ட எளிதில் ஜீரணிக்க கூடிய வகையான மதிய உணவு, உடலுக்கு சோம்பலை தராமல் சுறுசுறுப்பாக இருக்க உதவும். மதிய உணவிலும் காய்கறிகள் பருப்பு வகைகள் அதிக அளவிலும், அரிசி கோதுமை உணவுகள் குறைந்த அளவிலும் இருப்பது சிறப்பு.
இரவு உணவு: மதிய உணவைப் போன்ற இரவு உணவும் எளிதாக ஜீரணிக்க கூடிய லைட்டான உணவாக இருக்க வேண்டும். அதோடு இரவு உணவை, ஏழு மணிக்குள் முடித்துக் கொள்வது சிறப்பு. இது உடல் எடையை குறைக்க உதவுவதுடன், செரிமான பிரச்சனைகளுக்கு குட் பை சொல்லவும் உதவும்.
நடை பயிற்சி: காலையிலும் மாலையிலும் நடைப்பயிற்சி அல்லது உங்களுக்கு ஏற்ற எளிய பயிற்சிகளை மேற்கொள்வது முக்கியம். மாலையில் முடியவில்லையென்றால் இரவு உணவு சாப்பிட்ட பின் சிறிது நேரம் நடப்பது நல்லது.
வெயிட் லாஸ் பானங்கள்: உடல் எடையை குறைக்க, இஞ்சி, சீரகம், இலவங்கப்பட்டை, பெருஞ்சீரகம், செலரி சேர்த்த நீரில் ஏதாவது ஒன்றை குடித்து வரும் பழக்கத்தை கடைபிடிக்கலாம். இதன் மூல, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இதனால் செரிமானம் மேம்பட்டு, உடல் எடையை குறைக்க உதவும்.
நல்ல தூக்கம்: உடல் எடையை குறைக்க, போதுமான அளவு தூங்குவது அவசியம். தூக்கமின்மை செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இரவு 10:30 மணிக்குள் தூங்க முயற்சி செய்யுங்கள். சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுவது ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும்.
குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. உடல் எடை இழப்பு என்பது, ஒருவரின் உடல் தன்மையை பொறுத்த மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உடல் பருமனுக்கு, உடல் உள்ள பிரச்சனை ஏதேனும் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால், கண்டிப்பாக மருத்துவரை அணுகி ஆலோசனை செய்யவும்.