Natural Remedies To Remove Facial Hair: ஹார்மோன் கோளாறுகள், உடல் நல பிரச்சனைகள் காரணமாக பெண்களுக்கு முகத்தில் முடி வளரலாம். இதனால் பல பேர் அவதிப்படுகின்றனர். அவரவரின் உடலமைப்பை பொறுத்து, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ முடி வளரும். இது போன்ற முகத்தில் தேவையற்ற இடங்களில் வளரும் முடி, பலருக்கு தங்களுக்கு அழகு குறித்த பாதுகாப்பின்மையை தூண்டி விடும். இதனால், அவர்கள் மேக் அப் போடுவதையோ, போட்டோ எடுப்பதையோ தவிர்ப்பர். இதற்காக பிரத்யோகமான பல மருத்துவ பரிசோதனைகள் இருந்தாலும், நமது வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே மாஸ்க் தயாரித்து முகத்தில் இருக்கும் முடிகளை நீக்கலாம். அதற்கான டிப்ஸை இங்கு பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மஞ்சள் பேஸ்ட்:


>மஞ்சள் பவுடரில் தண்ணீர் மற்றும் பாலை திக் பேஸ்டாக குழைக்கவும்.
>தேவையற்ற முடி வளரும் இடங்களில் அந்த மஞ்சள் பேச்டை தடவ வேண்டும்.
>மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதனால் மஞ்சள் காலம் காலமாக முக பராமரிப்பிற்கு உபயோகிக்கப்படுகிறது. 


கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர்:


>கடலை மாவினை ரோஸ் வாட்டருடன் கலக்கவும்.
>இவற்றை பேஸ்ட் போல ஆகும் வரை கலக்கலாம்.
>இதனை உங்கள் முகம் முழுவதும் தடவலாம். குறிப்பாக தேவையற்ற முடி வளரும் இடங்களில் நன்றாக தடவ வேண்டும்
>இந்த மாவு காய்ந்தவுடன் முகத்தை கழுவவும். 
>கடலை மாவு, முகத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்குகலை அகற்றும். ரோஸ் வாட்டர் சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும். 


முட்டை வெள்ளைக்கரு:


>முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் எடுத்து அதை நன்றாக கலக்கவும்.
>அதை முகத்தில் தடவி காய வைக்க வேண்டும்.
>காயந்தவுடன் அதை உரிக்கவும்.
>முகத்தில் இருக்கும் தளர்ந்த தசைகளை இறுக்கமாக்க, இந்த மாஸ்கை உபயோகிக்க வேண்டும். 
>இதனை 15 முதல் 20 நிமிடங்கள் வரை காய வைக்க வேண்டும்.


பப்பாளி மற்றும் மஞ்சள் மாஸ்க்:


>பப்பாளியை கொஞ்சமாக மஞ்சள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
>இதை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.
>இதனை 15-20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்
>பப்பாளியில் என்சைமஸ் சத்துகள் உள்ளன. இவை, முகத்தில் வளரும் முடியை இயற்கை முறையில் நீக்க வழிவகை செய்கிறது. 


மேலும் படிக்க | NAFLD: கல்லீரல் நோய் பாதிப்பா? இந்த உணவுகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு அமுதமாகும்!


சர்க்கரை-எலுமிச்சை ஸ்கரப்:


>சர்க்கரையையை எலுமிச்சையுடன் சேர்த்து கொள்ளவும்.
>இதனை உங்கள் முகத்தில் தடவி ஸ்க்ரப் போல உபயோகிக்கவும்.
>கடிகார வடிவில் முகத்தில் இதனை தடவ் வேண்டும்.
>வெந்நீரை வைத்து முகத்தை கழுவ வேண்டும்.
>எலுமிச்சையில் இயற்கையான ப்ளீச் சத்து இருக்கிறது. சர்க்கரை முகத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்கை எடுக்க உதவுகிறது.


ஓட்ஸ் மற்றும் வாழைப்பழ ஸ்கரப்:


>ஓட்ஸில் வாழைப்பழத்தை சேர்த்து தண்ணீரை வைத்து கலக்க வேண்டும்.
>இந்த பேஸ்டை முகத்தில் தடவ வேண்டும்.
>15 முதல் 20 நிமிடங்களுக்கு இதனை முகத்தில் ஊற வைக்கவும்.
>சுடு தண்ணீரில் பின்னர் முகம் கழுவலாம்,
>ஓட்ஸ், முகத்தில் இருக்கும் அழுக்கை எடுக்கிறது, வாழைப்பழம் சருமத்திற்கு தேவைப்பட்ட புரதத்தை அளிக்கிறது. 


மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் வேகமாக குறையணுமா... இதையெல்லாம் சாப்பிடுங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ