பச்சை காய்கறிகள் இதய நோய் அபாயத்தை தடுக்கிறதா; ஆய்வு கூறுவது என்ன!

பச்சைக் காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் இதய நோய்களைத் தவிர்க்கலாம் என்று இதுவரை நம்பப்பட்டு வந்த நிலையில், பிரிட்டனில் நடந்த ஆராய்ச்சியில் வியப்பூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 22, 2022, 01:23 PM IST
  • காய்கறிகளை சாப்பிடுவது இதய நோய்களை பாதிக்கிறது
  • ஆக்ஸ்போர்டில் 4 லட்சம் பிரிட்டன் வாசிகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது
  • அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள்.
பச்சை காய்கறிகள் இதய நோய் அபாயத்தை தடுக்கிறதா; ஆய்வு கூறுவது என்ன! title=

பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் இதய நோய்களை முற்றிலுமாக தடுக்கலாம் என்பது பொதுவான நம்பப்படுகிறது. பிரிட்டனில் 4 லட்சம் பேரிடம் 12 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்தபோது, ​​அதில் ஆச்சரியமான முடிவுகள் வெளியாகின.

4 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வு

டெய்லி மெயிலில்  செய்தியில், ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் 4 லட்சம் பிரிட்டன் மக்களிடம் நடத்திய ஆய்வில், இதயப் பிரச்சினைகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். காய்கறிகள் சாப்பிடுவதால் இதயப் பிரச்சனைகள் வரும் அபாயத்தை குறைக்க முடியாது என்று கண்டறிந்துள்ளனர். காய்கறிகளை சாப்பிடுவது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு முக்கியமாக கூறப்படுகிறது என்றாலும், இதய பிரச்சனைகள் ஏற்படுவதற்கான அபயத்தை குறைக்கவில்லை என கூறப்படுகிறது. 

12 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆராய்ச்சி

பெரிய அளவில் நடத்தப்பட்ட UK ஆய்வு, காய்கறிகள் இதய நோயைத் தடுக்க உதவாது என்று கூறியுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 12 ஆண்டுகளாக கண்காணிக்கப்பட்ட 400,000 பிரிட்டன் மக்களின் ஆரோக்கியம் குறித்த தரவை ஆய்வு செய்தனர். இந்த காலகட்டத்தில் 18,000 பேருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற பெரிய இதய பிரச்சனைகள் ஏற்பட்டன.

இதய பிரச்சனைகளை தீர்க்க காய்கறிகளால் எந்த பலனும் இல்லை

பங்கேற்பாளர்களிடம் ஒவ்வொரு நாளும் எத்தனை காய்கறிகள் சாப்பிடுகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதில் திரட்டிய தகவல்கள் இதய நோய் விகிதத்துடன் ஒப்பிடப்பட்டது. ஒட்டுமொத்தமாக, மிகவும் அதிக அளவில் பச்சையான காய்கறிகளை உண்பவர்களுக்கு, மற்ற வகை உணவுகளை உண்பவர்களைக் காட்டிலும் இதய நோய் வருவது  15 சதவீதம் குறைவகா இருந்தது. எனினும் சமைத்த காய்கறிகளில் உண்பவர்கள் தொடர்பாக தகவல் எந்த வித்தியாசமும் இல்லை, ஆனால் பணம் மற்றும் வாழ்க்கை முறை போன்ற பிற காரணிகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டபோது, ​​​​பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் கிடைக்காமல் போய் விடுகிறது.

மேலும் படிக்க | இதய ஆரோக்கியம்: மாரடைப்பு அபாயத்தை நீக்கும் ‘சிறந்த’ உணவுகள்!

காய்கறிகள் சாப்பிடுவதற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை

ப்ரோக்கோலி, கேரட் மற்றும் பட்டாணி போன்ற பல உணவுகள் இதய நோய் ஏற்படுவதை தடுப்பதில் சிறப்பாக செயல்படவில்லை என்று ஆய்வு முடிவு கூறுகிறது. காய்கறிகள் சாப்பிடுவதற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் இடையே உள்ள எந்தவொரு தொடர்பும் இல்லை என்றாலும், காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்கள் தங்கள் வாழ்க்கையின் மற்ற அம்சங்களில் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்கிறடு ஆய்வு.

மேலும் படிக்க | Health Alert! மறதி, குழப்பம் அதிகமாக இருக்கிறதா; Vitamin B குறைபாடு இருக்கலாம்!

காய்கறிகளை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

சராசரியாக 56 வயதுடைய 399,586 பிரிட்டன் வாசிகளின் NHS தரவை ஆராய்ச்சி ஆய்வு செய்தது.  தினசரி  எடுத்துக் கொள்ளும் காய்கறிகளின் மொத்த அளவு ஒரு நபருக்கு ஐந்து தேக்கரண்டி என்ற அளவில் இருந்தது. இருப்பினும், இணை ஆசிரியர் டாக்டர் பென் லேசி கூறுகையில், காய்கறிகள் நிறைந்த சமச்சீரான ஆரோக்கிய உணவை உட்கொள்வது, ஆரோக்கியமான எடையை பராமரிப்பது நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் சில புற்றுநோய்கள் உட்பட பெரிய நோய்களின் அபாயத்தைக் குறைப்பதற்கும் ஒரு முக்கிய அம்சமாகும். எனவே மக்கள் காய்கறிகளை சாப்பிடுவதை நிறுத்தக்கூடாது என்று நிபுணர்கள் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க | Kidney Health: சிறுநீரகத்தை டேமேஜ் செய்யும் இந்த '5' உணவுகளை தவிர்க்கலாமே..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News