ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பழங்களில் கொடிமுந்திரிக்கு குறிப்பிட்ட இடம் உண்டு. கொடிமுந்திரியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. நாள்பட்ட மலச்சிக்கல் என்பது வயதானவர்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் மூலநோய்க்கும் வழிவகுக்கும். நார்ச்சத்துக்கு அற்புதமான ஆதாரமாக உள்ள கொடிமுந்திரியில் வேறு பல சத்துக்களும் உள்ளன. அவை ஆரோக்கியத்தை வலுப்படுத்துகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நார்ச்சத்தின் அவசியம்
பெண்களுக்கு நாளொன்றுக்கு 28 கிராம் நார்ச்சத்து தேவை என்றால், ஆண்களுக்கு 34 கிராம் நார்ச்சத்து தேவை. நார்ச்சத்துள்ள உணவுகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முன்னிலை வகிக்கின்றன.


கொடி முந்திரியில் பொட்டாசியம் அதிகம்


கொடிமுந்திரி பொட்டாசியத்தின் நல்ல மூலமாகும், இது பல்வேறு முக்கிய உடல் செயல்பாடுகளுக்கு உதவும் எலக்ட்ரோலைட் ஆகும். செரிமானம், இதயத்துடிப்பு, நரம்பு தூண்டுதல்கள் மற்றும் தசை சுருக்கங்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது.


நமது உடல் பொட்டாசியத்தை இயற்கையாக உற்பத்தி செய்யமுடியாது. எனவே, கொடிமுந்திரியை அப்படியே சாப்பிடலாம், அல்லது அதன் ஜூஸ் குடித்தால், உடலுக்கு தேவையான பொட்டாசியம் கிடைத்துவிடும். உடல்நலக் குறைபாடுகளைத் தவிர்க்க உதவும். என்றாலும், நாள்பட்ட சிறுநீரக நோய் போன்ற நிலைமைகள் இருப்பவர்கள் கொடிமுந்திரிகளைத் தவிர்க்க வேண்டும்.


மேலும் படிக்க | மூளை முதல் எலும்புகள் வரை ஆட்டிவைக்கும் வைட்டமின் பி12: குறைபாட்டை சரி செய்வது எப்படி


கொடிமுந்திரியில் வைட்டமின்கள்
கொடிமுந்திரியில் நார்ச்சத்து, பொட்டாசியம் தவிர, வேறு முக்கியமான வைட்டமின்களும் உள்ளன. வைட்டமின் கே, ரிபோஃப்ளேவின், வைட்டமின் B6, நியாசின் மற்றும் தாமிரம் போதுமான அளவு உள்ளது.  


கொடிமுந்திரியில் இரும்புச்சத்து 
உடலில் போதுமான இரத்த சிவப்பு அணுக்கள் இல்லாதபோது இரத்த சோகை ஏற்படுகிறது, இது இரும்புச்சத்து குறைபாட்டால் உருவாகும் பிரச்சனை ஆகும். இரும்புச்சத்துக்கான நல்ல மூலமாக விளங்கும் கொடிமுந்திரி, உங்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும். கொடிமுந்திரியை நாளொன்றுக்கு 4 அல்லது 5 என்ற அளவில் சாப்பிடலாம். அவ்வப்போது கொடிமுந்திரி ஜூஸ் குடித்து வந்தால் ரத்தசோகை சரியாகும்.  


கொடிமுந்திரியில் போரான் கனிமம்
உலர்ந்த கொடிமுந்திரி போரான் கனிமத்தின் முக்கிய ஆதாரமாகும், இது வலுவான எலும்புகளை உருவாக்க உதவுகிறது. உடலில் போரான் சத்து இல்லை என்றால், நினைவுத்திறன் மற்றும் விழிப்புணர்வு குறையலாம்.


மேலும் படிக்க | எலும்பு முறிவுக்கு காரணமாகும் ஹைபர்கால்சீமியா! இந்த அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கை


எலும்பு அடர்த்தி


புற்றுநோய் சிகிச்சைகள் போன்ற கதிர்வீச்சு சிகிச்சையுடன் தொடர்புடைய எலும்பு அடர்த்தி இழப்பை எதிர்த்துப் போராடுவதில் கொடிமுந்திரி பயனுள்ளதாக இருக்கும். எலும்பு மஜ்ஜையில் கதிர்வீச்சின் விளைவுகளை குறைக்க கொடிமுந்திரி பயனுள்ளதாக இருக்கும். எலும்பு இழப்பைத் தடுப்பதுடன் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.


ஆஸ்டியோபோரோசிஸ் பாதித்தவர்கள் கொடிமுந்திரியை தினசரி அடிப்படையில் எடுத்துக் கொண்டால் அது நல்ல பலனளிக்கும்.  எலும்பு அடர்த்தி குறைந்த மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்பு உடையும் வாய்ப்புகளை கொடிமுந்திரி குறைக்கிறது.  


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | அதிக கால்சியமும் ஆபத்து தான்! தமனிகளில் கால்சியம் படிந்தால் என்ன ஆகும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ