தயிர் ஆரோக்கியமான உணவு. இதில் உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடன்டுகள் மற்றும் புரோபயாடிக் ஆகியவை இருக்கிறது. ஆரோக்கியமாக இருக்க, தயிரை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், அவற்றை சாப்பிடுவதில் சில வழிமுறைகள் இருக்கின்றன. அதனை தெரிந்து கொள்வது ஆரோக்கிய நன்மைக்கு உதவும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தயிர் சாப்பிடும் முறை


சில சமயங்களில் தயிர் நன்கு உறையாமல் இருக்கும். அதாவது பால் நிலைக்கும் தயிர் நிலைக்கும் இடையே இருக்கும். அதனை உட்கொண்டால், பசியைக் குறைத்து, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், வாய்ப்புண் ஆகியவை ஏற்படும். இதனால், நன்கு உறைந்த தயிரை சாப்பிடுவது சிறந்தது. மண் சட்டியில் தயிரை உறைய வைத்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது. நன்கு கெட்டியாகவும், தேக ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகவும் இருக்கும். 


மேலும் படிக்க | குழந்தையின்மை பிரச்சனை அதிகரிப்பு..! ஆண்மலட்டு தன்மைக்கு தீர்வு


தயிரை சூடாக சாப்பிடலாமா?



தயிரை ஒருபோதும் சாப்பிடக்கூடாது என சில நிபுணர்கள் கூறுகிறார்கள். எண்ணெயில் கடுகு தாளித்து உப்பு சேர்த்து சாப்பிடுவார்கள். இது உடலுக்கு ஏற்றதல்ல. மேலும், உடல் எடையை கூட்ட வேண்டும் என விரும்புபவர்கள், வேகவைத்த பச்சைப்பயிறு, நெல்லிக்காய்த் துவையலுடன் தயிர் சாப்பிடலாம். உறைந்த தயிரின் காணப்படும் தெளிந்த நீரை வெறும் வயிற்றில் குடித்தால் தொண்டை எரிச்சல், குமட்டல், உடற்சூடு, களைப்பு, தலைச்சளி நீங்கும்.


உடல் வெப்பத்தை குறைக்கும் தயிர் 


தயிரை துணியில் வடிகட்டி அதிலுள்ள நீர் முழுவதும் வடிந்த பிறகு அதனுடன் சர்க்கரை, ஏலக்காய், கிராம்பு, குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சேர்த்து குளிர வைத்து சாப்பிடலாம். இது உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். மேலும், பசியில்லாதவர்கள் லேசான புளிப்புடன் இருக்கும் தயிரை சாப்பிட்டால் பசி எடுக்கும்.


இவர்கள் சாப்பிடக்கூடாது


நன்றாக புளித்த தயிர் ரத்தக்கொதிப்பு, பித்த வாயு, வயிற்றுக்கோளாறுகள் உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல. இரவில் குளிர்ச்சியான தன்மையில் தயிரைச் சாப்பிட்டால் ஜீரணக்குறைவு, மூச்சிறைப்பு, ரத்த சோகை, காமாலை, தோல் நோய்கள், ரத்தக்கொதிப்பு போன்றவை உண்டாகும். இரவில் தயிர் சாப்பிட வேண்டிய நிர்ப்பந்தம் வந்தால் அதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிடலாம். அல்லது சீரகம், இந்துப்பு, பெருங்காயம் சேர்த்து சாப்பிடலாம். ஏற்கனவே உடல் பிரச்சனை இருப்பவர்கள் தயிர் சாப்பிடுவது குறித்து தங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.


மேலும் படிக்க | ஆண்களுக்கு ஹெல்த் அலர்ட்! சிறுநீரகத்தை பலவீனப்படுத்தும் ’இந்த’ உணவுகள் வேண்டாமே!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ