என்ன செஞ்சாலும் வெயிட் குறையலையா... ‘இந்த’ வெள்ளை உணவுகளை ஒதுக்கினாலே போதும்!
Weight Loss Tips: நம்மில் பலர் தெரிந்தோ தெரியாமலோ நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவு பொருட்களை அதிகம் உட்கொள்கிறோம். அதில் சில வெள்ளை நிற உணவுகள் அடக்கம். இதனை ஒதுக்கி வைத்தாலே, உடல் பருமனை குறைத்து விடலாம்.
Weight Loss Tips: தற்போது மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால் நம்மில் பெரும்பாலானோர் பல விதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். நல்ல ஆரோக்கியத்திற்கு, உங்கள் உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொருட்கள் இருப்பது முக்கியம். ஆனால் இந்த நாட்களில் நம்மில் பலர் தெரிந்தோ தெரியாமலோ நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவு பொருட்களை அதிகம் உட்கொள்கிறோம். அதில் சில வெள்ளை நிற உணவுகள் அடக்கம். இதனை ஒதுக்கி வைத்தாலே, உடல் பருமனை குறைத்து விடலாம். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
அரிசி, மைதா மாவு, சர்க்கரை, உப்பு போன்றவற்றை உணவில் அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். டயட்டில் சேர்க்கப்படும் உணவுப் பொருட்கள் உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக செயலிழப்பு மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல ஆபத்தான நோய்களை உருவாக்குகின்றன. இந்நிலையில், நாம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய வெள்ளைப் பொருட்கள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.
டயட்டில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டிய சில வெள்ளை உணவு பொருட்கள்:
சுத்திரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரை:
சர்க்கரையை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவது உங்களை கடுமையான நோய்களுக்கு ஆளாக்கும். இதில் ஊட்டச்சத்து எதுவுமே இல்லை. இதில் இருப்பதெல்லாம் கலோரி மட்டுமே. இதை அதிகமாக சாப்பிடுவது உங்கள் ஆற்றலைக் குறைப்பது மட்டுமல்லாமல், நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது. உங்களுக்கு இனிப்பு உண்ணும் ஆசை அதிகம் இருந்தால் வெல்லம் அல்லது தேன் சாப்பிடலாம். சக்கரையை முற்றிலும் தவிர்த்தால், உடல் பருமன் வியக்கத்தக்க வகையில் குறையும்
வெள்ளை உப்பு:
வெள்ளை உப்பை அதிகமாக உட்கொள்வது உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதிக உப்பை உட்கொள்வது சிறுநீரகம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. மேலும், எலும்புகளை பலவீனப்படுத்துகிறது, எனவே வெள்ளை உப்பை குறைந்த அளவில் உட்கொள்வதால், உடல் பருமன் குறைவதோடு, நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம்.
மேலும் படிக்க | கோடையில்... சுகர் லெவலை குறைக்க உதவும் சூப்பர் காய்கறிகள் இவை தான்..!!
சுத்திரிக்கப்பட்ட வெள்ளை அரிசி:
அரிசி இல்லாமல் உணவு முழுமையடையாது என்பது உண்மை தான். ஆனால் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை அரிசியை அதிகமாக உட்கொள்வது சர்க்கரையுடன் சேர்ந்து உடல் பருமன் பிரச்சனையை அதிகரிக்கிறது. எனவே, வெள்ளை அரிசிக்கு பதிலாக பழுப்பு அரிசியை உட்கொள்ளவது பலனைத் தரும். வெள்ளை அரிசியை தவிர்க்க முடியாது என்றால், அதன் அளவை குறைத்துக் கொண்டு, காய்கறிகள், பருப்புகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
மைதா மாவு:
மைதா மாவு ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. மைதாவில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உடலில் அதிக இன்சுலினை உற்பத்தி செய்ய காரணமாகின்றன. இதனால் மக்கள் மிகவும் பசியாக உணர்கிறார்கள் மற்றும் அதிகமாக சாப்பிடுகிறார்கள். இது உடல் எடையை அதிகரிப்பது மட்டுமின்றி இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதோடு செரிமான அமைப்பு பிரச்சனைகளையும் அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், மைதாமாவுக்கு பதிலாக ராகி போன்ற சிறுதானிய மாவுகளைப் பயன்படுத்துவது பலன் தரும்.
வெள்ளை பிரெட்:
மைதா மாவினால் தயாரிக்கப்பட்ட வெள்ளை ரொட்டி ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு. உண்மையில், வெள்ளை ரொட்டி சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட மாவு தயாரிக்கும் போது, வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் ஆகியவை தானியங்களிலிருந்து பிரிக்கப்படுகின்றன. இதை சாப்பிடுவதால் உடல் பருமன் வேகமாக அதிகரிக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சுட்டெரிக்கும் வெயிலில் குழந்தைகளை பாதுகாக்க டிப்ஸ்! பெற்றோர் கவனத்திற்கு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ