நாம் அனைவரும் அலுவலக வேலை, நண்பர்கள், திருமணம், குடும்ப விஷயங்கள் மற்றும் பிற விஷயங்களில் மிகவும் பிஸியாக இருப்பதால், நமது ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள மறந்து விடுகிறோம். பெரும்பாலானோர் நேரம் இல்லை என்ற காரணத்தை கூறி, உடற்பயிற்சி செய்வது இல்லை.தினமும் வெளியில் ஜங்க் ஃபுட்களை சாப்பிடும் பழக்கமும் உள்ளது. இவை அனைத்தும் நம் உடலில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நம் நரம்பு மண்டலுமும் பலவீனமடைகின்றன. நரம்புகள் பலவீனமாக இருக்கும் போது, ​​உடலில் சரியான இரத்த ஓட்டம் இருக்காது. அதனால் பல பிரச்சனைகள் எழுகின்றன. ஆனால் உங்கள் உணவு முறையை ஆரோக்கியமாக மாற்றுவதன் மூலம் உங்கள் நரம்புகளை இயற்கையாக வலுப்படுத்தலாம். அதற்கு உங்கள் டயட்டில் எந்தெந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலர் பழங்கள்


உலர் பழங்களை சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. அதில் ஒன்று நமது நரம்புக மண்டத்தை வலுவாக்குவது. உலர் பழங்களில் மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. இது உங்கள் உடலின் நரம்புகளுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து. நரம்பு பிரச்சனை உள்ளவர்கள் மட்டுமின்றி, அனைவரும் பாதாம், முந்திரி, வாதுமை பருப்புகள் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால், நரம்பு மண்டலம் வலுவாக இருக்கும்.


மீன் உணவுகள்


ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நரம்புகளுக்கு மிகவும் முக்கியம். இது நரம்புகளுக்கு பலம் தரும். மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. அதனால் தான் மீன்களை உணவில் சேர்த்துக்கொள்வது நரம்புகளை வலுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


மேலும் படிக்க | Health Alert: சிறுநீரக கல் இருந்தால் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!


பச்சை காய்கறிகள்


பச்சை காய்கறிகளில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. வைட்டமின் பி, சி, ஈ, மெக்னீசியம், தாமிரம், ஃபோலேட் மற்றும் கால்சியம் ஆகியவை பச்சை காய்கறிகளில், அதிக அளவில் காணப்படுகின்றன., இது உங்கள் நரம்புகளின் பலவீனத்தை நீக்குகிறது. அவற்றை உங்கள் உணவின் சேர்த்து கொள்வது நரம்பு பிரச்சனைகளில் இருந்து உங்களைக் காக்கும்


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Anemia: மாதுளை - பீட்ரூட் மட்டுல்ல; இதுவும் ரத்த சோகையை குணப்படுத்தும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ