எவ்வளவு உடற்பயிற்சி செய்தும் உடல் எடை குறையவில்லையா..? ‘இவை’ காரணமாக இருக்கலாம்..!
Weight Loss Mistakes: ஒரு சிலரால் எவ்வளவு முயற்சி செய்தாலும் உடல் எடையை குறைக்க முடியாமல் போய் விடும். இதற்கு காரணம் என்ன..? இங்கே தெரிந்து கொள்வோம்.
நீங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டும் உங்களால் உட்ல எடையை குறைக்க முடியாமல் போயிருக்கலாம். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதனால் நாம் நமது முயற்சியை கூட பாதியிலேயே கைவிடும் அபாயமும் இருக்கிறது. அதில், சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் கவனிக்காமல் இருக்கலாம்:
கண்ணாடி முன் நின்று பார்ப்பதால் நம் உடல் எடை குறைந்திருக்கிறதா இல்லையா என்பது நமக்கு தெரியாமல் போயிருக்கும். அதனால் நாம் எப்போதும் உடல் எடையை சரிபார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். உடல் எடை குறைய ஆரம்பிக்கும் போது உடல் மெலிய தொடங்கி விடாது. அதனால், தினமும் எவ்வளவு உடல் எடையை குறைக்கிறீர்கள் என்பதை ட்ராக் செய்து கொண்டே இருங்கள். தினமும் கிராம் கணக்கில் எடை குறைத்திருந்தாலும் சரி, அதை குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளுங்கள். மேலும், நீங்கள் உடல் எடையை குறைப்பதற்காக உடற்பயிற்சி செய்கையில் உங்களுக்கே தெரியாமல் தசைகளும் வளரும், இதனால் உடல் எடை குறையாதது போன்ற தோற்றத்தில் இருப்பீர்கள்.
சாப்பிடுவதை கண்காணிக்காமல் இருத்தல்:
நீங்கள் எடையைக் குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் அதுகுறித்த விழிப்புணர்வும் மிகவும் முக்கியமானது. ஒரு வேளைக்கு எவ்வளவு சாப்பிடுகிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
உணவு உட்கொள்ளலைக் கண்காணிப்பது எடையைக் குறைக்க உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உணவு நாட்குறிப்புகளைப் பயன்படுத்துபவர்கள் அல்லது உணவைப் புகைப்படம் எடுத்து அதை கண்காணிப்பவர்கள், அதிக உடல் எடையை குறைக்கின்றனராம்.
அதே நேரத்தில், உணவு கண்காணிப்பில் சில குறைபாடுகளும் உள்ளது. குறிப்பாக இது எடை இழப்பு நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் போது. உணவுக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு, கலோரி எண்ணிக்கை மற்றும் உணவு கண்காணிப்பு ஆகியவை தீங்கு விளைவிக்கும் பக்க விளைவுகளை உருவாக்குகிறது. எனவே, இதில் கவனம் அவசியம்.
போதுமான புரதத்தை உட்கொள்ளாமல் இருத்தல்:
உடல் எடையை குறைக்க புரதம் ஒரு முக்கியமான சத்து என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 25-30% கலோரிகளில் புரதத்தை உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை ஒரு நாளைக்கு 80-100 கலோரிகளால் அதிகரிக்கலாம். இது பசி மற்றும் சிற்றுண்டிக்கான விருப்பத்தையும் வெகுவாகக் குறைக்கும். நீங்கள் காலை உணவை சாப்பிட்டால், புரதத்தை உட்கொள்கிறீர்களா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதிக புரோட்டீன் காலை உணவை உண்பவர்களுக்கு பசி குறைவாக இருக்கும் என்றும், நாள் முழுவதும் அவர்களுக்கு நன்றாக ஆற்றல் இருக்கும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
கொழுப்பு உணவுகளை அதிகம் உட்கொள்பவராக இருப்பீர்கள்:
உடல் எடையை குறைப்பதில் சிக்கல் உள்ள பலர் அதிக கலோரிகளை சாப்பிடுகிறார்கள். இது உங்களுக்குப் பொருந்தாது என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் உங்களுக்கே தெரியாமல் அதிக கொழுப்புள்ள உணவை நீங்கள் எடுத்து கொண்டிருக்கலாம். அதனால், இந்த விஷயத்தில் கவனம் அவசியம்.
வெயிட் லிஃப்ட் செய்வதில்லை:
எடையை குறைக்கும்போது நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று, எடை தூக்குதல் போன்ற சில வகையான உடல் எடை குறைப்பு பயிற்சிகள். இது தசையை பராமரிக்க உதவும். மேலும், இது நீங்கள் உடற்பயிற்சி செய்யாவிட்டால் உடல் கொழுப்பு குறைய அதிக நாட்கள் எடுக்கும். எடையைத் தூக்குவது வளர்சிதை மாற்ற மந்தநிலையைத் தடுக்கவும், உங்கள் உடல் தொனியாகவும் தசையாகவும் இருப்பதை உறுதிப்படுத்தவும் உதவும்.
சர்க்கரை பானங்களை அருந்துதல்:
சர்க்கரை பானங்கள் கணிசமாக கொழுப்பை உண்டாக்கும் பொருட்களாகும். டயட் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அவற்றில் உள்ள கலோரிகளை உங்களால் குறைக்க முடியாது. அதனால் முடிந்தளவு இனிப்பான சர்க்கரை நிறைந்த பானங்களை தவிர்த்திடுங்கள்.
அடிக்கடி சாப்பிடுபவராக இருப்பீர்கள்:
டயட் இருக்கும் பலர், தங்கள் உணவை பிரித்து 3 வேளை சாப்பிட வேண்டிய இடத்தில் 6 வேளை சாப்பிடுவர். இது, உங்கள் உடல் எடையை குறைக்க உதவலாம். ஆனால், நீங்கள் ஒரு வேளைக்கு எந்த அளவு உணவை எடுத்து கொள்கிறீர்களோ, அதே அளவு உணவைதான் பிரித்து சாப்பிட வேண்டும். அதற்கு அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை குறையாமல் போய் விடும்.
மேலும் படிக்க | ஜாக்கிரதை! இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? சிறுநீரக பாதிப்பாக இருக்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ