தேசிய ஊட்டச்சத்து வாரம் 2022: ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7 வரை இந்தியாவில் நாம் தேசிய ஊட்டச்சத்து வாரத்தைக் கடைப்பிடிக்கிறோம். சமச்சீர் மற்றும் சத்தான உணவு நமது ஆரோக்கியத்திற்கு நீண்டகால நன்மைகளைக் கொடுக்கும். உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு, இதயக் கோளாறுகள், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களிலிருந்தும் இது உங்களைப் பாதுகாக்கிறது. நமக்கு வயதாகும்போது, ​​​​நம் உடலின் உணவுத் தேவைகளும் மாறுபடுகின்றன. ஆகையால், உங்கள் வயதுக்கு ஏற்ப எந்த உணவு உண்மையில் உங்களுக்கு சத்தானது என்பதை கவனிக்க வேண்டியது அவசியமாகும். அது பற்றிய சில விவரங்களை இந்த பதிவில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து


குழந்தைகள் பலவித உணவுகளை விரும்பி உண்பவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக நொறுக்குத் தீனிகளால் இவர்கள் எளிதில் ஈர்க்கப்படுவதால், சரியான ஊட்டச்சத்தை வழங்குவது கடினமாக இருக்கிறது. இந்த விஷயத்தில், இவர்களது உணவில் வண்ணமயமான காய்கறிகளைச் சேர்ப்பதன் மூலம் உணவின் தோற்றத்தை அழகுபடுத்தி அதன் மூலம் அவர்கள் காய்கறிகளை உட்கொள்ளும் அளவை அதிகரிக்க முயற்சி செய்யலாம். 


பதின் பருவத்தினருக்கான ஊட்டச்சத்து


டீனேஜ் என்பது ஒருவரது உடலில் விரைவான வளர்ச்சியின் ஆண்டுகளைக் குறிக்கிறது. குழந்தைகள் பருவமடைந்து பல உடல் மாற்றங்களை அனுபவிக்கும் காலம் இது. எனவே, இந்த நிலை, இளம் பருவத்தினரின் உணவில் ஊட்டச்சத்துக்கள், புரதங்கள், இரும்புச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும். இவை அவர்களுக்கு மிகவும் தேவையான ஆற்றலை வழங்குகின்றன மற்றும் அவர்களின் வளர்ச்சியை அதிகரிக்கின்றன. பதின் பருவத்தினருக்கு முழு தானிய ரொட்டி, தானியங்கள், பழங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் பால் பொருட்களை உணவில் சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.


மேலும் படிக்க | தினமும் பால் குடிக்கிறீர்களா?... கவனம் தேவை 


20-40 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான ஊட்டச்சத்து


நம் வாழ்வில், ஒரு குறிப்பிட்ட வயது (20-40 வயது) வந்தவுடன் பல வித இன்னல்களையும் டென்ஷன்களையும் அனுபவிக்கத் தொடங்கிறோம். இது ஆரோக்கியமான உணவுத் தேவைகளைப் புறக்கணிக்கவும், ஆரோக்கியமற்ற அல்லது துரித உணவுகளில் ஈடுபடவும் வழிவகுக்கிறது. பெரும்பாலான பெண்கள் கர்ப்பமாகும் வயதும் இதுதான். தொடர்ந்து வரும் முதுமையில், வழக்கமாக வரும் நோய்கள் வராமல் இருக்க அனைத்து சத்துக்களையும், புரதங்களையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.


40-60 வயதுக்குட்பட்ட நடுத்தர வயதினருக்கான ஊட்டச்சத்து


இந்த வயதில் உடலின் வளர்சிதை மாற்றம் மாறத் தொடங்கும். ஆகையால், நல்ல ஆரோக்கியத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய வயது இதுவாகும். இந்த வயதில் உணவில் பைட்டோநியூட்ரியன்கள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகளை சேர்ப்பது மிக முக்கியம். ஏனெனில், இவை உடலின் செரிமானம் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புகளை மேம்படுத்துகின்றன. இந்த வயதில் இதய நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது. ஆகையால் கொழுப்பு மற்றும் வறுத்த உணவை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.


வயதானவர்களுக்கான ஊட்டச்சத்து


முதுமையில், முறையற்ற உணவுப்பழக்கம் இருந்தால் உடலுக்கு வரும் அபாயத்தை கண்டிப்பாக குறைக்க முடியாது. இந்த வயதில். சத்தான, சரியான உணவை சாப்பிடுவது மிக முக்கியமாகும். இந்த வயதில்தான் பொதுவாக உடல்நிலை மோசமடையத் தொடங்குகிறது. ஆரம்ப ஆண்டுகளில் கவனம் செலுத்தவில்லை என்றால், இந்த வயதில் பல நோய்களால் பாதிக்கப்படக்கூடும். இந்த வயதில் பற்கள் முழு பலத்துடன் இருக்காது. சரிமான சக்தியும் சரியாக இருக்காது. ஆகையால் கடினமான மற்றும் திடமான உணவை மெல்லுவது சற்று கடினமாக இருக்கும். ஆகையால், வழக்கமான உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்து கிடைக்காமல் போகலாம். எனினும், திரவ உணவுகள் மூலம் இதை ஈடுசெய்ய முடியும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | மலச்சிக்கலை ஒரேயடியாக ஒழித்துக் கட்ட சுலபமான வழி 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ