உடல் எடையைக் குறைக்கும் பானம்: பல நேரங்களில் உடல் எடையை குறைக்க கடினமாக உழைக்கிறோம். சத்துள்ள பழங்கள், காய்கறிகள், ஆரோக்கியமான பழச்சாறுகளை உட்கொள்கிறோம். ஜிம் சென்று பல வித முயற்சிகளை எடுக்கிறோம், உடற்பயிற்சி செய்கிறோம். எனினும், இப்படி பல வித நடவடிக்கைகளை எடுத்தாலும், உடல் எடை குறைவதில்லை. எனினும் சிறிதளவு ஆரோக்கியமற்ற உணவை உட்கொண்டாலும், நாம் செய்யும் கடின உழைப்பு அனைத்தும் வீணாகிவிடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் எடையைக் குறைப்பது சாதாரண விஷயமல்ல. இதற்கு ஒருவர் கடினமாக உழைக்க வேண்டும்.  மற்றும் சரியான உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். இரவில் தூங்கும் முன் நாம் உட்கொள்ளும் உணவு நமது உடல் எடையுடன் தொடர்புகொண்டுள்ளது. அனைவரும் தங்கள் எடையை வேகமாக குறைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் பல உடற்பயிற்சிகள் செய்தும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டும் எடையை குறைக்க முடிவதில்லை. இதுபோன்ற பிரச்சனையை நீங்கள் எதிர்கொண்டால், உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். உடல் எடையை குறைப்பதற்கான ஒரு எளிய, இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். இதன் மூலம் எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல், உங்கள் இடுப்பு மற்றும் வயிற்றில் சேர்ந்துள்ள சதையையும் குறைக்கலாம். 


எடை இழப்புக்கான முதல் மற்றும் முக்கியமான விதி என்னவென்றால், நீங்கள் பட்டினி கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் பசியினால் உங்கள் கொழுப்பை எரிக்கவோ, அல்லது உங்கள் எடையை குறைக்கவோ முடியாது. மாறாக, நீங்கள் அதிக பசி எடுக்கும் வரை சாப்பிடாமல் இருந்தால், இயல்பாக உட்கொள்வதை விட அதிக உணவை உட்கொள்வீர்கள். இந்த பதிவில் ஒரு அற்புதமான ஷேக் பற்றி காணவுள்ளோம். இந்த ஷேக், உங்கள் வயிற்றை குறைந்தது 4 மணி நேரமாவது நிறைவாக வைத்திருப்பதோடு, உங்கள் எடையையும் வேகமாக குறைக்கும். இந்த அற்புதமான ஷேக்கை எப்படி செய்வது என காணலாம். 


மேலும் படிக்க | Vitamin B12: அசைவம் சாப்பிட வேண்டிய அவசியமே இல்லை... சைவத்திலேயே கொட்டிக்கிடக்கு!


இந்த விதைகளை இரவில் ஊறவைக்கவும்


இந்த ஷேக் செய்ய, முதலில், 2 ஸ்பூன் சியா விதைகள் அல்லது சப்ஜா விதைகளை இரவில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில், கீழே குறிப்பிட்டுள்ளவற்றில் இந்த ஊறவைத்த விதைகளை கலந்து குடிக்கவும்.


கொழுப்பு இழப்பு ஷேக் செய்வது எப்படி? 


- 1-வாழைப்பழம்
- 2-பாதாம்
- 2 அக்ரூட் பருப்புகள்
- 10 முதல் 12 மக்கானா
- விதைகளை நீக்கிய 2 பேரீச்சம்பழங்கள்
- 1 டீஸ்பூன் எள்
- 1 டீஸ்பூன் ஆளி விதை
- 1 தேக்கரண்டி பூசணி விதைகள்
-1 தேக்கரண்டி ஊறவைத்த கொண்டைக்கடலை
- 1 தேக்கரண்டி வறுத்த வேர்க்கடலை . 


இவை அனைத்தையும் ஸ்கிம்ட் பாலில் கலக்கவும். இப்போது அதில் இரவு ஊறவைத்த விதைகளை கலந்து பருகவும். 


தினமும் காலை இந்த ஷேக்கை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதை குடித்த பிறகு, குறைந்தது 2 லிட்டர் தண்ணீரை சிறிய இடைவெளி விட்டு அவ்வப்போது குடிக்க வேண்டும். இப்படி செய்தால், ஒரு மாதத்தில், உங்கள் இடுப்பு மற்றும் வயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்பு குறைந்து எடையும் குறைந்தது 4 கிலோ குறையும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | தினமும் தேன் உண்பவரா? அப்படியானால் இந்த 6 விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ