கொரோனா வைரஸ் பிடியில் சிக்கியுள்ள உலக மக்களின் ஒரே நம்பிக்கை தடுப்பூசி தான். அவர்களுக்காக ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஃபைசர்-பயோஎன்டெக் ( Pifzer - BioNTech) கொரோனா வைரஸ்  தடுப்பூசி விநியோகங்கள் கிறிஸ்துமஸுக்கு முன்பே தொடங்கலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


அமெரிக்கா (America) மற்றும் ஐரோப்பியா இதற்கான அவசர கால அங்கீகாரத்தை வழங்கினால், கொரோனா வைரஸ் தடுப்பூசி கிறிஸ்மஸுக்கு முன்பு வரலாம் என்று பயோஎன்டெக் புதன்கிழமை அறிவித்தது.


பைசர் மற்றும் பயோஎன்டெக் (Pfizer-BioNTech) இணைந்து உருவாக்கிய தடுப்பூசியின் இறுதி சோதனை முடிவுகள் மூலம், அதற்கு தீவிரமான பக்க விளைவுகள் எதும் இல்லை என்பதும், 95 சதவீத தடுப்பாற்றலை கொண்டுள்ளது என்பது உறுதியானது.


அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் டிசம்பர் மாதம் மத்தியில் அவசரகால பயன்பாட்டை அனுமதிக்கக்கூடும் என்று பயோஎன்டெக் தலைமை நிர்வாகி உகுர் சாஹின் செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.


"எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், டிசம்பர் இரண்டாம் பாதியில் நாங்கள் ஒப்புதல் பெற்று கிறிஸ்துமஸுக்கு முன்பே டெலிவரியை தொடங்குவோம்" என்று சாஹின் கூறினார்.


மருந்துகளின் தடுப்பாற்றல் விகிதம் மருந்து கட்டுப்பாட்டாளர்கள்,  விதித்துள்ள வரம்பை விட மிக அதிகமாக உள்ளது என்றும்,இது தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்


ஃபைசர் நிறுவனம் 43,000 க்கும் மேற்பட்ட நபர்களிடம் மேற்கொண்ட பரிசோதனையில் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட 170 பங்கேற்பாளர்களில், 162 பேருக்கு தடுப்பூசி அல்லாமல் ப்ளாஸிபோ என்னும் போலி மருந்து வழங்கப்பட்டது. இதன் மூலம் தடுப்பூசி 95 சதவீதம் திறன்பெற்றதாக இருந்தது நிரூபிக்கப்பட்டது.


ALSO READ | அடுத்து வருகிறது மனிதர்கள் மூலம் வரவும் Chapare Virus: விஞ்ஞானிகள் அளித்த பகீர் Report!!


தடுப்பூசியின் அவசர பயன்பாட்டிற்கு  அங்கீகாரம் பெற மருந்து தயாரிப்பாளர்கள் வெள்ளிக்கிழமை விண்ணப்பிப்பார்கள் என்று சாஹின் கூறினார்.


எஃப்.டி.ஏ (FDA) ஆலோசனைக் குழு டிசம்பர் 8-10 தேதிகளில் கூடி தடுப்பு மருந்து பற்றி விவாதிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ராய்ட்டர்ஸிடம் செய்தி வெளியிட்டுள்ளது.  


ALSO READ | பாகிஸ்தான் உட்பட 12 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்க UAE தடை..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR