Bone Health: எலும்புகளை பலவீனமாக்கும் ‘5’ ஆபத்தான பழக்கங்கள்..!!

எலும்புகள் பலவீனமடைவதற்குப் பின்னால் சத்தான உணவுகளை சாப்பிடாதது முதல் பல பழக்கங்கள் காரணமாக உள்ளன.   

Last Updated : Mar 15, 2022, 03:50 PM IST
  • எலும்புகள் பலவீனமடைவதற்கான முக்கிய காரணங்கள்.
  • அதிக உப்பு சாப்பிடுவது நல்லதல்ல.
  • போதுமான அளவு தூக்கம் இருந்தால் எலும்புகள் வலுவடையும்.
Bone Health: எலும்புகளை பலவீனமாக்கும் ‘5’ ஆபத்தான பழக்கங்கள்..!! title=

இன்றைய வாழ்க்கை முறையில், எலும்புகள் இளம் வயதிலேயே வலுவிழக்கத் தொடங்கி விடுகிறது. இதனால், பின்னாளில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே உங்கள் எலும்புகள் இளம் வயதிலேயே பலவீனமாக இருப்பதற்கான காரணங்கள் என்ன என்பதை அறிந்து கொண்டு, இந்த பழக்கங்களை சரியான நேரத்தில் மாற்றுவதன் மூலம் உங்கள் எலும்புகளை வலுப்படுத்தலாம்.

சோம்பல்

முதல் காரணம் மிகவும் சோம்பேறியாக இருப்பது. உண்மையில், சோம்பல் அதிகம் இருந்தால், உடலின் இயக்கம் குறைகிறது. உங்கள் எலும்புகளை வலுப்படுத்தவதில், உடல் இயக்கம் முக்கிய பங்களிக்கிறது. எனவே, முடிந்த அளவு முதலில் சோம்பலை அகற்றி, சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யவும். இதனால் எலும்புகள் வலுவடையும். 

மேலும் படிக்க | பழம் சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்க கூடாது; எச்சரிக்கும் நிபுணர்கள்..!!

அதிக உப்பு 

இதைத் தவிர, அதிக உப்பை சாப்பிடக்கூடாது, ஏனென்றால் அதிக உப்பை சாப்பிட்டாலும், உங்கள் உடலில் உள்ள எலும்புகள் பலவீனமடையத் தொடங்கும். உப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் எலும்புகளின் அடர்த்தியைக் குறையலாம் என்று நம்பப்படுகிறது. உப்பில் உள்ள சோடியம் உடலில் கால்சியத்தை உறிஞ்சுகிறது. எனவே, உணவில் உப்பு சுவைக்கு ஏற்ப அல்லது சிறிது குறைவாக இருக்க வேண்டும். ஊறுகாய், வடகம் போன்றவற்றில் உப்பு மிக அதிகமாக இருக்கும் என்பதால், அவற்றை மிக குறைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

சூரிய ஒளி 

இன்றைய வாழ்க்கை முறையில், நம் உடலின் மீது சூரிய ஒளி படும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. பலரின் உடலில் வைட்டமின்-டி குறைபாடு உள்ளது. என்ன தான் செயற்கை மருந்து வகைகளை சாப்பிட்டாலும், வலுவான எலும்புகளுக்கு சூரியனில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி மிகவும் முக்கியமானது என்று நம்பப்படுகிறது.

புகைபிடிக்கும் பழக்கம்

எலும்பு ஆரோக்கியத்தை பொறுத்தவரை புகைபிடிப்பவர்களும் மிக கவனமாக இருக்க வேண்டும்.  ஏனெனில் அதை குடிப்பதால் உங்கள் எலும்புகள் பாதிக்கப்படும். புகைபிடித்தல் உங்கள் நுரையீரலை மட்டுமல்ல, உங்கள் எலும்புகளையும் பாதிக்கிறது என்று நம்பப்படுகிறது.

ஊட்டச்சத்து குறைபாடுகள்

உணவில் போதுமான ஊட்ட சத்துக்களை சேர்க்காததும் பெரிய தவறு. பதின்மவயதினர் பலருக்கு துரித உனவுகள் சாப்பிடும் பழக்கம் அதிகம் உள்ளது. இதனால் அவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காமல் எலும்புகள் பலவீனமடைகின்றன. இது தவிர, போதுமான தூக்கம் இல்லாததாலும் எலும்புகள் பலவீனமடைவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும்  சிகிச்சைக்கான மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.)

மேலும் படிக்க | முகத்தின் அழகை சீர்குலைக்கும் ‘கருவளையங்களை’ விரட்ட சில எளிய டிப்ஸ்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News