Vitamin B12: அசைவம் சாப்பிட வேண்டிய அவசியமே இல்லை... சைவத்திலேயே கொட்டிக்கிடக்கு!

Vitamin B12 In Veg Foods: வைட்டமின் பி-12 சத்துக்களைப் பெற இறைச்சி, முட்டை போன்ற அசைவ உணவை சாப்பிட வேண்டும் என்பதில்லை, சில சைவ உணவுப்பொருள்களிலும் அவை இருக்கின்றன. அதுகுறித்து இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Aug 14, 2023, 09:37 PM IST
  • வைட்டமின் பி-12 உதவியால் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.
  • இது ஃபோலிக் அமிலத்தின் ஓட்டத்திற்கு உதவுகிறது.
  • இதன் குறைபாடு மனநல கோளாறுக்கும் வழிவகுக்கும்.
Vitamin B12: அசைவம் சாப்பிட வேண்டிய அவசியமே இல்லை... சைவத்திலேயே கொட்டிக்கிடக்கு! title=

Vitamin B12 In Veg Foods: வைட்டமின் பி-12 நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். இதன் அளவு உடலில் குறைவாக இருந்தால், அது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது என மருத்துவத்துறையில் கூறப்படுகிறது. 

வைட்டமின் பி-12 உதவியுடன், உடலில் சிவப்பு இரத்த அணுக்கள் உருவாகின்றன என தெரிவிக்கப்படுகிறது. மேலும் இது ஃபோலிக் அமிலத்தின் ஓட்டத்திற்கு உதவுகிறது எனவும் கூறப்படுகிறது. இந்த வைட்டமின் குறைபாடு மனநல கோளாறுகள், எலும்பு மற்றும் மூட்டு வலியை ஏற்படுத்தும் என தெரிகிறது. 

பொதுவாக இந்த சத்து இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்றவற்றில் காணப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்காக சைவ உணவை மட்டும் உண்பவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. சில சைவ உணவுகளை சாப்பிடுவதன் மூலமும் வைட்டமின் பி-12 சத்துக்களைப் பெறலாம். அந்த வகையில், வைட்டமின் பி-12 உள்ள சில சைவ உணவுகளை இங்கு காணலாம். 

மேலும் படிக்க | எச்சரிக்கை! ஆர்வக் கோளாறில் அதிக விட்டமின் மாத்திரைகள் சாப்பிடுவது பேராபத்து!

வைட்டமின் பி-12 நிறைந்த சைவ உணவுகள்

1. ப்ரோக்கோலி

பச்சை காய்கறிகள் என்று வரும்போது, ப்ரோக்கோலி டாப் லிஸ்டில் வந்துவிடும். இது ஒரு சூப்பர் ஃபுட்டிற்கு குறைவானது இல்லை. வைட்டமின் பி 12 உடன், ஃபோலிக் அமிலமும் இதில் காணப்படுகிறது. இதன் காரணமாக உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது மற்றும் உங்களுக்கு இரத்த சோகையால் பாதிப்பு ஏற்படாதவாறு நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.

2. சோயா பொருட்கள்

அசைவ உணவுகளை உங்களால் சாப்பிட முடியாவிட்டால், சோயா உங்களுக்கு வைட்டமின் பி-12 நிறைந்த சைவ உணவின் ஆதாரமாக இருக்கும். சோயாபீன், சோயா பால் மற்றும் டோஃபு உள்ளிட்ட சோயா தயாரிப்புகளை நீங்கள் சாப்பிட வேண்டும்.

3. ஓட்ஸ்

ஓட்ஸ் மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள், மக்கள் இதை காலை உணவாக அடிக்கடி சாப்பிட விரும்புகிறார்கள், வைட்டமின் பி-12 இதில் உள்ளது. இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது, அதே போல் உடல் எடையை குறைப்பவர்களும் ஓட்ஸை உட்கொள்கிறார்கள். 

4. தயிர்

தயிர் மிகவும் பயனுள்ள உணவு. இதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. வைட்டமின் பி-12 உடன் வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் பி2 ஆகியவையும் தயிரில் உள்ளன. குறைந்த கொழுப்புள்ள தயிரை அதிகம் சாப்பிட்டால் உடல் நலத்திற்கு நல்லது

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பச்சையாக வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News