புதுடெல்லி: நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமை குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை காலை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் குறித்து அரசாங்கம் கூட்டியுள்ள இரண்டாவது அனைத்துக் கட்சி கூட்டம் இதுவாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 இதுவரை, இந்தியா (India) முழுவதும் ஏற்பட்டுள்ள மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 94 லட்சத்தை தாண்டியுள்ளது.


பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi)  கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh), உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) , சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி ஆகியோர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


அமெரிக்காவிற்குப் (America)பிறகு உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான தொற்று பாதிப்பு உள்ள நாடாக இந்தியா பதிவு செய்துள்ளது. ஆனால்,  உலகளவில் மிகக் குறைந்த இறப்பு விகிதம் உள்ள நாடாக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் இன்று காலை தெரிவித்துள்ளது.


ஜனவரி 30 ம் தேதி கேரளாவில் முதல் வழக்கு பதிவாகியதில் இருந்து 88 லட்சத்துக்கும் மேற்பட்ட கோவிட் நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.  கொரோனா தொற்று நோய் தொடர்புடைய கிட்டத்தட்ட 1.3 லட்சம் இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


கோவிட் தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கு, உலகளாவிய அளவில் பல நாடுகளில் தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பிரதமர் சனிக்கிழமை நாட்டின் முக்கிய  தடுப்பூசி மையங்களை பார்வையிட்டார் கொரோனா வைரஸ் தடுப்பூசி மற்றும் உற்பத்தி செயல்முறை ஆகியவற்றை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்தார்.


ALSO READ | கொரோனா தடுப்பு மருந்தில் சிக்கலா...100 கோடி இழப்பீடு கோரி வழக்கு பதிவு செய்த  SII ..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR