இந்திய தொழில் துறையின் ஜாம்பவான்களில் ஒருவரான டாடா குழும தலைவர் ரத்தன் டாடாவின் மறைவால் நாடு முழுவதும் சோகமான சூழல் நிலவுகிறது. ரத்தன் டாடா ஒரு தொழிலதிபர் மட்டுமல்ல, ஒரு சிறந்த ஆளுமையும் கூட. நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் நீங்கள் நிச்சயமாக டாடா தயாரிப்பு பொருட்களைக் காணலாம். டாடா உப்பு, பருப்பு வகைகள்  முதல் ஆடைகள், எலக்ட்ரிக் சாதனங்கள் முதல் கார் வரை சாமான்ய மக்களின் தேவையை உணர்ந்து அதற்கேற்ப அவர் வியாபாரம் செய்து வந்தார் ரத்தன் டாடா. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில நாட்களாகவே ரத்தன் டாடாவுக்கு உடல்நிலை சரியில்லை. மும்பையில் உள்ள புகழ்பெற்ற ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். ரத்தன் டாடா குறைந்த ரத்த அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவர் இதய நோய் நிபுணர் டாக்டர் ஷாருக் ஆஸ்பி கோல்வாலாவின் மேற்பார்வையில் சிகிச்சை பெற்று வந்தார்.


டாக்டர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் ரத்தன் டாடாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. முதுமையினால் ஏற்படும் பிரச்சனைகள் அவரது உடல் நிலைமையை மோசமாக்கியது. ரத்தன் டாடா குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், உடலின் பல பாகங்களின் செயல்பாடுகள் படிப்படியாக பாதிக்கப்பட்டன. நீரழிவு பிரச்சனையாலும் அவதிப்பட்டு வந்ததால், நிலைமை மேலும் மோசமானது


குறைந்த இரத்த அழுத்தம் எந்த அளவிற்கு ஆபத்தானது?


உங்கள் இரத்த அழுத்தம் 90/60 க்கு குறைவாக இருந்தால், மருத்துவர்கள் அதை குறைந்த இரத்த அழுத்தம் என்று கருதுகின்றனர். குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக, இதயம், மூளை மற்றும் பிற உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் குறையத் தொடங்குகிறது. இரத்த அழுத்தம் திடீரென குறைவதால், மூளைக்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கல் குறையத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், தலைச்சுற்றல் மற்றும் சில நேரங்களில் மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.


மேலும் படிக்க | Ratan Tata Achievements | டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா செய்த சாதனைகள்!


குறைந்த இரத்த அழுத்தத்திற்கான சிகிச்சை


குறைந்த இரத்த அழுத்தம் லோ பிபி பிரச்சனை உள்ளவர்கள் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். இது தவிர, உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையிலும் சில முக்கியமான மாற்றங்களைச் செய்ய வேண்டும்.


1. உப்பில் உள்ள சோடியம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. அதனால் டயட்டில் போதுமான அளவு உப்பு இருப்பதை உறுதி செய்வது அவசியம்.


2. உலர் திராட்சை அட்ரீனல் சுரப்பியின் செயல்பாட்டை தூண்டி இரத்த அழுத்த அளவை சீராக பராமரிக்கிறது.


3. உடலில் நீர் பற்றாக்குறை இருந்தால், இரத்த அழுத்தத்தை குறையும். அதனால், ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். திரவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளவதும் உதவும்.


3. உட்கார்ந்த நிலையில் இருந்து எழுந்திருக்கும் போது, படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போதும், கவனமாக இருங்கள்


4.  எழுந்து நிற்பதற்கு முன் உங்கள் கால்களையும் கணுக்கால்களையும் சிறிது நீட்டி அசைக்கவும்


5. படுக்கையில் இருந்து தடாலென்று எழுந்திருக்காமல், சற்று நிதானமாக எழுந்திருக்கவும்


6. மது பழக்கம் மற்றும் சிகரெட்டிலிருந்து விலகி இருங்கள்


7. தவறாமல் உடற்பயிற்சி செய்வதும் அவசியம்


8. தூங்கும் போது உங்கள் தலையை உயர்த்திய நிலையில் வைத்துக் கொள்ளவும்


9. கனமான பொருட்களை தூக்குவதை தவிர்க்கவும்


10. நீண்ட நேரம் அசையாமல் நிற்பதைத் தவிர்க்கவும்


11. கார்போஹைட்ரேட் உட்கொள்ளலை குறைக்கவும்


12. சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக ஓய்வெடுக்கவும்.


மேலும் படிக்க | Tata Salt முதல் Tata Motors வரை: ரத்தன் டாடா எனும் சாம்ராஜ்யம்.. - இனி சாமானியனுக்காக யார் கனவு காண்பார்கள்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ