குரங்கு அம்மையின் பொதுவான அறிகுறிகள் என்ன? இதற்கு தடுப்பூசி உள்ளதா?

Monkeypox Symptoms: கடந்த சில நாட்களில், காங்கோவில் சுமார் 16,700 பேர் Mpox தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி இதனால் 570 பேர் இறந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 20, 2024, 12:12 PM IST
  • Mpox வைரஸின் அறிகுறிகள் என்ன?
  • குரங்கு அம்மை நோய்க்கான சிகிச்சை என்ன?
  • குரங்கு அம்மையை தவிர்ப்பதாற்கான வழிகள் என்ன?
குரங்கு அம்மையின் பொதுவான அறிகுறிகள் என்ன? இதற்கு தடுப்பூசி உள்ளதா? title=

Monkeypox Symptoms: கொரோனா தொற்றின் கொடூரமான தாக்கத்திலிருந்து உலக மக்கள் இப்போதுதான் சற்று மீண்டும் வந்துள்ளார்கள். ஆனால் அதன் பின்னர் அவ்வப்போது பல வைரஸ் தொற்றுகள் தங்கள் கோர முகத்தை காட்டி அச்சுறுத்தியுள்ளன. இப்போது அந்த வரிசையில் மங்கிபாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மையும் மக்களிடையே பீதியை கிளப்பி வருகிறது. மீண்டும் குரங்கு அம்மை வேகமாக பரவி வருகிறது.

Mpox என்றும் அழைக்கபப்டும் குரங்கு அம்மை வைரஸால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். இது பாதிக்கப்பட்ட நபர்களுடனும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களுடனும் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது. எனினும் இது ஒரு புதிய நோய் அல்ல. 1958 ஆம் ஆண்டிலேயே முதன் முதலாக இதனால் டென்மார்க்கில் ஒருவர் பாதிக்கப்பட்டார்.

ஆனால் சமீபகாலங்களில் இந்த வைரஸ் தொற்று நோயாக உருவெடுத்துள்ளது. கடந்த சில நாட்களில், காங்கோவில் சுமார் 16,700 பேர் Mpox தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி இதனால் 570 பேர் இறந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 115 நாடுகள் MPOX ஆல் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவும் அடங்கும். மார்ச் மாதத்தில் இங்கு 30 பேர் இதனால் பாதிக்கப்பட்டனர். 

இந்தியாவில் குரங்கு அம்மை

இதற்கிடையில் தற்போது மீண்டும் முழு வீரியத்துடன் பரவும் குரங்கு அம்மை தொற்றை தடுக்க இந்தியாவில் முழு வீச்சில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைகளில் உள்ள அதிகாரிகளுக்கு குரங்கு அம்மை அறிகுறிகளைக் கொண்டிருக்கும் சர்வதேச பயணிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Mpox நோயாளிகளை தனிமைப்படுத்தவும், நிர்வகிக்கவும், சிகிச்சை அளிக்கவும் டெல்லியில் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை, சப்தர்ஜங் மருத்துவமனை மற்றும் லேடி ஹார்டிங் மருத்துவமனை ஆகிய மூன்று அரசு மருத்துவமனைகள் முக்கிய இடங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. Mpox வழக்குகளை கையாள மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த மருத்துவமனைகள் நோடல் மையங்களாக நியமிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தகவல் அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

Mpox வைரஸின் அறிகுறிகள் (Symptoms of Monkeypox)

- உடலில் சீழ் நிறைந்த கொப்புளங்கள்
- காய்ச்சல்
- தலைவலி
- தசைகளில் வலி
- முதுகு வலி
- பலவீனம்
- தொண்டையில் வீக்கம்

மேலும் படிக்க | சுகர் லெவலை சூப்பராக குறைக்கும் சிறுதானியங்கள்... மிஸ் பண்ணாதீங்க

குரங்கு அம்மை நோய்க்கான சிகிச்சை என்ன (Treatment For Monkeypox)

தற்போது வரை, குரங்கு அம்மை காய்ச்சலுக்கு தடுப்பூசி எதுவும் இல்லை. இதனால், இதை கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது. இருப்பினும், குரங்கு அம்மை அறிகுறிகள் தோன்றினால், அந்த நோயாளிக்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சையைத் தொடங்குவது குணமடைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

குரங்கு அம்மையை தவிர்ப்பதாற்கான வழிகள்

- குரங்கு அம்மையைத் தவிர்ப்பதற்கான மிக முக்கியமான விஷயம், விலங்குகளுடன் பாதுகாப்பற்ற தொடர்பைத் தவிர்ப்பது என உலக சுகாதார அமைப்பான WHO பரிந்துரைக்கிறது.

- நோய்வாய்ப்பட்ட மற்றும் இறந்த விலங்குகளை பாதுகாப்பின்றி தொடுவதையும் அவற்றின் இறைச்சியை உண்பதையும் தவிர்க்க வேண்டும்.

- இது தவிர, பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து விலகி இருப்பது மிகவும் முக்கியம். 

- பாதிக்கப்பட்ட நபர் பயன்படுத்திய பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டாம்.

- உடல் உறவில் ஈடுபடும்போது பாதுகாப்பு முறைகளை கடைபிடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | காய்ச்சல், சொறி, தலைவலி, முதுகுவலி... குரங்கு அமை அறிகுறிகளின் முழு லிஸ்ட் இதோ, உஷார் மக்களே!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News