எடை இழப்பு குறிப்புகள்: உடல் பருமன் அல்லது அதிக எடை பிரச்சனை மிகவும் தீவிரமானது. இது பல வகையான நோய்களை அதிகரிப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதிக எடை கொண்டவர்கள் இதய நோய்கள், நீரிழிவு நோய், மன அழுத்தம் என பல வகையான பிரச்சனைகளுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. இது பற்றி சுகாதார நிபுணர்கள் பல எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். மக்கள் உடல் எடையை குறைக்க பல வித முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இருப்பினும், பலரால் வெற்றிகரமாக உடல் எடையை குறைக்க முடிவதில்லை. உடல் எடையை குறைக்க அதிக சிரமம் தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும் இல்லை. சில எளிய, இயற்கையான வழிகளிலும் இதை செய்யலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிக எடை கொண்டவர்கள் கண்டிப்பாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதிக எடை கொண்ட ஒருவர் 4-5 கிலோ எடையைக் குறைத்தாலும், பல நாள்பட்ட நோய்களின் அபாயத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


உடல் எடையை குறைக்க, உணவில் கவனம் செலுத்துவதுடன், சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவதும் மிக முக்கியம் என்கிறார்கள் சுகாதார நிபுணர்கள். தினசரி உணவில் சிலவற்றைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் எடையை எளிதாகக் குறைக்கலாம். அவற்றில் ஒன்றுதான் அவகேடோ பழம். அதை பற்றி இந்த பதிவில் காணலாம். 


அவகேடோ நன்மை பயக்கும்


சில பழங்களை உட்கொள்வது எடை இழப்புக்கு நன்மை பயக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர், அவகேடோ பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக உலகளவில் அதன் தேவை அதிகரித்துள்ளது. அவகேடோ பழத்தில் எடையை குறைக்கும் பல கூறுகள் உள்ளன. இதை உட்கொள்வது பல நாள்பட்ட நோய்களின் அபாயங்களிலிருந்து பாதுகாக்கிறது.


மேலும் படிக்க | அடிக்கடி நெஞ்சு வலி ஏற்படுகிறதா... ‘இவை’ காரணமாக இருக்கலாம்!


ஆய்வில் கண்டறியப்பட்டது என்ன?


அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுபவர்களுக்கு எடை அதிகரிக்கும் அபாயம் குறைவு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவகேடோ உட்கொள்ளாதவர்களை விட அவகேடோ உட்கொள்பவர்களுக்கு  வளர்சிதை மாற்ற நோய்க்குறியின் ஆபத்து குறைவாக உள்ளதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இது எடை அதிகரிப்பின் அபாயத்தைக் குறைப்பதில் நன்மை பயக்கும். கொழுப்பை எரிக்க உதவும் பழங்களில் அவகேடோ பழமும் ஒன்று என கண்டறியப்பட்டுள்ளது.


அதிகப்படியான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள்


எடையைக் குறைப்பதில் அவகேடோ பழம்  எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிய மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்தப் பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவகேடோ பழங்கள் பசியை குறைக்கலாம் என்ற உண்மையின் அடிப்படையில் எடை இழப்பை ஊக்குவிப்பதில் இது உதவியாக இருக்கும் என்று சில ஆரம்ப சான்றுகள் தெரிவிக்கின்றன.


அவகேடோ பழத்தின் மேலும் பல நன்மைகள்


அவகேடோ பழம் உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமின்றி, உடலுக்கு இன்னும் பல நன்மைகளையும் தரக்கூடியது.


அவகேடோ பழங்கள் பெரும்பாலும் மோனோசாச்சுரேட்டட் ஆகும். இது ஒரு வகை ஒலிக் அமிலமாகும். பல ஆய்வுகள் ஒலிக் அமிலம் உடலில் வீக்கத்தைக் குறைப்பதற்கும் இதய நோய்களின் அபாயங்களிலிருந்து பாதுகாப்பதற்கும் பயனுள்ளதாக இருப்பதையும் கண்டறிந்துள்ளன. இது தவிர, இந்த பழத்தை உட்கொள்வது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதற்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | தினமும் ஊற வைத்த 10 பாதாம்... உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ