Home Remedies For Cough: இருமல் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. அதுவும் பருவமழை காலம், குளிர்காலம் ஆகிய நேரங்களில் இதை கண்டிப்பாக அனுபவிக்கிறோம். இருமல் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. பொதுவாக சளி, காய்ச்சல் அல்லது ஒவ்வாமைக்கான எதிர்வினையாக இருமல் ஏற்படுகின்றது. ஆனால், இதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு அலட்சியப்படுத்தக்கூடாது. ஏனெனில் சில சமயங்களில் இது கடுமையான நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாம் பொதுவாக இருமல் ஏற்படும் போது செய்யும் சில தவறுகளையும், நாம் கண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களையும் பற்றி இந்த பதிவில் காணலாம். இவற்றில் கவனம் செலுத்தினால் நாம் பல பிரச்சனைகளை தவிர்க்க முடியும். 


இருமல் உள்ளபோது செய்யக்கூடாத தவறுகள்


இருமலை அடக்குவது


பலர் இருமலை அடக்க முயற்சி செய்கிறார்கள். குறிப்பாக பொது இடங்களில் இருக்கும்போது இருமலை அடக்க முயல்கிறோம். ஆனால் அவ்வாறு செய்வது தீங்கு விளைவிக்கும். இருமலின் போது, ​​நுரையீரலில் இருந்து சளி வெளியேறுகிறது. அதை அடக்கினால் சளி வெளியேறாமல் நுரையீரலில் குவிந்து தொற்று அதிகரிக்கும்.


போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது


இருமலில் இருந்து நிவாரணம் பெற தண்ணீர் குடிப்பதே சிறந்த வழி. நீர் சளியை நீர்த்துப்போகச் செய்கிறது. இதனால் தண்ணீர் எளிதாக சளி வெளியேற்ற உதவுகிறது. இருமல் இருக்கும்போது போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால், தொண்டை வறட்சி ஏற்படும்.


அறையில் உலர்ந்த காற்று


வறண்ட காற்று உள்ள இடத்தில் இருந்தால், அதனால் தொண்டை எரிச்சல் ஏற்பட்டு இருமல் அதிகரிக்கும். ஹ்யுமிடிஃபையரை பயன்படுத்தி அறையில் ஈரப்பதத்தை பராமரிக்க முயற்சிக்கவும்.


மேலும் படிக்க | High Cholesterol: எகிறும் கொலஸ்ட்ராலை ஒழித்துக் கட்ட உதவும்... சில சட்னி வகைகள்


புகைபிடித்தல் மற்றும் மாசுபாடு


புகைபிடித்தல் (Smoking) மற்றும் மாசுபாடு (Pollution) காரணமாக நுரையீரல் கடும் சேதத்திற்கு ஆளாகிறது. இதுமட்டுமின்றி இதனால் இருமலும் அதிகரிக்கின்றது. அதேபோல் புகைப்பிடித்தல் இருமலுக்கு எதிரி. புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதை விட்டுவிடுவது நல்லது.


ஓய்வு இல்லாமல் இருப்பது


இருமலில் இருந்து மீள போதுமான ஓய்வு எடுப்பது மிகவும் அவசியமாகும். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது, ​​உங்கள் உடல் ஆரோக்கியத்தை மீட்க ஓய்வு தேவைப்படுகிறது.


ஆரோக்கியமற்ற உணவு


வறுத்த, காரமான, குளிர்ச்சியான மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் இருமலை அதிகரிக்கும். ஆகையால் இவற்றைத் தவிர்க்க வேண்டும். இவை உங்கள் செரிமான அமைப்பை சீர்குலைத்து இருமலை அதிகரிக்கும்.


இருமலில் நிவாரணம் பெறுவதற்கான வீட்டு வைத்தியம்


- வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிப்பது தொண்டை எரிச்சல் மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
- தேன் உட்கொள்ளலாம். தொண்டை புண் மற்றும் இருமலை குறைக்க உதவும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தேனில் அதிகம் உள்ளன.
- இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருமலை குறைக்க உதவும். இஞ்சியை கொதிக்க வைத்து, வடிகட்டி நீரை குடிக்கலாம்.
- பூண்டில் வைரஸ் தடுப்பு பண்புகள் உள்ளன. அவை இருமல் மற்றும் பிற தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவும்.
- துளசியில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகள் உள்ளன. இதை அப்படியே மென்று சாப்பிடலாம். துளசி நீரும் குடிக்கலாம்.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Anti-Ageing Tips: வயசானாலும் இளமையா இருக்க.... ‘இந்த‘ விதைகள் டயட்டில் இருக்கட்டும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ