கொலஸ்ட்ரால் அதிகரித்தால் ஏற்படும் கொழுப்புக் கட்டிகளுக்கும் கேன்சருக்கும் தொடர்பு?

Facts and Remedies of Cholesterol: கொலஸ்ட்ரால் அதிகரிப்பது உடலுக்கு ஆபத்தானது. உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் மட்டுமல்ல, உடலில் கொழுப்புக் கட்டிகள் தோன்றும் அபாயமும் அதிகம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 7, 2022, 02:57 PM IST
  • கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்காவிட்டால் கட்டிகளாக மாறலாம்
  • வலியில்லா கட்டிகளும் கொலஸ்ட்ரால் அறிகுறிகளாக இருக்கலாம்
  • கொழுப்பு படிவதால் ஏற்படும் கொலஸ்ட்ரால் கட்டிகள்
கொலஸ்ட்ரால் அதிகரித்தால் ஏற்படும் கொழுப்புக் கட்டிகளுக்கும் கேன்சருக்கும் தொடர்பு? title=

நியூடெல்லி: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உடலில் கொழுப்பு அதிகம் தேங்கும் போது அவை கட்டிகளாக மாறுகின்றன. இந்த கட்டிகள் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மட்டுமல்ல,  ஒல்லியாக இருப்பவர்களுக்கும் வருகிறது, உடல் எடை மற்றும் பருமனுக்கும் உடலில் கொழுப்பு கட்டிகள் வருவதற்கும் தொடர்பில்லை என்பதால் யாருக்கும் வேண்டுமானாலும் கொழுப்புக்கட்டிகள் வரலாம். உடலில் கொழுப்பு படிந்து, அது கரையாமல் இருக்கும் போது தான் இந்த கட்டிகள் உருவாகின்றன. கொழுப்பு கட்டிகள் வலியற்ற தன்மையைக் கொண்டவை என்பதால் அதை பலரும் அலட்சியமாக விட்டுவிடுகின்றனர். ஆனால் பெண்களுக்கு மார்பு பகுதியில் கொழுப்பு கட்டி தோன்றினால் அது கேன்சராக இருக்குமோ என்ற பயத்தையும் ஏற்படுத்துகிறது. 

கொழுப்பு கட்டிகள் கரைந்த பிறகு மீண்டும் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு உண்டு என்பதால் உணவில் கவனம் செலுத்த வேண்டும். உடலில் படியும் கொழுப்பைக் கரைக்க, உடல் உழைப்பும், உடல்பயிற்சியும் அவசியமானது. வலி இல்லாத கட்டிகளாக இருப்பதால், இவற்றை அலட்சியம் செய்தால் அறுவை சிகிச்சை மூலம் கொலஸ்ட்ரால் படிமங்களால் ஏற்படும் கட்டிகளை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால் கவனமும் எச்சரிக்கையும் அவசியம் ஆகும்.

மேலும் படிக்க | கொழுப்பை குறைக்கணுமா? இந்த பழக்கத்தை எல்லாம் விட்டுடுங்க 

அதோடு ஒரு முறை அறுவை சிகிச்சை செய்தாலும் இந்த கட்டி மீண்டும் வரக்கூடியது என்பதால் உணவுக் கட்டுப்பாடும், உடல் உழைப்பும் மிகவும் அவசியமானது. அதிலும், ஆரம்பத்திலேயே கொழுப்பு கட்டிகளை கரைப்பதுதான் சிறந்த தீர்வாக இருக்கும். சர்வதேச அளவில் ஒரு சதவீத மக்களுக்கு கொழுப்புத் திசுக்கட்டிகள் உள்ளன. இந்தக் கட்டிகள் எந்த வயதிலும் ஏற்படலாம் என்றாலும் 40 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அதிக அளவில் காணப்படுகிறது.

குழந்தைகளுக்கும் இதுபோன்ற கட்டிகள் அரிதாக ஏற்படுகின்றன.ஆனால் இந்தக் கட்டிகள் பிறப்புவழி நோயான பன்னாயன்-ஜோனானா நோயின் அறிகுறியின் ஒரு பகுதியாக ஏற்படலாம் என்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

கொழுப்புக் கட்டிகளில் பல வகை உண்டு. ஆன்ஜியோலிப்போலெயோமையோமா, ஆன்ஜியோலிப்போமா, சோண்ட்ராய்ட், ஹைபர்னோமா என பல வகை கொழுப்புக் கட்டிகள் உள்ளன. கதிர்-செல் கொழுப்புத் திசுக்கட்டி என்பது வயதான ஆண்களின் பின்முதுகு, கழுத்து மற்றும் தோள்கள் போன்ற இடங்களில் ஏற்படும் தோலடிக் கட்டி ஆகும்.

மேலும் படிக்க | கொழுப்பை குறைக்கணுமா? இந்த பழக்கத்தை எல்லாம் விட்டுடுங்க 

கொழுப்பு மிகைப்பு டொலொரோசா  (டெர்கம் நோய்) என்பது வலி நிறைந்த கொழுப்பு திசுக்கட்டிகள் என்பதை குறிக்கும். இப்படிப்பட்ட கொழுப்புக் கட்டிகள், வீக்கம் மற்றும் சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தும். பொதுவாக பருமனான மாதவிடாய் நின்ற பெண்களுக்கு டெர்கம் கட்டிகள் ஏற்படுகின்றன.

மேலோட்டாமான தோலடி கொழுப்புத் திசுக்கட்டி   என்பது மிகவும் பொதுவான வகை கொழுப்புத் திசுக்கட்டி ஆகும்.இது தோலின் புறப்பரப்பின் அடியில் ஏற்படும். பெரும்பாலும் உடற்பகுதி, தொடைகள் மற்றும் முன்கைகள் போன்ற இடங்களில் ஏற்படுகின்றன.எனினும் அவை உடலில் வேறு பகுதிகளில் கொழுப்பு இருக்கும் இடங்களிலும் ஏற்படலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நீரழிவு நோயாளிகள் இந்த காய்கறிகளை மட்டும் தவறாமல் சாப்பிடுங்கள்!

மேலும் படிக்க | கண்களில் ஏற்படும் இந்த 3 மாற்றங்கள் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதைக் குறிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News