தினமும் ஒரு கப் வேப்பஞ்சாறு குடிச்சா போதும்: எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்
Neem Juice Benefits: கோடையில் பல நோய்களில் இருந்து வேம்பு மனிதர்களை காக்கிறது. வேம்பு ஜூஸ் நமக்கு அளிக்கும் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
சருமத்திற்கு நன்மை பயக்கும் வேப்பஞ்சாறு: வேம்பு உடலுக்கு பல வித நன்மைகளை பயக்கும் ஒரு பொருளாகும். குறிப்பாக, சருமத்திற்கு வேம்பினால் ஏற்படும் நன்மைகள் ஏராளம்.
சருமத்தில் ஏதேனும் ஒவ்வாமை இருந்தால், பெரும்பாலான மக்கள் வேப்பிலையை நீரில் போட்டு, அந்த நீரில் குளிக்கிறார்கள். உடலுக்கு நன்மை அளிப்பதில், வேம்பு சாறும் குறைந்ததல்ல. இந்த சாறு கசப்பாக இருந்தாலும், உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது எடை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதிலும், சருமத்தைப் புத்துணர்ச்சியூட்டுவதிலும் பயனுள்ளதாக இருக்கிறது. இதைத் தவிர, வேம்பின் மற்ற நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
ஈறு பிரச்சனையிலும் நன்மை பயக்கும்
ஈறு பிரச்சனையை நீக்க வேப்பம்பூ சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உண்மையில், வேப்பம்பூ சாறு குடிப்பதால் ஈறுகள் மற்றும் பற்களில் உள்ள பிரச்சனை குறைகிறது. நம் நாட்டில் பல நூற்றாண்டுகளாக வேப்பங்குச்சிகள் பல் தேய்க்க பயன்படுத்தப்படுவது அனைவரும் அறிந்ததே. இது வாயில் பாக்டீரியா வளரும் அபாயத்தைக் குறைக்கிறது. வேப்பம்பூ சாற்றை மவுத் வாஷ் போல் பயன்படுத்தி, அதன் மூலம் வாயை கொப்பளித்தால், அது பற்களில் இருந்து பிளேக்கை குணப்படுத்துவதோடு, ஈறுகளின் பிரச்சனையையும் நீக்குகிறது.
மேலும் படிக்க | Hair loss Treatment: முடி உதிர்விலிருந்து விடுபட ஸ்பெஷல் மூலிகை தண்ணீர்
முகம் பளபளக்கும்
சருமத்தில் பளபளப்பைக் கொண்டுவர, கண்டிப்பாக வேப்பம் சாறு குடிக்க வேண்டும். வேப்பம்பூ சாறு இயற்கையாகவே நச்சு நீக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதனை பயன்படுத்தினால், உங்கள் உடலில் இருக்கும் நச்சுப் பொருட்கள் வெளியேறும். வேப்பஞ்சாறு உடலில் உள்ள அழுக்குகளை நீக்கி, சருமத்தை பளபளப்பாக மாற்றும்.
எடை கட்டுப்படுத்தப்படும்
எடையைக் கட்டுப்படுத்தவும் வேப்பஞ்சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை மிகச் சிலரே அறிந்திருப்பார்கள். அதன் நுகர்வு செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது உங்கள் உடல் கலோரிகளை வேகமாக எரிக்கிறது. இதனால் உங்கள் எடையை மிக வேகமாக குறைக்க முடியும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )
மேலும் படிக்க | சர்க்கரை நோயாளிகள் வெல்லம் போட்டு டீ குடிக்கலாமா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR