கொரோனா நோய்த் தொற்று எண்ணிக்கை நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ளது.
ஏற்கனவே கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2 வகையான தடுப்பூசி பயன்பாட்டில் உள்ள நிலையில், ரஷ்யாவின் கொரோனா வைரஸ் (Corona VIrus) தடுப்பூசியான ஸ்பூட்னிக் -V (Sputnik-V ) தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு மருந்துப் பொருட்கள் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) அனுமதி வழங்கியது.
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் (Dr Reddy's) நிறுவனம், 10 கோடி டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசியை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.இந்நிலையில், முதல் கட்டமாக 1கோடியே 25 லட்சம் தடுப்பூசிகளை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்ய டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவின் கோவிட் -19 தடுப்பூசிகள் ஏ.கே .47 போலவே நம்பகமானவை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் நான்கு தடுப்பூசிகளின் பயன்பாட்டிற்கு ரஷ்யா இதுவரை அனுமதி அளித்துள்ளது.
ALSO READ | கொரோனா நோயாளிகள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் Prone Positioning
மேலும், COVID-19 நோயை கட்டுப்படுத்த 79.4 சதவீத செயல்திறனைக் கொண்ட ஸ்பூட்னிக் லைட் ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு (Sputnik Light vaccine) ரஷ்யா அங்கீகாரம் கொடுத்துள்ளது. இந்த செய்தியை ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (RDIF) தெரிவித்துள்ளது.
ரஷ்யா ஜனவரி மாதம் 'ஸ்பூட்னிக் லைட்' தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதனைகளை மேற்கொள்ள தொடங்கியது. ஆய்வுகள் இன்னும் நடைபெற்று வரும் நிலையில், 'ஸ்பூட்னிக் லைட்' என்பது ரஷ்யாவில் அங்கீகரிக்கப்பட்ட நான்காவது உள்நாட்டு கோவிட் -19 தடுப்பூசி ஆகும்.
ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ, நான்காவது தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்குவது வைரஸுக்கு எதிராக கூட்டு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்த உதவும் என்று கூறினார். கோவிட் -19 க்கு எதிராக ஹெர்ட் இம்யூனிட்டி யை உருவாக்குவதற்கு மக்கள்தொகையில் குறைந்தது 70 சதவிகிதத்தினருக்கு தடுப்பூசி போடுவது அவசியம் என்று பெரும்பாலான விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ALSO READ | Sputnik-V தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR