Energy Booster: உடலில் ஆக்ஸிஜனை அள்ளி வழங்கும் ‘சில’ பழங்கள்
Energy Booster: நம் உடலின் ஆக்ஸிஜன் அளவு சரியாக இருந்தால், நம்மால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்பட்தோடு, சுவாசப் பிரச்சனைகளும் நம்மை அண்டாமல் இருக்கும்
ஆக்ஸிஜன் நிறைந்த பழங்கள்: மாறிவரும் இன்றைய வாழ்க்கை முறையில், வாழ்க்கையில் ஜெயிக்க நமக்கு மிகுந்த எனர்ஜி தேவைப்படுகிறது. நம் உடலின் ஆக்ஸிஜன் அளவு சரியாக இருந்தால், நம்மால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்பதோடு, சுவாசப் பிரச்சனைகளும் நம்மை அண்டாமல் இருக்கும். மாறாக, நோய்களை எதிர்த்துப் போராடும் வலிமையும் தேவைப்படுகிறது.
இன்றைய மாசு நிறைந்த சுற்றுசூழல் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக சுவாச பிரச்சனை உள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எனவே தங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக நீங்கள் ரொம்பவும் கஷ்டப்பட வேண்டியதில்லை. மாறாக, உங்கள் உணவில் சில பழங்களை சேர்த்துக் கொண்டால் போதும். இவை உடலில் ஆக்சிஜன் அளவை சரி செய்து எனர்ஜியை அள்ளித் தருகிறது. இதற்காக எந்தெந்த பழங்களை சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க சாப்பிட வேண்டிய பழங்கள்
பேரிக்காய் :
ஆப்பிளைப் போன்றே அதிக சத்துக்களைக் கொண்ட பழம் தான் பேரிக்காய். பேரிக்காயை நம் நாட்டின் ஆப்பிள் என்று கூடச் சொல்வார்கள். பேரிக்காய்களை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவுகிறது. பேரிக்காயில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. மேலும் இதில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளது. மேலும், பேரிக்காய்களில் வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், புரதம் மற்றும் தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதை உட்கொள்வதன் மூலம், உங்கள் உடலின் ஆக்ஸிஜன் அளவு சீராக இருக்கும். கை நடுக்கம், பதற்றம் போன்ற பலவீனங்களை நீக்கும்.
மேலும் படிக்க | நீரிழிவு நோயை ஓட விரட்டும் கோதுமை அல்லாத ‘சில’ சப்பாத்திகள்!
பப்பாளி
பப்பாளி இது உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், உடலின் ஆற்றல் அளவை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. நரம்புகள் பலப்படவும், ஆண்மை பிரச்சனை தீராவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும் பப்பாளி உதவும். மேலும், வயிறு பிரச்சனைகளை தீர்ப்பதோடு, ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கிறது. காலையில் இதை உட்கொள்வதன் மூலம் மல சிக்கலில் இருந்து முழுமையாக விடுபடலாம். இதில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், புரதங்கள், வைட்டமின்கள் ஏ, பி, சி போன்ற சத்துக்கள் உள்ளன. எனவே, உங்கள் உடலில் ஆக்சிஜன் குறைந்தால், பப்பாளியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கிவி
கிவியின் சுவை புளிப்பு மற்றும் இனிப்பு. அதன் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் ஆரோக்கிய நன்மை பயக்கும். இரத்தம் உறைவதை தடுக்கவும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. உடலில் இரத்த ஆக்ஸிஜனை அதிகரிக்க உதவும் பல ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. கிவியை உட்கொள்வது கண் பார்வை சிதைவை 36% ஆக குறைக்கிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. கிவியில் காணப்படும் அதிக அளவு ஜீயாக்சாண்டின் மற்றும் லுடீன் கண்பார்வைக்கு உதவுகிறது. விட்டமின் சி, விட்டமின் கே, விட்டமின் ஈ, போலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்களும், நார்ச்சத்துக்களும் காணப்படுகின்றன. இதனுடன் இதை உட்கொள்வதால் உங்கள் முகத்தில் பொலிவும் ஏற்படும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ