பெண்களின் உடல் பருமனுக்கான காரணங்கள்: உடல் பருமன் நமது நாட்டில் மட்டுமல்ல, உலகிலும் ஒரு தீவிர பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. உடல் செயல்பாடு இல்லாதபோது உடல் பருமன் மிகவும் கடுமையான பிரச்சினையாக மாறும். ஆண்களை விட பெண்களில் உடல் பருமன் அதிகமாக காணப்படுகிறது. சில பெண்களுக்கு சிறுவயதிலேயே உடல் குண்டாகத் தொடங்கிவிடுகிறது. இதற்குப் மரபணு ஒரு காரணமாக இருக்கலாம். அதே சமயம் சில பெண்களுக்கு வயது ஏற ஏற எடை கூடுகிறது. பொதுவாக அனைத்து வீடுகளிலும் வயதான பெண்கள் பெரும்பாலும் பருமனான உடலுடனேயே இருப்பார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வயது அதிகமாகும்போது பெண்களின் உடல் எடையும் அதிகமாவதற்கு பல காரணங்கள் இருப்பதாக மருத்துவர்களும் சுகாதார நிபுணர்களும் கூறுகிறார்கள். பெண்களுக்கு வயதுக்கு ஏற்ப பல காரணங்களால் எடை அதிகரிக்கிறது. அதற்கான காரணங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 


உடல் பருமன் ஒரு நோயா?


நீங்கள் ஒரு பெண்ணாக இருந்து, திடீரென உடல் எடை அதிகரித்தால், அது சில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். பிசிஓடி அல்லது பிசிஓஎஸ் பிரச்சனையால் பெண்களின் எடை அதிகரிக்கத் தொடங்குகிறது. இது தவிர, தைராய்டு, மனச்சோர்வு, பதட்டம் அல்லது குடல் தொடர்பான பிரச்சனைகளால் பெண்களின் எடை அதிகரிக்கலாம்.


நீண்ட நேரம் அமர்ந்துகொண்டு இருப்பது


பொதுவாக ஆண்களை விட பெண்கள் அதிக நேரம் அமர்ந்திருப்பார்கள். எனினும், இது அவர்களது வாழ்க்கை முறையை பொறுத்து மாறுவதுண்டு. பெண்கள் ஒரே இடத்தில் இருந்தபடி, அமர்ந்தபடி அதிக பணிகளை செய்கிறார்கள். அலுவலக பணிகள் மற்றும் அமர்ந்தபடியே வீட்டு வேலைகளையும் செய்கிறாள். இவை அனைத்தும் உடல் எடை அதிகரிக்க காரணங்களாக அமைகின்றன. 


மேலும் படிக்க | மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த இலைகள் சுகரை குறைக்கும்


போதுமான தூக்கமின்மை


பணிபுரியும் பெண்களுக்கு ஆண்களை விட இரு மடங்கு பொறுப்பு உள்ளது. குழந்தைகள் பராமரிப்பு, சமையல் வேலை, வீட்டின் பிற பணிகள் என பெண்கள் பல வித வேலைகளை செய்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், பெண்களின் தூக்கம் அதிகமாக பாதிக்கப்படுகின்றது. அவர்கள் அரிதாகவே தூங்குகிறார்கள். தூக்கம் குறைவாக இருந்தால், பெண்களின் எடை வேகமாக அதிகரிக்கத் தொடங்குகிறது.


உடலில் நீர் பற்றாக்குறை


நீரிழப்பும் எடை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். பல பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் பெண்கள் பெரும்பாலும் தங்களை சரியாக கவனித்துக்கொள்வதில்லை. அவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை. இதனால் அவர்களது உடலில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுகின்றது. இதன் காரணமாக சோர்வு நீடிக்கிறது. சோர்வின் காரணமாக எப்போதும் பசி உணர்வு இருக்கிறது. இது அதிக அளவு உணவு உட்கொள்ளலுக்கு காரணமாகிறது. இதன் காரணமாகவும் உடல் எடை அதிகரிக்கின்றது. 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | வெறும் வயிற்றில் இந்த ஜூஸை குடிங்க... ஏற்படும் அற்பத மாற்றங்களை பாருங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ