சமீபகாலமாக குழந்தையின்மை பிரச்சனை நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. செயற்கை கருவூட்டல்களும், கவுன்சலிங் தொடர்பான மருத்துவ ஆலோசனை வழங்குபவர்களும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகளவில் நகரப் பகுதிகளில் பார்க்க முடிகிறது. அவர்களின் கூற்றுப்படி, பெண்கள் கருவுறாமைக்கு ஆண்களிடையே இருக்கும் மலட்டு தன்மையை சுட்டிக்காட்டுகின்றன.
இது குறித்து அதிகம் கவனம் செலுத்துப்படாமல் இருப்பதாக கூறும் நிபுணர்கள், மலட்டுதன்மைக்கு காரணமாக அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். அண்மைக்காலத்தில் கருவுறாமை பிரச்சனைக்கான காரணங்களை ஆராயும்போது 50 விழுக்காடு ஆண் மலட்டுத் தன்மையே முக்கிய காரணமாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | வெள்ளை பிரெட் அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஆபத்து -எச்சரிக்கை
ஆண்கள் மலட்டு தன்மைக்கான அறிகுறிகள்;
* விரைகளைச் சுற்றி வலி அல்லது வீக்கம்
* ஆண்களின் மார்பகங்களில் அசாதாரண மாற்றங்கள்
* தொடர்ச்சியான சுவாச நோய்த்தொற்றுகள்
* முடி கொட்டும் பிரச்சனை இருக்கும்
* விந்தணு எண்ணிக்கை குறைதல்
ஏன் இவை ஏற்படுகின்றன?
ஆண்கள் மலட்டு தன்மை ஏற்படுவதற்கு பல்வேறு காரணிகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. மோசமான வாழ்க்கை முறை, புகைபழக்கம், மதுபோதைக்கு அடிமையாதல், விந்தணு தண்டு அடைப்பு, நாள்பட்ட விந்தணு நோய் உள்ளிட்டவை காரணமாக இருக்கலாம். இது குறித்து உடனடியாக மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
மேலும் படிக்க | Blood Purifier: ரத்தத்தை சுத்தம் செய்ய ‘இந்த’ உணவுகளை டயட்டில் சேர்க்கவும்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR