கொரோனில் கொரோனாவை குணப்படுத்தும்.... அடித்து கூறுகிறார் பாபா ராம்தேவ்..!!!

பதஞ்சலி நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா மருந்தான, கொரோனில்  COVID-19 தொற்றை குணப்படுத்துகிறது என பாபா ராம் தேவ் உறுதியாக கூறினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 3, 2020, 06:40 PM IST
  • கொரோனில் கொரோனாவை குணப்படுத்தும் என பாபா ராம்தேவ் உறுதியாக கூறுகிறார்.
  • அனைத்து நெறுமுறைகளையும் பின்பற்றி பரிசோதனை நடத்தப்பட்டது என்கிறார்.
  • வைரஸ் கிருமியின் பெருக்கத்தை இது பெருமளவு கட்டுப்படுத்துகிறது என்கிறார் ராம்தேவ்
கொரோனில் கொரோனாவை குணப்படுத்தும்.... அடித்து கூறுகிறார் பாபா ராம்தேவ்..!!! title=

பதஞ்சலி தயாரித்துள்ள கொரோனா மருந்து காரணமாக மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டால் அல்லது கொரோனில், COVID-19 ஐ குணப்படுத்துவதாகக் கூறி மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டால், பிரபல யோகா குரு சுவாமி ராம்தேவின் நிறுவனமான பதஞ்சலி ஆயுர்வேத் மீது நடவடிக்கை எடுக்கும் என்று மகாராஷ்டிரா அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளித்த பாபா ராம் தேவ், பதஞ்சலியின் தயாரிப்பான கொரோனில், கொரோனாவை குணப்படுத்துகிறது என உறுதியாக கூறினார்.

ALSO READ |  கொரோனா தடுப்பூசி சோதனையில் வெற்றியை நோக்கி செல்லும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

மும்பை(MUMBAI): பிரபல யோகா குரு சுவாமி ராம்தேவின் அமைப்பான பதஞ்சலி (Patanjali) ஆயுர்வேதம் தயாரித்துள்ள கொரோனாவிற்காக மருந்து தொடர்பாக மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டாலோ அல்லது புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள கொரோனில் என்னும் மருந்து கோவிட் -19 ஐ குணப்படுத்துவதாகக் கூறி தவறாக வழிநடத்தினாலோ பதஞ்சலி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிராவின் FDA அமைச்சர் இராஜேந்திர ஷிங்னே  எச்சரிக்கையை விடுத்தார்.

பதஞ்சலி தயாரித்த கொரோனில் மருந்தைப் பயன்படுத்தி கொரோனா(Corona)  வைரஸுக்கு சிகிச்சையளிக்க முடியாது என்றும் பதஞ்சலி நிறுவனம், இது தொடர்பாக மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தினாலோ அல்லது மக்களை தவறாக வழிநடத்தினாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

ALSO READ | Big Breaking: நாட்டின் முதல் கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகப்படுத்தப்படும்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்க கொரோனில் மாத்திரையை தயாரிக்க அனைத்து நெறிமுறைகளையும் தனது அமைப்பு பதஞ்சலி ஆயுர்வேதம் பின்பற்றியதாக ராம்தேவ் புதன்கிழமை கூறியது குறிப்பிடத்தக்கது.

அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நெறிமுறைகள் அனைத்தும் பாபா ராம்தேவ் அல்லது பதஞ்சலியால் அமைக்கப்பட்டவை அல்ல என்றும் நவீன மருத்துவ அறிவியல்களால் அமைக்கப்பட்டவை என்றும் அவர் தெளிவு படுத்தினார். அஸ்வகந்தா, சீந்தில் ( அமிர்ந்த வல்லி மற்றும் சோம வல்லி என்றும் கூறுவார்கள்), துளசி ஆகியவற்றைப் பயன்படுத்தி கொரோனில் மருந்தை தயாரித்துள்ளதாக பாபா ராம்தேவ் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய பாபா ராம்தேவ், 100 சதவீதம்  குணமடையும் என்ற தனது அறிக்கையில் தான் உறுதியாக இருப்பதாகவும், அவரது நிறுவனம் உருவாக்கிய ''கொரோனா கிட்'' கோவிட் -19 நோயாளிகளை குணப்படுத்த முடியும் என்றும் உறுதியாக கூறினார்.

கொரோனா (Corona)  வைரஸ் காரணமாக ஒரு நபரின் உடல் நிலை மோசமடைய வழிவகுக்கும் காரணிகளை இந்த மருந்தின் மூலம் கட்டுப்படுத்த முடிந்தது என்பது மருத்துவ பரிசோதனைகள் மூலம் கண்டறிந்துள்ளதாக யோகா குரு ராம்தேவ் மேலும் தெரிவித்தார். பதஞ்சலி நடத்திய சோதனையில் மூன்று நாட்களில் 69% பேர் குணமடைந்தனர் என்றும் 7 நாட்களில் 100% COVID-19 நோயாளிகள் குணமடைந்தனர் என்றும் பாபா ராம்தேவ் கூறினார்.

கொரோனில் மாத்திரை தொடர்பான சர்ச்சையைப் பற்றி குறிப்பிடுகையில், தன்னையும் அவரது நெருங்கிய உதவியாளர் ஆச்சார்யா பாலகிருஷ்ணாவையும் குறிவைத்து ஒரு பிரச்சாரம் நடத்தப்பட்டது என்றார்.

உங்களுக்கு என்னுடனோ அல்லது ஆச்சார்யா பாலகிருஷ்ணாவுடனோ கருத்து வேறுபாடு இருந்தால், எங்களை விமர்சிக்கலாம் என்றும்,  ஆனால், கொரோனா வைரஸ், நீரிழிவு நோய், புற்றுநோய் மற்றும் இதுபோன்ற பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு குறைந்தபட்சம் நிவாரணம் அளிக்க வேண்டும் என்ற மனம் இருக்க வேண்டும் எனவும் கூறினார். தானும் ஆச்சார்யா பாலகிருஷ்ணாவும் சாதாரண குடும்ப  பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்றார் பாபா ராம்தேவ்.

கடந்த சில நாட்களாக வஞ்சக மனப்பான்மையுடன் பதஞ்சலியை தாக்கி பலர் பேசி வருவதாகவும், பதஞ்சலி தோல்வியுற்றது என்றும் விமர்சனங்கள் வந்தன என்றார் பாபா ராம்தேவ்.

பதஞ்சலி செய்த பரிசோதனைகளில், COVID-19 நோயாளிகள் 100 சதவீதம் குணமடைந்தனர் எனவும் அவர் கூறினார்.

இந்த மருந்துகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை விளக்கிய அவர், கொரோனா வைரஸ் நுரையீரலுக்குள் நுழைந்து பெருக்கத் தொடங்குவது தான் ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று கூறினார். இந்த மருந்துகள் தொற்றுகள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன என்றார்.

ஆயுஷ் அமைச்சகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்பட்டன என்றும், கொரோனில் உள்ளிட்ட மூன்று மருந்துகளும் இப்போது சந்தையில் கிடைக்கும் என்று யோகா குரு கூறினார். 

Trending News