புதுடெல்லி: வாழைக்காயை உண்பதால் என்னெற்ற நன்மைகள் கிடைக்கும். வாழைக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும்,நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. மேலும் பெருங்குடல் புற்று நோய் வராமல் கவசமாய் செயல்படுகிறது. வழைக்காய் விட்டமின், கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. எனவே, வாழைக்காயை நமது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியமானது மற்றும் பயனுள்ளது என்பதை அறிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எடை குறைக்க உதவுகிறது: எடை இழப்புக்கு வாழைக்காய் சிறந்ததாக கருதப்படுகிறது. அதாவது, நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், தினமும் ஒரு வாழைக்காய் சாப்பிடுவது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் ஏராளமான நார்ச்சத்துக்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.


மேலும் படிக்க | அகத்தை சீராக்கும் ‘சீரகம்’; ஆனால் அளவிற்கு மிஞ்சினால் பெரும் கேடு!


வாழைக்காய் செரிமானத்தை மேம்படுத்துகிறது: வாழைக்காயை தினமும் சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும். எனவே, உங்கள் வயிறு ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், கண்டிப்பாக வாழைக்காயை சாப்பிடுங்கள், ஏனெனில் வயிறு நன்றாக இருந்தால், உங்கள் உடலும் ஃபிட்டாக இருக்கும். 


இதய நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும்: இது தவிர உடல் பருமன், இதய நோயாளிகளுக்கும் வாழைக்காய் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அப்படிப்பட்டவர்களுக்கு வாழைக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதே நேரத்தில், நீரிழிவு நோயாளி தனது உணவில் வாழைக்காயை சேர்த்துக் கொள்ள வேண்டும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உடல் எடையை குறைக்கனுமா? மறந்து கூட இந்த 5 தவறுகளை செய்யாதீங்க


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR