ஆண்களுக்கு ஹெல்த் அலர்ட்! சிறுநீரகத்தை பலவீனப்படுத்தும் ’இந்த’ உணவுகள் வேண்டாமே!

Unhealthy Foods For Kidney: சிறுநீரகத்தை பலவீனப்படுத்தும் சில உணவுகள், ஆண்களுக்கு மிகப் பெரிய பிரச்சனையான சிறுநீரகத்தில் கற்களையும் உருவாக்கிவிடும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 24, 2023, 07:04 AM IST
  • சிறுநீரகத்தை நேசிப்பவரா?
  • கட்டாயம் இந்த உணவுகளை தவிர்க்கவும்
  • சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கும் உணவுகள்
ஆண்களுக்கு ஹெல்த் அலர்ட்! சிறுநீரகத்தை பலவீனப்படுத்தும் ’இந்த’ உணவுகள் வேண்டாமே! title=

உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் முக்கியமான உறுப்பு சிறுநீரகம். இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கும் ஹார்மோன்களை சுரக்கும் கிட்னி, இரத்தத்தில் உள்ள அழுக்குகளை சுத்தீகரித்து வடிகட்டுகிறது. சிறுநீரகம், தனது பணியை சரியாக செய்யவில்லை என்றால், உடலில் பல பிரச்சனைகள் ஏற்படலாம், எனவே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறுநீரகத்தை கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம். சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள், தவறுதலாக கூட இந்த 5 உணவுகளை சாப்பிடுவது கிட்னியின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

சிறுநீரக ஆரோக்கியம்

 நம் உடலில் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன, இரண்டும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் தற்போது, ​​மோசமான உணவுப் பழக்கம் மற்றும் மாறிப்போன வாழ்க்கை முறையால், நம் உடலின் அத்தியாவசிய உறுப்புகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்காத உணவுகளை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதோடு, சில உணவுகளை தவிர்க்க வேண்டும். 

சிறுநீரகத்தை பலவீனப்படுத்தும் உணவுகள்

சிறுநீரக ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகளில் சில உங்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளாகவும் இருக்கலாம். உங்கள் சிறுநீரகம் பாதிக்கப்படாமல் இருக்க விரும்பினால், உங்கள் சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்காத சில உணவுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க | குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட... சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

சிறுநீரகத்தை பலவீனப்படுத்தும் வாழைப்பழம்  
பசித்தவுடன் வாழைப்பழத்தை சாப்பிட்டால், பசி அடங்கிவிடும், புத்துணர்ச்சி கிடைக்கும். ஆனால், வாழைப்பழங்களை அதிகமாக சாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்கும்.  வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது, இது உங்கள் சிறுநீரகத்தின் செயல்படும் திறனை பாதிக்கிறது. அதனால் தான் வாழைப்பழம் சாப்பிடுவதை குறைக்க வேண்டும்.

உருளைக்கிழங்கு
அதிகமாக உருளைக்கிழங்கு சாப்பிடுவது சிறுநீரகத்தின் செயல்பாட்டை பாதிக்கும். அதிலும் குறிப்பாக தோல் நீக்கப்பட்ட உருளைக்கிழங்கு உட்கொள்வதைக் குறைக்க வேண்டும். தோலுரித்த உருளைக்கிழங்கை சாப்பிடுவதால் சிறுநீரகம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி சிறுநீரகத்தின் செயல்பாடும் தடைபடுகிறது. தோல் நீக்காத உருளைக்கிழங்கை பயன்படுத்துவதே சிறுநீரகத்திற்கு நீங்கள் செய்யும் நன்மையாக இருக்கும்.  

மாமிச உணவு
புரதம் நிறைந்த அசைவ உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்க உதவும், ஆனால் இந்த உணவுகளில் பெரும்பாலானவை மனிதர்களின் சிறுநீரகத்தை பாதிப்பவை. அசைவம் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரகம் செயலிழக்கும் அபாயமும் அதிகமாக உள்ளது. அதனால் தான் அசைவ உணவுகளை குறைக்க வேண்டும்.  

மேலும் படிக்க | Blood Purifier: ரத்தத்தை சுத்தம் செய்ய ‘இந்த’ உணவுகளை டயட்டில் சேர்க்கவும்!

சிறுநீரகத்தைப் பாதிக்கும் தக்காளி
சிறுநீரக நோயாளிகள் விதைகள் கொண்ட உணவுகளை உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் விதைகள் கற்களை உருவாக்குகின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் தக்காளியை தேவைக்கு அதிகமாகவே உட்கொள்கிறோம்.

அதிகப்படியான தக்காளி நுகர்வு சிறுநீரகக் கற்களின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே, சிறுநீரகத்தில் கற்கள் இருப்பவர்கள் தக்காளி உட்கொள்வதை நிறுத்த வேண்டும்.

பருப்பு வகைகள்
பருப்பு உள்ளிட்ட புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். சிறுநீரகங்களுக்கு அதிக அழுத்தம் கொடுப்பது பருப்பு. நாம் அன்றாட வாழ்வில் அதிக பருப்பு வகைகளை உட்கொள்வதை கட்டுப்படுத்த வேண்டும். அது சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படாமல் இருக்க உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க | Pomegranate: மாதுளை சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா? மாதுளம்பழமும் பெண்களின் ஆரோக்கியமும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News