கொரோனாவால் ஜப்பானில் அவசர நிலை நீட்டிப்பு; ஒலிப்பிக் போட்டிகளின் நிலை என்ன
உலகம் முழுவதுமே கொரோனா பரவலின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், ஜப்பான் நாட்டிலும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.
உலகம் முழுவதுமே கொரோனா பரவலின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், ஜப்பான் நாட்டிலும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.
தொற்று பரவலை தடுக்க ஜப்பான் அரசு, டோக்கியோ, ஒசாகா க்யோட்டா, ஹ்யோகோ ஆகிய பகுதிகளில் அவசரகால நிலையை மே இறுதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. இருப்பினும் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா இந்த கோடையில் டோக்கியோ ஒலிம்பிக்கை நடத்த இன்னும் சாத்தியக்கூறு இருப்பதாக கூறுகிறார்.
அவசரகால நிலை பிரகடனத்தின் மூலம் நான்காவது அலை கொரோனா தொற்றைத் (Corona Virus) தடுக்கும் என்ற அரசாங்கம் நம்பிக்கை பொய்யானது. அவசர நிலை பிரகடனம் அமலில் இருந்த போதிலும், டோக்கியோ மற்றும் ஒசாகா போன்ற முக்கிய நகரங்களில் புதிய பாதிப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஜூலை 23 ஒலிம்பிக் விளையாட்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒலிம்பிகஸ் போட்டிகள் தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், இப்போது ஒலிம்பிக்ஸ் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் நடப்பதாக தொட்டமிட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக இந்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | ரஷ்யாவின் Sputnik V தடுப்பூசி AK47 போல நம்பகமானது: விளாடிமிர் புடின்
எனினும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்றி, பாதுகாப்பான முறையில் ஒலிம்பிக்கை நடத்த முடியும் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் ஜப்பான் வலியுறுத்தியுள்ளது.
ஆனால், ஒலிம்பிக்கை ரத்து செய்யக் கோரி ஜப்பானி அரசுக்கு ஆன்லைன் மூலம் 2,30,000 க்கும் மேற்பட்டோர் மனுவை அளித்துள்ளனர்.
ஜப்பான் மற்ற நாடுகளைப் போல தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்படவில்லை. ஆனால் அதன் தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெறவில்லை. ஜப்பானில் உள்ள 12 கோடியே 60 லட்சம் மக்கள்தொகையில் சுமார் 2% பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ALSO READ | GOOD NEWS! DRDO-வின் 2-deoxy-D-glucose கொரோனா மருந்தின் பயன்பாட்டிற்கு DCGI ஒப்புதல்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR