மருத்துவமனைகளில் போடப்படும் ஊசிகளைக் (syringes) கண்டு இனி பயபடதேவையில்லை. வழக்கமான ஊசிகளுக்கு பதிலாக வலிகள் இல்லாத ஊசிகளைத் தயாரித்து சாதனை புரிந்துள்ளனர் அமெரிக்காவை டெக்சாஸ் பல்கலைக்கழகத்தினைச் (university of Texas) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனித தோலினுள் துளையினை ஏற்படுத்துவதன் மூலம் ஒரு பொருளினை உடலிலிருந்து வெளியே எடுக்கவோ அல்லது உடலினுள் செலுத்தவோ முடியும் என்கின்ற எண்ணம் முதன் முதலில் மனிதனுக்கு உருவாகா காரணம் கொசு மற்றும் பாம்பு காரணமாக இருக்கலாம். 


1616-ம் ஆண்டு வில்லியம் ஹார்வி-யின் (William Harvey) ‘இரத்தஓட்ட சுழற்சியினைப்’ பற்றிய கண்டுபிடிப்பானது இந்த எண்ணத்திற்கு மேலும் வலுசேர்ப்பதாக அமைந்தது. அதைத்தொடந்து, 1665-ம் ஆண்டு கிறிஸ்டோபர் ரென் (Christopher Wren) என்பவர் ஊசியின் மூலம் ஒரு நாயின் நரம்பினில் மயக்க மருந்தினைச் செலுத்தி அதனை தூங்க வைத்துக் காட்டியது. ஊசிகள் (syringes) மூலம் மருந்தினை உடலினுள் செலுத்தும் இம்முறையின் தோற்றத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாகக் கருதப்பட்டது. அதிலிருந்து இநூறு ஆண்டுகள் தொடர்ச்சியான ஆராய்ச்சிக்குப் பிற்பாடுதான் இன்று நாம் பயன்படுத்தும் ஊசி முறையானது உருவாகியுள்ளது. இன்று மருத்துவமனைகளில் தரப்படும் சிகிச்சைகளில் 25% மருந்துகள் இம்முறையின் வழியே கையாளப்படுவது குறிப்பிடத்தக்கது.


ஊசி மூலம் மருந்து மருந்து ஏற்றும் சிகிச்சையினை பற்றி என்னதான் பல்வேறு நன்மைகளையும் சிறப்பம்சங்களையும் சொன்னாலும், முக்கியமாகப் பலரும் இதை வெறுப்பதற்குக் காரணம் என்ன என்றால் இதனால் உண்டாகும் வலி தான். இன்றும் கூட பல்வேறு தாய்மார்கள் தங்களது குழந்தைகளைச் சாப்பிட வைப்பதற்கு கூறும் ஒரு வாசகம் “ஒழுங்கா சாப்பிட்டிரு, இல்லனா அந்த டாக்டர் உனக்கு ஊசி போட்ருவாரு” என்பதாகத்தான் இருக்கும்.


‘ஊசியெல்லாம் போட வேணாம் டாக்டர், மாத்திரையே கொடுங்க போதும்’, என்று நம்மில் எத்தனையோபேர் ஊசிக்கு பயந்து இவ்வாறு கூறியிருப்போம். இப்படிச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஊசிக்கு பயப்படாதவர்கள் இந்த உலகத்தில் யாருமில்லை. ஏனென்றால், ஊசி போடும்போதும்ஏற்படுமே! ஒரு வலி அதன் தாக்கம் தான்.


உடலில் வலியே இல்லாமல் மருந்தினை உடலினுள் செளுத்துவதர்க்கான புதிய முறை தான் மைக்ரோ ஊசிகள் (micro needles) என்ற மிகச்சிறிய ஊசித் தொழில் நுட்பம். இவை உடலில் வலிகள் இல்லாமல் செய்வது மட்டுமல்லாமல் தேவையான மருந்தினை உடலினுள் செலுத்துவதோடு தோலுக்கடியில் கரையும் தன்மையுடனும் உருவாக்கப் பட்டுள்ளது என கூறியுள்ளனர். 



இந்த மைரோ ஊசி முறையானது எல்லா மருந்துக்கும் பொருந்து என்று கூறமுடியாது. சில மருந்துகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 


இது குறித்து ஆராய்ச்சிக் குழுவினர் ChemRxiv-ல் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். 


ஆராய்சி குழுவினர் ChemRxiv-ல் கூரியுள்ளதாவது......! 


3-டி பிரின்டிங் (3D printing technology) தொழில்நுட்பம், பாலிலாக்டிக் அமிலம் (Polylactic acid) மற்றும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தினால் (U.S. Food and Drug Administration) அங்கீகரிக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க, மட்கும் தன்மையுடைய பொருட்களினால் இந்த மைக்ரோ ஊசிகள் தயாரிக்கப்படும். இந்த ஊசிகள் ஒரு பட்டையின் மேல் அடுக்கப்பட்ட வடிவத்தினை அடைவதற்காக, அச்சிடும் செயல்முறைக்குப் பிறகு அவை சில வேதியியல் முறைக்கு உட்படுத்தப்படுகின்றன. 



இந்தக் குழுவினரால் 1 மைக்ரோ மீட்டர் (micrometer) அளவில் முனையையும், 400-500 மைக்ரோ மீட்டர் அகலத்தையும் கொண்ட மைக்ரோ ஊசிகளை உருவாக்கமுடியும் என்று கூறுகின்றனர். பொதுவாக 40 மைக்ரோ மீட்டருக்குக் குறைவான எதையும் நம் கண்களால் பார்க்க முடியாது. மனிதனின் முடியானது பொதுவாக 50-70 மைக்ரோமீட்டர் அளவில் காணப்படும். ஆக ஒப்பீட்டளவில் பார்த்தோமானால், முடியினை விட 50 மடங்கு சிறிய அளவில் இவை காணப்படும் என்றும் கூறியுள்ளனர்.


தற்போது நாம் பயன்படுத்து ஊசிகள் (hypodermic needles) வலியினைத் தருவதாகவும், சரியான முறையில் கையாளாவிட்டால் காயத்தினை உண்டாக்குவதாகவும் மேலும் ஒரு தேர்ந்த மருத்துவ நிபுணரே கையாளும் வகையிலும் உள்ளது. 


ஆனால், மைக்ரோ ஊசிகள் இந்த அனைத்துப் பிரச்னைகளையும் தீர்ப்பதோடு மட்டுமல்லாமல் தோலுக்குள்ளே கரையும் வகையிலும் வடிவமைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன தான் இருந்தாலும் இவற்றிலும் சில நடைமுறை சிக்கல்களும் கூறப்படுகின்றன. இந்தவகை ஊசிகளை உருவாக்குவதற்கான செலவு தற்போது பயன்படுத்தும் ஊசியின் உருவாக்கச் செலவினைவிட அதிகமாகவே உள்ளது.  


இந்த முறை தொடர்பாக தொடர்பாக பன்றியின் தோலில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட ஆராய்ச்சியானது விரும்பத்தக்க முடிவினையே தந்துள்ளதாகவும் ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.


video Courtesy : NIHOD