தயிருடன் இந்த 5 பொருட்களை சாப்பிட வேண்டாம், இல்லையெனில்
தயிரின் சுவை பெரும்பாலான மக்களை ஈர்க்கிறது, அதனால்தான் நாம் அதை பல உணவுப் பொருட்களுடன் கலக்கிறோம், ஆனால் இவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம்.
புதுடெல்லி: பலர் பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர் அதிகம் சத்துக்கள் மிகுந்தவை. இதனை தினசரி உணவில் சிறிதளவாவது சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு நிறைய நன்மைகள் உண்டாகும். அற்புத சக்தி படைத்த தயிர் அதிக கால்சியம், விட்டமின் b12, விட்டமின் b2, பொட்டாசியம் போன்ற சத்துக்களை தன்னுள் அடக்கி வைத்துள்ளது. தினமும் உணவில் தயிர் சேர்த்து கொள்பவர்கள் எந்தெந்த உணவுகளை உடன் சேர்த்துக் கொள்ளக் கூடாது? அப்படி சேர்த்தால் என்ன ஆகும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.
தயிருடன் வெங்காயம் சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும்
தயிருடன் வெங்காயம் சாப்பிட்டு வந்தால் அது உங்கள் உடலுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? தயிர், வெங்காயம் இரண்டின் சுவையும் வித்தியாசமானது. வெங்காயம் சூட்டை ஏற்படுத்தும். அதேசமயம் தயிர் குளிர்ச்சி தரும். இவை இரண்டையும் சேர்த்து உண்பதால் அக்கி, சிரங்கு, அரிப்பு, சொரியாசிஸ், வயிறு தொடர்பான பல நோய்கள் உங்களை வாட்டி வதைக்கும்.
மேலும் படிக்க | Vitamin D பற்றாக்குறை கொரோனா நோயாளிகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
தயிருடன் இவற்றை ஒருபோதும் சாப்பிடாதீர்கள்
மாம்பழம் மற்றும் தயிர்
மாம்பழம் மற்றும் தயிர் மறந்து கூட ஒன்றாக சாப்பிட வேண்டாம், இரண்டுமே உடலுக்கு நச்சுகளாக மாறும், ஏனென்றால் அவற்றின் விளைவு முற்றிலும் வேறுபட்டது.
உளுத்தம் பருப்பு
உளுத்தம்பருப்பை தயிருடன் சாப்பிடவே கூடாது, இரண்டுமே வயிற்றுக்குள் சென்று, உடலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தி, செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும்.
பால் மற்றும் தயிர்
பால் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிடக்கூடாது. இப்படி செய்வதால் அசிடிட்டி, கேஸ், வாந்தி பிரச்சனை ஆரம்பமாகிறது. மேலும், செரிமான பிரச்சனையும் ஏற்படலாம்.
வறுத்த பொருட்கள்
பொதுவாக வீடுகளில் தயிர் பரோட்டாவுடன் மிகுந்த ஆர்வத்துடன் சாப்பிடுவதைக் காணலாம், ஆனால் இதைச் செய்யக்கூடாது. இது செரிமானத்தை பாதிக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR