Blood Purifier: ரத்தத்தை சுத்தம் செய்ய ‘இந்த’ உணவுகளை டயட்டில் சேர்க்கவும்!

Foods that Purifiies Blood: இரத்தத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் நச்சுக்கள் காரணமாக, இதய தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. சில உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தைச் சுத்தப்படுத்தலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 23, 2023, 05:03 PM IST
  • இரத்தத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் நச்சுக்கள் காரணமாக, இதய தமனிகளில் அடைப்பு ஏற்படுகிறது.
  • கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறிகள்.
  • பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனத்தில் இரத்த உறைதலை தடுக்கும் குணங்கள் உள்ளது.
Blood Purifier: ரத்தத்தை சுத்தம் செய்ய ‘இந்த’ உணவுகளை டயட்டில் சேர்க்கவும்! title=

மோசமான உணவுப்பழக்கம் மற்றும் தற்போதைய வாழ்க்கை முறை காரணமாக உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்து, உடல் நோய்களின் கூடாரமாகி விட்டது. மேலும் அசுத்தங்கள் காரணமாக இரத்தத்தில் நச்சுக்களும் அழுக்குகளும் சேர்கின்றன. இரத்தத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் நச்சுக்கள் காரணமாக, இதய தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் சில உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தைச் சுத்தப்படுத்துவதுடன், நரம்புகளில் சேரும் கொலஸ்ட்ராலையும் வெளியேற்றலாம்.

கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதற்கான அறிகுறிகள்

உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பது மிகவும் ஆபத்தானது. இதற்கு பல அறிகுறிகள் உள்ளன. இந்த அறிகுறிகளைக் கண்டவுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த அறிகுறிகளில் முக்கியமாக உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு வகை இரண்டு, புற தமனி நோய், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவை அடங்கும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

அதிக கொலஸ்ட்ரால் தவிர்க்க, அதிக எண்ணெய் உள்ள உணவுகளை உட்கொள்வதை நிறுத்துங்கள். குறிப்பாக சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயால் செய்யப்பட்ட பொருட்களை புறக்கணிக்கவும். பொரித்த பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்கவும். நீங்கள் காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சிகளைச் செய்வதுடன், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். குறிப்பிட்ட சில உணவுகளை உணவில் சேர்த்து வந்தால் இரத்தம் சுத்தமாகும்.

மேலும் படிக்க | குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட... சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

ரத்தத்தை சுத்தம் செய்யும் சில காய்கறிகள்

கீரை, ப்ரோக்கோலி, வெந்தயம் போன்ற பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது கொலஸ்ட்ராலைக் குறைத்து ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. இது இரத்த அபிவிருத்தி செய்வதோடு, உடலை ஆரோக்கியமாகவும் வைக்கிறது. அதே சமயம் தக்காளியில் உள்ள இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி ரத்த ஓட்டத்தை சீராக்கும். இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்கவும் தக்காளி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பூண்டு சாப்பிடுவதும் நன்மை பயக்கும்

பூண்டு உடலுக்கு சூட்டை கொடுக்கக் கூடியது இதை உட்கொள்வதன் மூலம் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, இதில் அல்லிசின் உள்ளது. இது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மேலும் நரம்புகளில் தேங்கியுள்ள கொலஸ்ட்ராலை சுத்தம் செய்கிறது. மேலும் பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனத்தில் இரத்த உறைதலை தடுக்கும் குணங்கள் இருப்பதால், இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்கும். 

கேரட் இரத்த சிவப்பணு எண்ணிக்கையை அதிகரிக்கிறது

கேரட்டில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள இரும்புச்சத்து உடலில் இரத்த எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இது கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம். கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது

ஓட்ஸ் உணவு

இதய தமனிகளில் உள்ள கொலஸ்ட்ராலை சுத்தம் செய்ய, காலை உணவில் ஓட்ஸை உட்கொள்ளத் தொடங்குங்கள். இதனை பால் அல்லது தயிர் உடன் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இதனை ஸ்மூத்தியாகவும் அருந்தலாம். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நரம்புகளில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

பார்லி உணவு

தானியங்களுக்குப் பதிலாக பார்லியை சேர்த்துக் கொள்வதும் மிகவும் பலன் தரும். இதற்குக் காரணம் ரு முழு தானியம். இதை சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமடைவதோடு, அதிகப்படியான கொழுப்பும் நீங்குகிறது.

(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | முட்டையை ‘இப்படி’ சாப்பிட்டால் போதும்... ரத்த நாளங்களில் உள்ள அடைப்பு நீங்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News