பலவிதமான கீரைகளை நாம் உண்பது அவசியமாகிறது. இந்தியாவில் நாம் பல்வேறு பச்சை காய்கறிகளை சமைத்தும், சாலடாகவும் பயன்படுத்தினாலும், பரட்டைக் கீரையின் பயன்பாடு குறைவாகவே உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் உண்மையில் பரட்டை இலை மிகவும் சத்தானது. அதில், நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் பி6, மக்னீசியம், வைட்டமின் ஏ, 200 சதவைட்டமின் சி வைட்டமின் கே என பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. 


அதுமட்டுமல்ல, வைட்டமின் ஈ, இரும்பு சத்து, துத்தநாகம், ஃபோலேட் என வேறு சில சத்துக்களும் ஓரளவு இருக்கிறது.


பரட்டைக் கீரையில் உள்ள காரோட்டினாய்டுகள், ஃபிளேவனாய்டுகள் போன்றவை புற்றுநோயில் இருந்து பாதுகாக்கிறது. பரட்டைக் கீரையில் கலோரியின் அளவு குறைவாக இருப்பதாலும் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையாலும் இதயத்திற்கும் நல்லது. 


மேலும் படிக்க | நீரிழிவுக்கு குட்பை சொல்லி ரத்த அளவை சீராக்கும் கீரைகள்


இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவும் பரட்டைக் கீரை, உணவு செரிமானத்தை அதிகரிக்கிறது என்பதும், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோயாளிகளை பாதுகாக்கிறது என்பதால் அனைவரும் தவிர்க்காமல் உண்ண வேண்டிய கீரை பரட்டை.


குளோரோபில் சத்து உள்ள பரட்டைக் கீரை, புற்றுநோய்க்கு எதிராக போராடுகிறது. இந்தக் கீரையின் சுவை சற்று கசப்பாக இருப்பதால் பலரும் இதை உண்பதை தவிர்க்கின்றனர்.


ஆனால், ஆரோக்கியத்தை பாதுகாக்க நினைப்பவர்கள் இந்தக் கீரையை ஒதுக்கிவிடக் கூடாது. ரத்த அழுத்தத்தை குறைக்கும் பரட்டைக் கீரை எனப்படும் கேல் கீரை என்றும் அறியப்படுகிறது. 


பரட்டைக் கீரை எனப்படும் கேல் கீரையின் ஆரோக்கிய நன்மைகள்


பரட்டைக் கீரையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இயற்கையான செயல்முறைகள் மற்றும் சுற்றுச்சூழல் அழுத்தங்களின் விளைவாக ஏற்படும் தேவையற்ற நச்சுகளை அகற்ற உடலுக்கு உதவுகின்றன.


மேலும் படிக்க | தாயின் ஆரோக்கியமே குடும்பத்தின் நிம்மதி: தாய்மார்களுக்கான சூப்பர் உணவுகள்


இதில் உள்ள பொட்டாசியம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் அபாயத்தைக் குறைக்கும். இந்தக் கீரையில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.


அதோடு நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால் மலச்சிக்கலைத் தடுக்கவும், சீரான மற்றும் ஆரோக்கியமான செரிமானப் பாதையை மேம்படுத்தவும் உதவுகிறது பரட்டைக் கீரை.


பீட்டா கரோட்டின் நல்ல மூலமான பரட்டைக் கீரை, தோல் மற்றும் முடி உட்பட அனைத்து உடல் திசுக்களின் வளர்ச்சிக்கும் பராமரிப்பிற்கும் உதவுகிறது. 


சருமப் பிரச்சனைகளை தீர்க்கும் இந்தக் கீரை, காயங்களை விரைவில் குணமாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, எலும்பு, பற்கள், மூட்டுக்களை வலுப்படுத்தும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உங்கள் சிறுநீரகம் சுத்தமாக உள்ளதா: தெரிந்துகொண்டு சுத்தப்படுத்துவது எப்படி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR