மலச்சிக்கலுக்கு வீட்டு வைத்தியம்: மலச்சிக்கல் என்பது இன்று கிட்டத்தட்ட அனைவருக்கும் பிரச்சனையாகிவிட்டது. மலச்சிக்கல் மருந்துகளை பயன்படுத்தியிருந்தாலும், அதை நிறுத்திய பிறகு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட ஆரம்பித்தால், இந்த வீட்டு வைத்தியத்தை நீங்கள் பயன்படுத்தினால் மிகவும் பலனுள்ளதாக இருக்கலாம். தற்போது அனைவரின் வாழ்க்கை முறையும் மோசமாகி வருவதால், பல நோய்கள் உடலில் பிறக்கின்றன. ஏறக்குறைய ஒவ்வொரு நபரின் உடலிலும் சில நோய்கள் இருக்கும். ஆனால் சில உடல்நலப் பிரச்சனைகள் பெரும்பாலான மக்களை அவர்களின் வாழ்வின் ஒரு கட்டத்தில் தொந்தரவு செய்கின்றன.
அதில், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் தினசரி வாழ்வை நரகமாக்கிவிடும். வாழ்க்கை முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களால், அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது, மலச்சிக்கல் பிரச்சனைக்கு காரணமாகிறது. மலச்சிக்கலுக்கு, பவுடர்கள், சிரப்கள் மற்றும் மாத்திரைகள் போன்றவற்றை எடுத்துக்கொள்கிறார்கள்.
மேலும் படிக்க | காலையில் எழுந்திருக்கும் போதே தலைவலியா; ‘இவை’ காரணமாக இருக்கலாம்
மருந்துகளை உட்கொண்டால் மட்டுமே நிவாரணம் கிடைக்கும் என்ற நிலை கவலையைக் கொடுக்கிரது. மருந்தின் பயன்பாடு நிறுத்தப்பட்டவுடன், மலச்சிக்கல் பிரச்சனை மீண்டும் தொடங்குகிறது. ஆனால் நாள்பட்ட மலச்சிக்கலில் இருந்து விடுபட இந்த அறிவுரைகளை பின்பற்றலாம்.
ஆமணக்கு எண்ணெய்
ஆமணக்கு எண்ணெய், அதாவது விளக்கெண்ணெய், மலச்சிக்கலைப் போக்க பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது. இன்றும் அது பலனளிக்கிறது. ஆமணக்கு எண்ணெயில் உள்ள ரிசினோலிக் அமிலம் மலச்சிக்கலைப் போக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மலச்சிக்கலை நீக்க 10 முதல் 15 மில்லி ஆமணக்கு எண்ணெய் போதும். ஆனால் அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.
சமையல் சோடா
பேக்கிங் சோடா ஒரு சக்திவாய்ந்த மலச்சிக்கல் எதிர்ப்பு மருந்தாகவும் அறியப்படுகிறது, இது மிக விரைவாக செயல்படுகிறது. பேக்கிங் சோடா வயிற்றில் இருக்கும் அதிகப்படியான வாயுவை குறைத்து, செரிமான செயல்முறையை துரிதப்படுத்துகிறது, இதன் விளைவாக மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்துகிறது. ஆனால்அளவுக்கு அதிகமாக உட்கொள்வது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | ஆரோக்கியத்திற்கு உகந்தது பச்சை மஞ்சளா இல்லை மஞ்சள் தூளா?: ஆயுர்வேதத்தின் பரிந்துரை
வெல்லம் கஷாயம்
வெல்லத்தில் இருந்து தயாரிக்கப்படும் கஷாயம், மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. வெல்லத்தை கஷாயமாக செய்து வைத்துக் கொண்டு தினமும் தூங்குவதற்கு முன்னதாக ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
புரோபயாடிக்
உங்கள் செரிமான அமைப்பில் பாக்டீரியாவின் சரியான சமநிலையை வைத்திருப்பதும் முக்கியம். உடலில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன, அவை இல்லாததால் மலச்சிக்கல் ஏற்படலாம். புரோபயாடிக்குகள் உங்கள் செரிமான அமைப்பை குணப்படுத்தும் மற்றும் மலச்சிக்கலை நீக்கும் நல்ல பாக்டீரியாக்கள். தினமும் 1 காப்ஸ்யூல் புரோபயாடிக் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது 2 கப் தயிர் சாப்பிடுங்கள்.
சூடான பானங்கள்
மலச்சிக்கலால் அவதிப்படும்போது, ஒரு கப் சூடான காபி குடிப்பதும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும். சில ஆய்வுகளின்படி, காபி பெருங்குடலை தூண்டுகிறது, இது உங்கள் குடல் இயக்கத்தை சிறிது எளிதாக்குகிறது. ஆனால் காபி ஒரு டையூரிடிக் ஆகும், எனவே அதிக காபி குடிப்பதால் நீரிழப்பு ஏற்படலாம், இது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.
மேலும் படிக்க | சிறுநீரக கல் இருந்தால் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!
உடற்பயிற்சி மற்றும் சூடான நீர்
மலச்சிக்கலில் இருந்து நிரந்தரமாக விடுதலை பெற விரும்பினால், உடற்பயிற்சி மட்டுமே அதற்கான தீர்வாக இருக்கும். உடலை அசைப்பதால், செரிமான அமைப்பு சாதாரணமாக வேலை செய்ய ஆரம்பித்து, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் முற்றிலும் குணமாகும். வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதைப் பழக்கப்படுத்துங்கள், இது செரிமான அமைப்பை துரிதப்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது. உடற்பயிற்சி மற்றும் வெதுவெதுப்பான நீர் இரண்டையும் ஒன்றாகப் பயன்படுத்துவதன் மூலம் மலச்சிக்கலை முற்றிலும் அகற்றலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Cholesterol பிரச்சனையா? இதை குடித்தால் ஒரே மாதத்தில் கொழுப்பு கரையும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ