Vilvam Leaves In Empty Stomach Benefits: கோடைக்காலத்தில் உஷ்ணம் தொடர்பான உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவது அதிகமாக இருக்குக்ம். அதிகரித்து வரும் வெப்பநிலையால், நீரிழப்பு, வயிற்றுப் பிரச்சனைகள், தூக்கமின்மை, சோர்வு போன்ற பிரச்சனைகள் பொதுவானதாகி விடுகிறது. இந்த பிரச்சனைகளை தவிர்க்க, வில்வ இலை ஒரு சஞ்சீவியாக பயன்படுத்தப்படுகிறது.
பல நூற்றாண்டுகளாக மருத்துவ குணங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேதத்தின்படி, வெறும் வயிற்றில் என்ன உண்கிறோம் என்பது நமது ஆரோக்கியத்தை முடிவு செய்கிறது. அந்த வகையில் வில்வ இலையை தினசரி காலைவில் மென்று தின்றால், நோயெதிர்ப்பு சக்தி வலுப்படும்
வில்வ இலைகளில் நிறைய ஆன்டி பயாடிக் நிறைந்துள்ளதால், பல்வேறு நோய்களை குணப்படுத்துகின்றன என்று ஆய்வுகள் சொல்கின்றன. பல நூற்றாண்டுகளாக வில்வ இலை நமது நாட்டில் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது
சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த இலைகள் மிகவும் நல்லது.. வில்வ இலையை காலையில் மென்று உண்பது, வில்வ இலையில் டீ போட்டு குடிப்பது போன்றவை, ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். உடலுக்குள் நுழையும் நோய்க்கிருமிகளை அழிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் பெருக்க உதவுகின்றன
ஆன்மீகத்திலும் வில்வ இலைக்கு முக்கியத்துவம் உண்டு. வில்வ இலை மனதை அமைதிப்படுத்தும் என்றும் உடலுக்கு குளிர்ச்சிக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால் தான் தலையில் கங்கையை வைத்திருக்கும், இமயமலையை வீடாக கொண்ட சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை மிகவும் பிடித்தமானதாக இருக்கக் காரணம் இதிலுள்ள குளிர்ச்சியூட்டும் பண்புகளும் முக்கியமானது
மலச்சிக்கலை தீர்த்து, குடல் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது வில்வ இலை. மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள், வில்வ இலையை கொதிக்க வைத்து மிளகுத்தூள் சேர்த்து தேன் கலந்து குடித்தாலே மலச்சிக்கல் தீரும். வயிற்றிலுள்ள பூச்சுக்களும் வெளியேறிவிடும்..
கடும் தலைவலியாக இருந்தால், இந்த இலைகளை நசுக்கி, அந்த சாற்றை நெற்றியில் பற்று போட்டால் தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்..
சரும பாதுகாப்பிற்கு வில்வ இலைகள் மிகவும் நல்லவை. வில்வ இலையுடன் மஞ்சள் கிழங்கையும் சேர்த்து அரைத்து பயன்படுத்தினால், சரும பிரச்சினைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.