Masoor Dal For Rapid Weight Loss News In Tamil : நம்மில் பலர், உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுவோம். உடல் எடையை குறைக்க உடற்பயிற்சிகள் எந்த அளவிற்கு அவசியமோ, அதே போல நாம் இருக்க வேண்டிய டயட்டும் மிக மிக முக்கியம். உடல் எடை அதிகரித்து காணப்பட வாழ்வியல் முறைகள், உணவு பழக்க வழக்கங்கள் என பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இதையெல்லாம் களைந்து, உண்மையாகவே உடல் எடையை குறைக்க நினைத்தால் அதற்கான முயற்சிகளை ஒருவர் கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் கூற்றாக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிலருக்கு மருத்துவ காரணங்களினால் கூட உடல் எடை அதிகரித்து காணப்படும். உடல் எடை அதிகரிப்பால், நீரிழிவு நோய், உடல் பலவீனம், இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படும். உடல் எடையை குறைக்க, அத்றான டயட்டை கடைப்பிடிப்பது, மிகவும் முக்கியமானதாகும். இந்த டயட்டில் மைசூர் தாலை சேர்த்துக்கொண்டால் கண்டிப்பாக எடையை வேகமாக குறைக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


உடல் எடையை குறைக்க மசூர் பருப்பு எப்படி உதவுகிறது? 


உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், முதலில் பசியை கட்டுப்படுத்த வேண்டும். அப்படி பசியை கட்டுப்படுத்த, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தங்களது உணவில் அவர்கள் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். அப்படி, நார்ச்சத்து நிறைந்த உணவு வகைகளுள் ஒன்று, மைசூர் பருப்பு. இதை சேர்த்த உணவை சாப்பிடுவதால் வயிற்றில் நீண்ட நேரம் பசி உணர்வு ஏற்படாமல் இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 


கலோரியின் அளவு:


பிற பருப்பு வகைகளுடன் ஒப்பிடுகையில், மைசூர் தாலில் கலோரியின் அளவு குறைவாக இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதில் நிறைந்திருக்கும் அதிகளவிலான புரத சத்துகள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இந்த பருப்பு, வளர்ச்சிதை மாற்றங்களும் ஏற்படாமல் தடுக்கிறது. 


மேலும் படிக்க | உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? வீட்டிலேய ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்யுங்கள்..


இரும்புச்சத்து:


இரும்புச்சத்து நிறைந்த உணவுகளுள் ஒன்று, மைசூர் பருப்பு. உடலில் இரும்புச்சத்தின் அளவு குறைகையில், சோர்வு போன்ற உணர்வுகள் ஏற்படலாம். இது, உடல் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும். இப்படி உடலில் எப்போதும் சோர்வுணர்வு இருந்தால் எடையை குறைப்பது கடினமான பயணமாக இருக்கலாம். மைசூர் பருப்பில் இரும்புச்சத்தினை அதிகரிக்கும் திறன்கள் உள்ளன. அதனால் கண்டிப்பாக இதனை டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு:


மசூர் தாலில் பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து போன்ற பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துகள் அனைத்தும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவாகும். இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் ஒரு வழியில் மட்டுமன்றி பல்வேறு வகைகளில் எடை இழக்க உதவுகிறது. 


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கழுத்தில் கருப்பு கருப்பா இருக்கா? ‘இந்த’ மேஜிக் வைத்தியத்தை செய்து பாருங்கள்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ