புதுடில்லி: பதஞ்சலி நிறுவனரும் யோகா குருவுமான குரு ராம்தேவ், ஆயுர்வேத ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட COVID-19 க்கான மருந்து குறித்த முதல் அறிவியல் ஆய்வுக் கட்டுரையை தனது அமைப்பின் சார்பில் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் கலந்து கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தரவுகள் வெளியிடப்பட்ட இந்த மருந்துக்கு கொரோனில் என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம், பதஞ்சலி தனது ஆயுர்வேத மருத்துவத்தால் கொரோனா வைரஸ் தொற்றுநோயை குணப்படுத்த முடியும் என்று கூறியது. இந்த கூற்றுக்கள் குறித்த சில சர்ச்சைகளைத் தொடர்ந்து, பதஞ்சலியின் கொரோனில் கிட் ஒரு 'நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர்' ஆக உரிமம் பெற்றது.


இந்த நிகழ்வில் சுவாமி ராம்தேவ், மேற்கில் மட்டுமே ஆராய்ச்சிப் பணிகளை நடத்த முடியும் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்று கூறினார். குறிப்பாக ஆயுர்வேதம் என்று வரும்போது ​​மக்கள் ஆராய்ச்சிப் பணிகளை சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். கொரோனா தொற்றுநோய் (Coronavirus) உச்சத்தில் இருந்தபோது கொரோனில் லட்சக்கணக்கான மக்களுக்கு பயனளித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


ALSO READ: கொரோனில் Covid-யை குணப்படுத்தும் என நாங்கள் சொல்லவில்லை: பதஞ்சலி CEO


ஜூன் 2020 இல், பதஞ்சலி (Patanjali) ஆயுர்வேத 'கொரோனில் மற்றும் ஸ்வாசாரி' மருந்தை அறிமுகப்படுத்தியது. இது SARS-CoV-2 வைரஸால், அதாவது கொரோனா வைரசால் ஏற்படும் சுவாச நோய்க்கான முதல் ஆயுர்வேத சிகிச்சை என்றும் நிறுவனம் கூறியது.


உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி யோகபீடத்தில் மூன்று ஆயுர்வேத மருந்துகளின் கிட் ஒன்றை அறிமுகப்படுத்திய யோகா குரு ராம்தேவ், பதஞ்சலி ஆராய்ச்சி மையம் மற்றும் NIMS-ன் ஒருங்கிணைந்த முயற்சியால் உருவாக்கப்பட்ட முதல் ஆயுர்வேத, மருத்துவ ரீதியாக கட்டுப்படுத்தப்பட்ட, சோதனை அடிப்படையிலான சான்றுகள் மற்றும் ஆராய்ச்சி அடிப்படையிலான மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தார்.


இந்த மருந்து, 3-7 நாட்களுக்குள் 100 சதவீதம் COVID-19 நோயை குணப்படுத்தும் என்றும் ராம்தேவ் கூறியிருந்தார்.


உலகளவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கொலம்பியா, மொரீஷியஸ், பங்களாதேஷ், இலங்கை மற்றும் சீனா ஆகிய பல நாடுகள் இந்தியாவின் ஆயுர்வேதத்தை தங்கள் வழக்கமான மருத்துவ முறையில் நடைமுறைப்படுத்தியுள்ளன என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். ஆயுர்வேத பட்டம் பெற்ற ஒரு மருத்துவர் இந்த நாடுகளில் சென்று பயிற்சி செய்யலாம் என்று அவர் கூறினார். ஆயுர்வேதம் குறித்த தகவல்கள் வேதங்கள் முதற்கொண்டு அனைத்து இடங்களிலும் கிடைக்கின்றன என்றார் அவர். நம் நாட்டிலும் நமது சொத்தான ஆயுர்வேதத்தை இன்னும் போற்றிக்காக்க வேண்டும் என்றார் டாக்டர் ஹர்ஷ் வர்தன்.


ALSO READ: கொரோனில் கொரோனாவை குணப்படுத்தும்.... அடித்து கூறுகிறார் பாபா ராம்தேவ்..!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR