உங்களுக்கு PCOS பிரச்சனை இருக்கா? இந்த உணவுகள் எல்லாம் உங்கள் எதிரி, ஜாக்கிரதை!!

PCOS Diet: உடல் எடையை குறைக்க விரும்பும் பிசிஓஎஸ் உள்ள பெண்கள் தங்கள் உணவில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். பி.சி.ஓ.எஸ் சிகிச்சைக்கு நன்மை பயக்கும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 16, 2023, 02:34 PM IST
  • பி.சி.ஓ.எஸ் பெண்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவது சகஜம்.
  • சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் நம் உடலில் அதிக இன்சுலின் உற்பத்திக்கு காரணமாகின்றன.
  • இது நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது.
உங்களுக்கு PCOS பிரச்சனை இருக்கா? இந்த உணவுகள் எல்லாம் உங்கள் எதிரி, ஜாக்கிரதை!! title=

பிசிஓஎஸ் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை: பிசிஓஎஸ், அதாவது பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் பிரச்சனை பெண்களிடையே மிகவும் பொதுவானதாகிவிட்டது. பிசிஓஎஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய், மாதவிடாயின்மை, எடை அதிகரிப்பு, முகப்பரு மற்றும் செதில் தோல், ஹைப்பர் பிக்மென்டேஷன், முடி உதிர்தல், மனநிலை மாற்றங்கள் மற்றும் இதுபோன்ற பல அறிகுறிகள் தென்படும். எடை அதிகரிப்பு பிசிஓஎஸ் உடன் தொடர்புடைய மிகவும் பொதுவான பிரச்சனையாகும்.

எடை அதிகரிப்பு பிசிஓஎஸ்-ன் தீவிர நிலையை இன்னும் ஆபத்தானதாக மாற்றுகிறது . மேலும் இது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. உடல் எடையை குறைக்க விரும்பும் பிசிஓஎஸ் உள்ள பெண்கள் தங்கள் உணவில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். பி.சி.ஓ.எஸ் சிகிச்சைக்கு நன்மை பயக்கும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

பிசிஓஎஸ் பிரச்சனை உள்ள பெண்கள் தவறுதலாக கூட இவற்றை சாப்பிடக்கூடாது

- வெள்ளை அரிசி, சாக்லேட், ரொட்டி மாவு, உருளைக்கிழங்கு மற்றும் பேஸ்ட்ரிகள் போன்ற உணவுகளில் மாவுச்சத்து அதிகம் காணப்படுகிறது. 

- சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் பிசிஓஎஸ்-க்கு மிக மோசமான உணவாகும், ஆகையால் இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 

- பி.சி.ஓ.எஸ் பெண்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவது சகஜம். 

- சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் நம் உடலில் அதிக இன்சுலின் உற்பத்திக்கு காரணமாகின்றன.

- இது நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது

மேலும் படிக்க | Diabetes diet: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆயுர்வேதத்தின் அருமருந்து உணவுகள் 

இவற்றை உட்கொள்ளலாம்:

- பழங்கள் (பப்பாளி, வாழைப்பழம், ஆப்பிள், கிவி), காய்கறிகள் (ப்ரோக்கோலி, காலிஃபிளவர், கீரைகள், பச்சை காய்கறிகள்), கடலை பருப்பு, அக்ரூட் பருப்புகள், அத்திப்பழங்கள், பேரிச்சம்பழம், பழுப்பு அரிசி ஆகியவற்றை உட்கொள்ளுங்கள். 

- சர்க்கரைக்குப் பதிலாக வெல்லத்தூள் சேர்க்கவும். 

- உணவு கட்டுப்பாட்டுடன் தினமும் உடற்பயிற்சி செய்வதும் அவசியமாகும். 

காபி உட்பட இந்த விஷயங்களை புறக்கணிக்கவும்

காபியில் காஃபின் உள்ளது. இது உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் (பெண்மைக்கான ஹார்மோன்) அளவை அதிகரிக்கிறது. பிசிஓஎஸ் பிரச்சனை ஏற்பட்டால், ஹார்மோன் அளவுகளில் உள்ள சமநிலை பாதிக்கப்படுகின்றது. காபி இந்த நோயை அதிகரிக்கும். ஆகையால், பிசிஓஎஸ் உள்ள பெண்கள் காபி மற்றும் காஃபின் கலந்த பானங்களை உட்கொள்ளக்கூடாது. 

சோடா, ஃபிஸி பானங்கள் மற்றும் எனர்ஜி ட்ரிங்க்ஸ் அதிக சர்க்கரை அளவைக் கொண்டுள்ளன. இது எரிச்சல் மற்றும் வீக்கத்தையும் ஏற்படுத்தும். மேலும், இந்த பானங்கள் அனைத்திலும் உள்ள அதிகப்படியான சர்க்கரை, கொழுப்பாக உடலால் சேமிக்கப்பட்டு, எடை அதிகரிக்கும். வறுத்த உணவும் இந்த நிலையில் உட்கொள்ள மோசமானது. இது பிசிஓஎஸ்- இன் அறிகுறிகளை அதிகரிக்கிறது. ஆகையால் இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மது அருந்துவது பிசிஓஎஸ்- இல் தீங்கு விளைவிக்கும்

பிசிஓஎஸ் உள்ள பெண்கள் அசைவம் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இது எடை அதிகரிப்பை ஊக்குவிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. அதை உட்கொள்வது உடல் உப்பசத்திற்கு வழிவகுக்கும். இது உடலின் ஹார்மோன் சமநிலையை பாதிக்கிறது. பதப்படுத்தப்பட்ட மாட்டிறைச்சியிலும் உப்பு நிறைந்துள்ளது. ஆகவே பிசிஓஎஸ் உள்ள பெண்கள் இதையும் தவிர்க்க வேண்டும். 

மது அருந்துவது பிசிஓஎஸ்- க்கு தீங்கு விளைவிக்கும். மிதமான மது அருந்துதல் ஈஸ்ட்ரோஜன்-புரோஜெஸ்ட்டிரோன் சமநிலையை சீர்குலைக்கும். மேலும் கர்ப்ப காலத்திலும் இது  ஆபத்தானது. மது, எந்த அளவில் உட்கொள்ளப்பட்டாலும், அது தூக்கத்தை பாதிக்கிறது. 

ஸ்டீக், ஹாக் மற்றும் ஹாம்பர்கர் போன்ற சிவப்பு இறைச்சியை உட்கொள்வது புரோஜெஸ்ட்டிரோன் அளவைக் குறைக்கும். இந்த ஹார்மோன் கர்ப்பம் மற்றும் சாதாரண மாதவிடாய் சுழற்சிக்கு அவசியம். இது உடலில் வீக்கத்தையும் அதிகரிக்கிறது. இது தவிர, சிவப்பு இறைச்சி எடையை அதிகரிக்கிறது. அதன் பயன்பாடு பிசிஓஎஸ்- இன் அறிகுறிகளை அதிகரிக்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Rice Water Benefits: அசத்தும் பலன்கள் தரும் அரிசி கழுவிய தண்ணீர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News