கவுகாத்தி:  அசாம் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் பரவி வரும் 'ஸ்க்ரப் டைபஸ்' எனும் புதிய வைரஸ் மக்களிடையே அளவுக்கு அதிகமான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதுள்ள கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி கொண்டிருக்கிறது.இது எந்த மாதிரியான வைரஸ்? என்பதை கண்டுபிடிக்க லட்சக்கணக்கான மருத்துவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.  ஆனால், அந்த வைரஸோ அடுத்த நிலைக்கு உருமாறி சென்று கொண்டே இருக்கிறது.இந்த வைரஸின் உருமாறிய வடிவங்கள் வேகமாக இன்னொரு அலைகளை ஏற்படுத்தியும் வருகிறது. இது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.



குறிப்பாக, உத்தரப் பிரதேசம், அசாம் மாநிலங்களில் இந்த 2 வாரங்களாகவே இந்த புது வைரஸ்தான் மக்களை கதிகலங்க வைத்து வருகிறது.அந்த மாநிலங்களில் உள்ள குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இந்த 2 வாரங்களாகவே மர்ம காய்ச்சல் வந்துள்ளது.இது என்ன காய்ச்சல்? என்று கண்டுபிடிப்பதற்கு முன்னே அவர்கள் இறந்துவிடும் சோகமும் தொடர்கிறது.  மதுரா, மெயின்புரி ஆகிய மாவட்டங்களில் அதிகளவில், இந்த மர்ம காய்ச்சலால் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.மதுராவில் மட்டும் 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை டெங்கு அல்லது கொரோனா வைரஸின் வேரியண்டுகளாக இருக்கும் என்று டாக்டர்கள் சந்தேகப்பட்டு அதற்கான டெஸ்ட்டுகளையும் மேற்கொண்டனர்.ஆனால்,இது அந்த வைரஸ் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.



அதே சமயம், இந்த வைரஸ் பெயர் 'ஸ்க்ரப்' வைரஸ் என்று அழைக்கப்படுகிறது.மைட் போர்ட் ரிக்கெட்டிசியோசிஸ் என்றும் சொல்கிறார்கள்.ஓரியன்டியா சுட்சுகாமுஷி (Orientia tsutsugamushi) என்ற பாக்டீரியாவால் இந்த நோய் ஏற்படுகிறதாம்.ஸ்க்ரப் டைபஸ் நோய்த்தொற்றுள்ள லார்வா பூச்சிகள் கடிப்பதன் மூலம், மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  இந்த வைரஸ் தொற்று இருப்பவர்களுக்கு கடுமையான காய்ச்சல் இருக்கும், தலைவலி, உடம்பு வலிகள் அதிகம் ஏற்படும்.இந்த நோயின் தாக்கம் அதிகமாகிவிட்டால், நிமோனிடிஸ், மூளைக்காய்ச்சல், மனநிலை குழப்பம், கோமா, இதய செயலிழப்பு போன்றவை ஏற்படுமாம். இப்படி ஒரு ஆபத்தான ஸ்க்ரப் வைரஸ் பரவலுக்கு இதுவரை தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.


ஆனால், ஸ்க்ரப் டைபஸ் பாதிக்கப்பட்டவருக்கு 'டாக்ஸிசைக்ளின்' என்ற மருந்து மூலம் சிகிச்சை தரப்பட வேண்டும் என்று மத்திய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது, இந்த ஸ்க்ரப் டைபஸ் வைரஸ் இந்தோனேஷியா, சீனா, ஜப்பான், வடகிழக்கு ஆஸ்திரேலியாவின் கிராமப் புற பகுதிகளிலும் பரவி வருகிறது. இதற்கு ஒரே தீர்வு, தலை முதல் கால் வரை மூடியே இருக்க வேண்டும். முக்கியமாக கொசுக்கள் மற்றும் பூச்சிகளால் கடிபடுவதைத் தவிர்க்க வேண்டும்.


ALSO READ பாம்பின் நஞ்சு, கோவிட் தொற்றுநோய்க்கு சிறந்த மருந்தாகலாம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR