Multigrain: பல தானிய மாவை பயன்படுத்தி கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துங்க
Food for Health: நாம் உண்ணும் உணவே நமது ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. பல தானிய உணவை தினசரி எடுத்துக் கொண்டால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம், நோய்கள் அண்டாமல் காக்கலாம்
கோதுமை மாவை மட்டுமே பயன்படுத்தாமல், அதில் பல தானியங்களை கலந்து பயன்படுத்துவதால், எலும்புகள் வலிமையாகும். எடை இழப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மல்டி கிரைன் எனப்படும் பல்வேறு தானியங்கள் கலந்த மாவு பல நன்மைகளைக் கொடுக்கும். கோதுமை மாவை நாம் அதிகம் பயன்படுத்துவதால், வேறு சில தானியங்களின் அபார நன்மைகள் நமக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. கோதுமையுடன் அற்புத ஆரோக்கிய நன்மைகளைத் தரும் 3 வித மாவுகளை கலந்து பயன்படுத்தினால் ஆரோக்கியம் மேம்படும்.
கோதுமை மாவு ஆரோக்கியமான உணவு என்று கூறுவதற்குக் காரணம், அதில் நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது தான். மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனை உள்ளவர்கள், கோதுமை மாவை உணவில் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால், கோதுமை மாவை விட அதிக ஊட்டச்சத்து கொண்ட பல தானிய வகைகள் நம்மிடம் உள்ளன. அவற்றை கோதுமை மாவுடன் கலந்து சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க | கண்களில் ஏற்படும் இந்த 3 மாற்றங்கள் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதைக் குறிக்கும்
கோதுமை மாவில் கலக்கக்கூடிய மாவு
உங்கள் வீட்டில் தினமும் கோதுமை மாவை உட்கொண்டால், உங்கள் கோதுமை மாவில் இந்த மூன்று மாவுகளையும் கலந்து அதன் நன்மைகளை இரட்டிப்பாக்கலாம்.
ராகி மாவு - ராகி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும், அதில் 25 பங்கு கோதுமை மாவை கலக்கலாம். கோதுமையுடன் ராகியைச் சேர்ப்பது உங்கள் உணவின் நிறத்தையும் சுவையையும் மாற்றுவது மட்டுமல்லாமல், அதில் உள்ள சிறப்பு கூறுகள் எலும்புகளை வலுப்படுத்தும். கோதுமை மற்றும் ராகியை ஒன்றாக அரைத்து பயன்படுத்தலாம். அல்லது கோதுமை மற்றும் ராகி மாவை தனித்தனியாக வைத்துக் கொண்டு, வேண்டும்போது கலந்து பயன்படுத்தலாம்.
கொண்டைக்கடலை மாவு - கோதுமை மாவுடன் கொண்டைக் கடலை மாவை கலந்து உணவு தயாரிக்கலாம். கொண்டைக்கடலை மாவை கோதுமை மாவில் 25 முதல் 50 சதவீதம் வரை கலக்கலாம். ராகியைப் போலவே, இதையும் தனியாக வைத்தும் கோதுமையுடன் சேர்க்கலாம். அல்லது கோதுமையுடன் சேர்த்தே அரைத்து வைத்துக் கொள்ளலாம். கொலஸ்ட்ரால் பிரச்சனையை குறைக்கும் இந்த மாவுக் கலவை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | கொலஸ்ட்ராலுக்கும் நீரிழிவுக்கும் எமனாகும் கருமிளகு எனும் அருமருந்து
சோயாபீன் மாவு - சோயாபீன் மாவையும் கோதுமை மாவுடன் கலக்கலாம். உடலுக்கு தேவையான புரதம் மற்றும் பல ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் ஒரே வழி இதுதான். 250 கிராம் சோயாபீனை 1 கிலோ கோதுமை மாவில் கலக்கலாம்
நீரிழிவு நோயாளிகளுக்கு மல்டிகிரைன் மாவு மிகவும் நன்மை பயக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு பல தானிய மாவுகளை உட்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இது இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அதிகரித்தால் ஏற்படும் கொழுப்புக் கட்டிகளுக்கும் கேன்சருக்கும் தொடர்பு?
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கும் பலதானிய மாவு மிகவும் நன்மை பயக்கும். நார்ச்சத்து உட்பட பல பொருட்கள், மல்டிகிரைன் மாவில் உள்ளதால், இது செரிமானத்தை விரைவுபடுத்த உதவுகிறது மற்றும் மலச்சிக்கல் உட்பட பல பிரச்சனைகளை நீக்குகிறது.
மல்டிகிரைன் மாவில், புரதம் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன, எனவே, இதை பயன்படுத்துவதால் எலும்பு பலவீனம் நீங்கி தசைகளும் வலுவடையும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல மகிழ்ச்சிக்கும் காரணமாகும் மூலிகைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ