அடிக்கடி இந்த இடத்துல வலி இருக்க? ஜாக்கிரதை கொலஸ்ட்ராலாக இருக்கலாம்
உங்களின் கால் அல்லது கைகளில் அதிகளவிலான வலி ஏற்படுவது உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்திருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
பொதுவாக கொலஸ்ட்ரால் இரண்டு வகைப்படும், ஒன்று ஹெச்டிஎல் அதாவது நல்ல கொலஸ்ட்ரால் மற்றொன்று எல்டிஎல் அதாவது கெட்ட கொலஸ்ட்ரால் ஆகும். எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும்போது நமது உடல் சில பல பாதிப்புகளை ஏற்படுகிறது. நமது உடலில் படியும் கொலஸ்ட்ரால் ஆரம்பத்தில் எவ்வித அறிகுறிகளையும் காட்டாது, ஆனால் நாள்போக்கில் அவை மெதுமெதுவாக உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். அந்தவகையில் கால்கள் மற்றும் கைகளில் அதிகளவு வலி ஏற்பட்டால் அதனை நாம் அதிக வேலை செய்வதால் ஏற்படுகிறது என்று தவறாக நினைக்கிறோம். ஆனால் சில ஆய்வகளின்படி இதுபோன்று கால் அல்லது கைகளில் அதிகளவிலான வலி ஏற்படுவது உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்திருப்பதற்கான அறிகுறி என்பது கூறப்பட்டுள்ளது.
நம் ரத்த நாளங்களில் படியும் கொலஸ்ட்ரால் படிவுகள் ரத்த ஓட்டத்தை தடை செய்கிறது, நமது உடலில் ரத்த ஓட்டம் குறைவதால் குறைந்தபட்ச வேலை செய்யும் போதும் உடல் வலி ஏற்படுகிறது, ஆனால் நாம் சில ஓய்வு எடுக்கும்பொழுது அந்த வலி மறைந்துவிடும். சிலருக்கு நடைபயிற்சி அல்லது சிறிய உடல் அசைவுகளை செய்தாலும் கால் வலி ஏற்படலாம். நீரிழிவு நோய்க்கான அறிகுறி போன்றே அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் பாதங்களில் ஒருவித எரிச்சல் உணர்வு ஏற்படுகிறது மற்றும் கால்களின் தோலில் நிற மாற்றம்,கால்களில் புண்கள், கால்களில் அடிக்கடி நோய்த்தொற்றுகள் ஏற்படுதல் போன்றவையும் அதிக கொலஸ்ட்ராலுக்கான அறிகுறியாகும்.
மேலும் படிக்க | மலட்டுத்தன்மையையும் போக்கும் கொய்யா! இப்படி சாப்பிட்டால் கருதரிக்க உதவும்
பொதுவாக கொலஸ்ட்ரால் 200 mg/dL க்கும் குறைவாக இருந்தால் அது சாதாரணமாக கருதப்படுகிறது, அதுவே 200 முதல் 239 mg/dL வரையிலான கொலஸ்ட்ரால் அளவு எல்லைக்குட்பட்ட கொலஸ்ட்ராலாகக் கருதப்படுகிறது மற்றும் 240 mg/dL க்கு மேல் கொலஸ்ட்ரால் அதிக அளவாக கருதப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது, புகைபிடித்தல், மது அருந்துவது மற்றும் உடல் பருமனாக இருப்பது போன்றவை தான்.
அதிக கொலஸ்டிராலால் ஏற்படும் வலி
அமெரிக்க இதய அசொசியஷன் குறிப்பிட்டுள்ளபடி, உங்களுக்கு அதிக கொலஸ்டிரால் இருக்கும் போது, PAD நோய் எற்படும் அபாயம் உள்ளது. இதனால், உங்களுடைய இடுப்புப் பகுதி, தொடை மற்றும் கெண்டைக் கால் பகுதிகளில் வலி ஏற்படும். குறிப்பாக, உடற்பயிற்சி செய்யும் போது, நீண்ட தூரம் நடக்கும் போது, படிகள் ஏறும் போது, மேற்கூறிய பகுதிகளில் வலி மற்றும் தசைபிடிப்பு ஏற்படும்.
மேலும் படிக்க | பைல்ஸ் நோயை கட்டுப்படுத்தணுமா? ஓமத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ