கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாடு இந்த நேரத்தில் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளை அச்சத்தில் வைத்துள்ளது. இந்த மாறுபாட்டின் காரணமாக, கொரோனா தொற்றின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓமிக்ரான் தொற்றின் அறிகுறிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசமாக காணப்படுவது சமீபத்திய கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.


சோர்வால் அவதிப்படும் மக்கள்


'தி சன்' பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, WebMD என்ற தளம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இந்த கணக்கெடுப்பில் பங்கேற்ற நபர்களிடம், டிசம்பர் 23 முதல் ஜனவரி 4-க்குள் அவர்களுக்கு ஏற்பட்ட சோர்வின் அளவு பற்றி கேட்கப்பட்டது. 


கணக்கெடுப்புக்கு பதிலளித்த ஆண்களில் மூன்றில் ஒரு பங்கு ஆண்கள், தங்களுக்கு சோர்வு இருந்ததாக தெரிவித்தார்கள். ஆனால் 40 சதவீத பெண்கள் கொரோனா (Coronavirus) காரணமாக சோர்வை உணர்ந்ததாக கூறியுள்ளனர். இதிலிருந்து பெண்களிடம் அதிக தாக்கம் காணப்படுவது தெளிவாகிறது.


ஓமிக்ரான் (Omicron) தென்னாப்பிரிக்காவை தாக்கியபோது, ​​அதன் முக்கிய அறிகுறிகளில் ஒன்று சோர்வு என கூறப்பட்டது நினைவிருக்கலாம். தனியார் மருத்துவரும் தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவருமான டாக்டர் ஏஞ்சலிக் கோட்ஸி, ஆரம்ப கட்டத்தில் சோர்வு, உடல்வலி மற்றும் தலைவலி ஆகியவை ஓமிக்ரானின் முக்கிய அறிகுறிகள் என்று கூறினார்.


வாழ்க்கை முறையும் காரணமாக இருக்கலாம்


கொரோனாவில் சோர்வு குறைவாக உள்ளதா இல்லையா என்பதை வேறுபடுத்துவது கடினம் என்று மற்றொரு நிபுணர் கூறினார். ஏனெனில் மக்கள் சில நேரங்களில் சோர்வை மற்ற வாழ்க்கை முறை காரணிகளில் சேர்த்துக்கொள்கிறார்கள். 62 சதவீத கொரோனா நோயாளிகளில் சோர்வு முக்கிய அறிகுறியாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.


ALSO READ | Omicron தொற்று: பொதுவான, லேசான, தீவிரமான அறிகுறிகளின் முழு பட்டியல் இதோ


தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சச்சின் நாக்ரானி, இது மன அல்லது உடல் உழைப்பு அல்லது நோயால் ஏற்படும் தீவிர சோர்வு என வரையறுக்கப்படுகிறது என்றார். 'கொரோனாவின் தொடக்கத்தில் சோர்வு ஒரு முக்கிய அறிகுறியாக இருக்கலாம், ஆனால் சில சமயங்களில் அது வேறு சில காரணங்களாலும் ஏற்படுகிறது.' என்று அவர் கூறினார்.


இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்


கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கு எந்த அறிகுறியும் காணப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம் என்று மருத்துவர் கூறினார். இது மிக எளிதாக பரவுவதற்கு அதுவும் ஒரு காரணமாகும். பிரிட்டனின் நோய்வாய்ப்பட்ட மக்களில் சுமார் 20 அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன, இவை கொரோனாவுக்கு காரணமாக இருக்கலாம். மூக்கு ஒழுகுதல், தலைவலி, சோர்வு, வாசனை மாறுதல் மற்றும் பசியின்மை ஆகியவை இந்த அறிகுறிகளில் அடங்கும்.


தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்களுக்கு ஓமிக்ரானின் தாக்கம் குறைவாகவே காணப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், ஓமிக்ரான் நோயாளிகளின் (Omicron Patients) எண்ணிக்கை இங்கிலாந்து மருத்துவமனைகளில் டெல்டாவை விட 50 முதல் 70 சதவீதம் குறைவாக உள்ளது. இப்போது அங்கு தொற்று எண்ணிக்கை சாதனை உச்சத்தை எட்டிய பிறகு, மாறுபாடுகளின் எண்ணிக்கை இங்கு குறையத் தொடங்கியுள்ளது.


ALSO READ | குழந்தைகளில் காணப்படும் 'இந்த' ஒமிக்ரான் அறிகுறிகளை அலட்சியபடுத்த வேண்டாம்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR