Health Tips: இந்த விஷயங்களை கவனத்தில் வைத்தால் 2022 ஆரோக்கியமான ஆண்டு
கோவிட் தொற்றுநோய் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், உங்கள் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் 2022 ஆண்டு, உங்களுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.
கோவிட் தொற்றுநோய் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், உங்கள் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் 2022 ஆண்டு, உங்களுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.
2021 ஆம் ஆண்டின் முடிவுக்கு வந்துவிட்டோம். தொற்றுநோய் நமது அன்றாட வாழ்வில் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. தொற்றுநோய் நமது வேலை, வாழ்க்கை சமநிலையை மற்றும் உணவு முறைகளையும் பாதித்துள்ளது.
வீட்டிலேயே உணவை உண்ணும் பழக்கமே நல்லது என்ற செய்தி நமக்குக் கிடைத்திருந்தாலும், அதிகப்படியான உணவு என்ற சிக்கலும் தோன்றுகிறது. "இணை நோய்" என்ற வார்த்தையும் தற்போது அதிகம் கேட்கும் வார்த்தையாகிவிட்டது.
உடல் பருமன், சர்க்கரை நோய் (Fat, Diabetics) போன்ற வளர்சிதை மாற்றக் கோளாறுகள் தொடர்ந்து அதிகரித்து வருவது மிகவும் கவலைக்குரிய விஷயம். 2022 ஆம் ஆண்டு நமக்கு மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கவேண்டும். தொற்றுநோய் குறையும், இந்த ஆண்டு நாம் சாதாரண வாழ்க்கையை நடத்த முடியும் என்று நம்புகிறோம்.
புத்தாண்டு தீர்மானம் எடுக்கும்போது, நம்மை நாமே சுயபரிசோதனை செய்துக் கொள்ள முடியும். அந்த சுயபரிசோதனையில் ஆரோக்கியம் முக்கியமான பங்கு வகிக்க வேண்டும். குறைந்தபட்சம், சில வாழ்க்கைமுறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் 2022ல் ஆரோக்கியமாக இருக்கும் என்று சொல்லலாம்.
Also Read | அசைவம் சாப்பிட்டால் கேன்சர் வருமா?
ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும்
அதிக முழு உணவுகளையும், குறைவான பதப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை உண்ணுங்கள். வெளியில் இருந்து வாங்கும் பொருட்களில், லேபிள்களைப் படித்து, சேர்க்கப்பட்ட சர்க்கரைகளைச் சரிபார்க்கவும். அதோடு உணவுகளின் உற்பத்தியில் சேரும் கொழுப்புகள் பற்றியும் எச்சரிக்கையாக இருங்கள். நாம் பல்வேறு தேர்வுகள் கொண்ட சூழலில் வாழ்கிறோம், எனவே புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுப்பது முக்கியம். தரத்தை தீர்மானிக்க கொடுக்கும் முக்கியத்துவத்தை உணவின் அளவிற்கும் கொடுக்க வேண்டியது முக்கியம் ஆகும்.
உடற்பயிற்சி
சூரிய ஒளியில் நடப்பது நாளின் நல்ல தொடக்கமாக இருக்கலாம், நம் உடலுக்கு தேவைப்படும் வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து கிடைக்கிறது. நமது மூட்டுகள் ஒழுங்காக வேலை செய்ய உடற்பயிற்சி (Exercise for health) உதவுகிறது; படிக்கட்டுகளில் ஏறுவது தசைகளை வலுப்படுத்த ஒரு சிறந்த வழியாகும். சைக்கிள் ஓட்டுவது மற்றும் அருகில் உள்ள இடங்களுக்கு நடந்து செல்வது தசைகளை வலுப்படுத்த நல்ல பயிற்சிகளாகும்.
உறக்கம்
உடலுக்கு போதுமான தூக்கம் கிடைக்காமல் போவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. தினசரி குறைந்தபட்சம் 7-8 மணிநேரம் நல்ல தூக்கம் ஒருவரின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை. இரவு உறங்கச் செல்வதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாகவே, கேஜட்டுகளை தூரமாக வைத்துவிட்டால் ஆரோக்கியம் சீர்கெடாது.
Also Read | வாயுத்தொல்லையா? இந்த 5 உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவும்
நீர்சத்து
நீர் வாழ்க்கைக்கு இன்றியமையாதது, சர்க்கரை கலந்த பானங்கள் அல்லது சர்க்கரைகள் சேர்க்கப்பட்ட பழச்சாறுகளை குடிப்பதைத் தவிர்க்கவும். உடற்பயிற்சி செய்யும் போது அல்லது வீட்டு வேலைகளைச் செய்யும்போது வியர்வை வடிவில் உப்புகளை இழக்க நேரிடும். ஒரு கிளாஸ் எலுமிச்சை/புதினா சுவையுடைய தண்ணீரை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குடிப்பது எலக்ட்ரோலைட்டுகளின் இழப்பை ஈடுசெய்ய உதவும்.
கனிமச்சத்து
உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாக இருக்க (immune system) நம் உடலுக்கு பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் தேவைப்படுகின்றன. வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கவும். வைட்டமின்கள் ஏ, பி1, பி9, பி12, வைட்டமின் சி ஆகியவற்றுக்கும் கனிமச் சத்துக்கள் தேவை.
இரும்பு, கால்சியம், ஃபோலிக் அமிலம், கோலின், குரோமியம், மெக்னீசியம், தாமிரம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் கொண்ட உணவுகள் பல்வேறு காய்கறிகள், முட்டைகள், இறைச்சிகள், மீன், பாலாடைக்கட்டி மற்றும் பருப்பு வகைகளில் காணப்படுகின்றன.
வீட்டில் சமைத்த உணவை உண்ணுங்கள். புதிதாக வாங்கிய உணவுப் பொருட்களை சமைத்து சாப்பிடுங்கள். நமது சமையலறையில் சமைக்கும் உணவே ஆரோக்கியமானது!
Also Read | வலுவான நுரையீரலுக்கு இந்த 5 பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR