இந்தியாவின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷன் (National Institute of Nutrition (NIN)) சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகள், வாழ்க்கை முறை மாற்றங்கள், நோய்கள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு அதன் 'இந்தியர்களுக்கான உணவு வழிகாட்டுதல்களை' திருத்தி அமைத்துள்ளது. அதன்படி, செயற்கையாக தயாரிக்கப்படும் புரதச் சத்துக்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தினசரி சர்க்கரை உட்கொள்ளும் அளவு


அதேபோல, சர்க்கரை உட்கொள்ளும் அளவையும் குறிப்பிட்டுள்ள இந்த அமைப்பு, நாளொன்றுக்கு 20 முதல் 25 கிராம் வரை சர்க்கரையே போதுமானது என்று பரிந்துரைத்துள்ளது. அதற்கு அதிகமான சர்க்கரை உடலுக்கு தேவையில்லாத சிக்கல்களை ஏற்படுத்தும். செயற்கையான புரதச் சத்துக்களைத் தவிர்க்கவும், உணவில் எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.


மண்பாண்டமே சமையலுக்கு சிறந்தது


சமையல் செய்வதற்கு மண் பாண்டங்களையே பயன்படுத்த வேண்டும் என்று கூறும் நிறுவனம் அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளது. குறைந்த எண்ணெயில் சமைக்கலாம் என்பதும், உணவின் ஊட்டச்சத்தைப் பாதுகாக்கவும் மண் பாத்திரங்கள் உதவுவதாகவும் தெரிவித்துள்ளது.  


புரத சப்ளிமெண்ட்ஸ்


அதே நேரத்தில், புரோட்டீன் சப்ளிமெண்ட்ஸ் எனப்படும் புரதங்களை கண்டிப்பாக தவிர்க்கலாம் என்று கூறும் இந்த பரிந்துரை, செயற்கை புரதங்களால் ஏற்படும் நன்மைகளைவிட ஆபத்துகள் அதிகம் என்று சுட்டிக்காட்டுகிறது.


"புரதப் பொடிகளில் கூடுதல் சர்க்கரைகள், கலோரிகள் இல்லாத இனிப்புகள் மற்றும் செயற்கை சுவையூட்டிகள் போன்ற சேர்க்கைகளும் இருக்கலாம், எனவே, இவற்றை தொடர்ந்து உண்ண வேண்டாம். அமினோ அமிலங்கள் நிறைந்த புரதங்கள் தொற்று அல்லாத நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம். அதிக அளவு புரதம் தேவை என்பதற்காக, சப்ளிமென்ட் வடிவில் புரதத்தை எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | வெறும் வயிற்றில் வில்வ இலை செய்யும் மாயம்! மலச்சிக்கலுக்கு சிக்கல் கொடுக்கும் மாமருந்து!


யாருக்கு எவ்வளவு புரதம் தேவை?


குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு, 19 முதல் 34 கிராம் புரதம் தேவைப்படும். வளர் இளம் சிறார்களில் ஆண்களுக்கு 52 கிராம் புரதமும், பெண்களுக்கு 46 கிராம் புரதமும் தேவை. அதேபோல் ஆண்களுக்கு 56 கிராம் புரதமும், பெண்களுக்கு சுமார் 46 கிராம் புரதமும் தேவைப்படும். கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் தினசை சுமார் 71 கிராம் புரதம் தேவைப்படும்.


வழிகாட்டுதல்களை உருவாக்கிய குழுவின் தலைவரும் NIN இயக்குனர் டாக்டர் ஹேமலதா இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆரோக்கியமான உணவு மற்றும் உடல் செயல்பாடுகள் கரோனரி இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தின் கணிசமான விகிதத்தை குறைக்கலாம் என்பதும், வகை 2 நீரிழிவு நோயை 80 சதவீதம் வரை தடுக்கலாம்" என்றும் தெரிவித்துள்ளார்.


உணவு சேமிப்பு மற்றும் சமையல் பழக்கம்


உணவை சமைத்த உடனே உண்பதற்கும், அதை குளிர்சாதன பெட்டியில் வைத்து உண்பதற்கும் உள்ள வித்தியாசமும் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உணவு உண்பது என்பது, உடலுக்குத் தேவையான சத்துக்களை அளிப்பதற்காகத் தான் என்பதை மறந்துவிட்டு, ருசிக்காக உண்பது என்று புரிந்துக் கொள்வதை மாற்றினால் ஆரோக்கியம் தொடர்பான நமது புரிதல்களும் கோணமும் மாறிவிடும்.


மேலும் படிக்க | Covaxin கொரோனா தடுப்பூசி வைரஸை தடுத்தாலும் பக்கவிளைவுக்கும் பஞ்சமில்லை! அதிர்வூட்டும் ஆய்வு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ