சுகர் லெவல் முதல் வெயிட் லாஸ் வரை... முளை கட்டிய வெந்தயத்தை அடிக்கடி சாப்பிடுங்க
முளை கட்டிய வெந்தயத்தில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இது பால், பால் பொருட்கள், சிக்கன்-ஆட்டிறைச்சி போன்ற உணவு பொருட்களை விட அதிக சத்தானது.
முளைகட்டிய தானியங்கள் ஊட்டசத்தினை அள்ளிக் கொடுக்கும் சிறந்த ஆரோக்கியமான உணவுகள். ஏனென்றால், முளை கட்டுவதால் தானியங்களில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பு இரட்டிப்பாகிறது. அதோடு, எளிதில் செரிமானம் ஆகும் என்பதால், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு. முளை கட்டிய தானியங்கள் என்றாலே நம் மனதில் தோன்றூ முதல் உணவு, முளை கட்டிய பயறு, முளை கட்டிய கொண்டைக் கடலை ஆகியவை தான். முளை கட்டிய வெந்தயம் பற்றி அதிகம் நம்மில் பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டோம்.
முளை கட்டிய வெந்தயத்தில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இது தவிர, இரும்பு, கால்சியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது, இது பால், பால் பொருட்கள், சிக்கன்-ஆட்டிறைச்சி போன்ற உணவு பொருட்களை விட அதிக சத்தானது. இதனை அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் எண்ணற்ற பலன்களை அறிந்து கொள்ளலாம்.
எலும்புகளை பலப்படுத்தும்
வெந்தய முளைகளில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. குறிப்பாக முதுமையில் எலும்பு வலிமையைப் பராமரிக்க முளை கட்டிய வெந்தய உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள சத்துக்கள் எலும்புகளின் கட்டமைப்பை மேம்படுத்தி, எலும்பு முறிவுகளிலிருந்து பாதுகாக்கிறது.
இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்
முளைத்த வெந்தய விதையில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. முளைத்த வெந்தயம் உடலின் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது, இது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். அதுமட்டுமின்றி, முளை கட்டியவெந்தயத்தை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயின் அபாயத்தையும் குறைக்கலாம்.
உடல் பருமன் குறைய
முளை கட்டிய வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளதால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு (Weight Loss Tips) சிறந்த தேர்வாக இருக்கும். இவற்றில் உள்ள நார்ச்சத்து மற்றும் சத்துக்கள் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். இதனால் அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்படும். மேலும், முளை கட்டிய வெந்தயம் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது.
மேலும் படிக்க | தொப்பை கொழுப்புக்கு உடனடி தீர்வளிக்கும் சமையலறை மசாலாக்கள்: ட்ரை பண்ணி பாருங்க
இதய ஆரோக்கியம்
முளை கட்டிய வெந்தயத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் முளை கட்டிய வெந்தயம் உதவுகிறது. மேலும், இதில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.
சருமம் மற்றும் கூந்தலுக்கு நன்மை பயக்கும்
முளை கட்டிய வெந்தயத்திகல் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி உள்ளது, இது சருமத்தின் பொலிவை அதிகரிக்க உதவுகிறது. முகப்பரு, சுருக்கங்கள் மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகளை குறைக்க இவை உதவியாக இருக்கும். இது தவிர, முளை கட்டிய வெந்தயம் முடியை வலுப்படுத்தவும், முடி உதிர்வதைத் தடுக்கவும், புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ