பொட்டாசியம் உடலுக்கு மிக முக்கியமான கனிமமாகும், இது நரம்புகளின் செயல்பாட்டை சரியாக பராமரிப்பதோடு, அதனை மேலும் சீராக்க உதவுகிறது. ஆனால் பொட்டாசியத்தின் மிக முக்கியமான செயல்பாடு இதயத் துடிப்புக்கு உதவுவதாகும். உடலில் பொட்டாசியம் சத்து குறைபாடு தீவிரமாக இருந்தால், அது மருத்துவத்தில் ஹைபோகாலேமியா (Hypokalemia) என்று அழைக்கப்படுகிறது, மேலும் ஒரு நபரின் உடலில் பொட்டாசியத்தின் அளவு லிட்டருக்கு 3.6 மில்லிமோல்களுக்குக் கீழே குறையும் போது இந்த நிலை ஏற்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொட்டாசியம் குறைபாடு காரணமாக  ஏற்படும்  5 நோய்கள் 


பல நேரங்களில், உணவில் பொட்டாசியம் சத்து நிறைந்த உணவுகளை சரியாக சேர்த்துக் கொள்ளாமல் இருத்தல் காரணமாகிறது. ஆதோடு, ஒரு நபருக்கு நீண்ட காலமாக வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி இருந்தால், இதன் காரணமாகவும் பொட்டாசியம் இழப்பு ஏற்படுகிறது. உடலில் பொட்டாசியம் இல்லாதது பல தீவிர நோய்களின் ஆபத்தை அதிகரிக்கிறது.


1. ஒழுங்கற்ற இதய துடிப்பு


இதயத் துடிப்பு சீரற்றதாக, மிகவும் வேகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், அது ஹைபோகாலேமியா அல்லது பொட்டாசியம் குறைபாட்டின் அறிகுறியாகவும் இருக்கலாம். பொட்டாசியம் இதயத் தசைகளின் சுருக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைவாக இருந்தால், இதன் காரணமாக இதயத் துடிப்பு ஒழுங்கற்றதாகி, வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷன் (ventricular fibrillation) போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும்.


2. உயர் இரத்த அழுத்தம்


உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைவாக இருந்தால், இதன் காரணமாக இரத்த அழுத்தம் அதிகரிக்கும். குறிப்பாக சோடியம் அதாவது உப்பு அதிகமாக உட்கொள்பவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகரிக்கிறது. பொட்டாசியம் இரத்த நாளங்களை தளர்த்துகிறது, இது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. பொட்டாசியம் சத்து உடலில் சோடியத்தின் அளவை பராமரிக்கவும் செயல்படுகிறது.


மேலும் படிக்க | Bone Health: எலும்புகளை பலவீனமாக்கும் ‘5’ ஆபத்தான பழக்கங்கள்..!!


3. இரவில் தூக்கமின்மை


உடலில் பொட்டாசியம் குறைபாடு ஏற்பட்டால், அதன் காரணமாக பதட்டம்  அதிகரிக்கிறது. அதனால் அவரது தூக்கம் பாதிக்கப்பட்டு இரவில் தூங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தூக்கமின்மை பிரச்சனை இன்சோம்னியா (Insomnia) எனப்படும்.


4. அதிக சோர்வு


பொட்டாசியம் உடலின் அனைத்து செல்கள் மற்றும் திசுக்களில் காணப்படும் மிக முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். பொட்டாசியத்தின் அளவு குறையும் போது, ​​அது உடலின் பல செயல்பாடுகளில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.


மேலும் படிக்க | பழம் சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்க கூடாது; எச்சரிக்கும் நிபுணர்கள்..!!


5. வாய்வு அல்லது மலச்சிக்கல்


பொட்டாசியம் குறைபாடு  குடலில் உள்ள தசைகளையும் பாதிக்கிறது, இதன் காரணமாக உடலில் இருந்து உணவு மற்றும் கழிவுப் பொருட்கள் வெளியேறும் செயல்முறையிலும் தாக்குதலை ஏற்படுத்துகிறது. செரிமான செயல்முறை குடலில் மெதுவாக இருந்தால், அது மலச்சிக்கல் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.


பொட்டாசியம் சத்து நிறைந்த உணவு பொருட்கள்


1. உருளைக்கிழங்கு
2. மாதுளை
3. அவகேடோ (வெண்ணெய் பழம்)
4.  சக்கரை வள்ளிக்கிழங்கு
5. கீரை
6. வெள்ளை பட்டாணி
7. இளநீர்
8. பீட்ரூட்
9. சோயாபீன்ஸ்
10. தக்காளி


(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும்  சிகிச்சைக்கான மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.)


மேலும் படிக்க | முகத்தின் அழகை சீர்குலைக்கும் ‘கருவளையங்களை’ விரட்ட சில எளிய டிப்ஸ்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR