சத்துக்கள் நிறைந்த கொய்யா பல வழிகளில் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் வைட்டமின் சி, லைகோபீன் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. கொய்யாவில் காணப்படும் மாங்கனீசு உணவில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதில் காணப்படும் ஃபோலேட் கருவுறுதலை அதிகரிக்க உதவுகிறது. கொய்யா நம் உடலுக்கு நன்மை பயக்கும், அதில், பெண்கள் மற்றும் ஆண்கள் என கொய்யாப்பழம் பேதம் பார்ப்பதில்லை.
கொய்யாவில் பழத்தில் நல்ல அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன, இது பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. கொய்யா, ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கொய்யா கர்ப்ப காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, இது தவிர, நீரிழிவு நோயாளிகளுக்கும் கொய்யா பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க | நீரிழிவு நோயை ஓட விரட்டும் பிரியாணி இலை; பயன்படுத்தும் முறை
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக கொய்யாவை உட்கொள்ள வேண்டும். அதிலும், கொய்யாவை எப்படி சாப்பிட்டால் அது நன்மை தரும் என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.
கொய்யாவின் நன்மைகள்
நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்
நார்ச்சத்து அதிகம் உள்ள கொய்யாப்பழம், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ள இந்தப் பழம், மட்டுமல்ல, அதன் இலைகளும் சர்க்கரையின் அளவைத் பராமரிக்கப் பயன்படுகிறது என்பது ஆச்சரியப்படுத்தும் தகவல் ஆகும்.
இதயத்திற்கு நன்மை பயக்கும்
கொய்யா இதயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் இதில் காணப்படுகின்றன, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் கொய்யாவில் நல்ல அளவு பொட்டாசியம் உள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
மாதவிடாய் வலியைக் குறைக்கிறது
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்கு நிவாரணம் வழங்க கொய்யாவின் ஆரோக்கிய பண்புகள் உதவுகின்றன. பல பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், கொய்யாப்பழ ஜூஸ் குடித்த பெண்களுக்கு மாதவிடாய் வலியில் இருந்து நிவாரணம் கிடைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
கொய்யாவை எப்படி சாப்பிடுவது?
உங்களுக்கு ஏதேனும் நோய் இருந்தால், குறிப்பாக சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கொய்யாவை உட்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும். வயிற்று பிரச்சனைகளால் அவதிப்படும் சிலருக்கு கொய்யா சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
செரிமானத்தை மேம்படுத்துகிறது
கொய்யா செரிமானத்தை சரிசெய்யவும் செயல்படுகிறது. இது வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கிறது, இதன் காரணமாக வாயு மற்றும் அஜீரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன. இது தவிர மலச்சிக்கலையும் நீக்குகிறது.
மேலும் படிக்க | உங்களுக்கு Low Blood Pressure இருந்தால் இந்த 4 பொருட்களை உடனடியாக சாப்பிடுங்கள்
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இரவில் கொய்யாவை சாப்பிட வேண்டும். நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு ஒரு கொய்யாப்பழத்தை உட்கொள்ளலாம். எந்த வித மருத்துவ பிரச்சனையும் இல்லாதவர்கள் ஒரு நாளைக்கு 2-3 கொய்யாப்பழங்களை சாப்பிடலாம். பிபி குறைவாக இருந்தால் கொய்யாவை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
கொய்யா பழத்தை எப்போது சாப்பிட வேண்டும்
சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ சாப்பிட்டால் நல்லது. கொய்யா பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வெள்ளை கொய்யா vs சிகப்பு கொய்யா; சத்துகள் எதில் அதிகம் இருக்கிறது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ